மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

குங்பூ: வெளிநாட்டினருக்குக் கற்றுத்தரும் நம்ம ஊர்க்காரர்!

சீன நாட்டின் தற்காப்புக் கலைகளில் ஒன்று குங்பூ. குங்பூ கலையில் இருக்கும் சண்டைப் போக்கு ஸ்டைல் மிகவும் சிக்கலானது, கடினமானது என்றாலும்  இன்று இக்கலை தமிழகத்திலும் பிரபலமடைந்திருக்கிறது.

News image
Updated On :15 அக்டோபர் 2019, 11:26 am

சி.வ.சு.ஜெக​ஜோதி​


சீன நாட்டின் தற்காப்புக் கலைகளில் ஒன்று குங்பூ. குங்பூ கலையில் இருக்கும் சண்டைப் போக்கு ஸ்டைல் மிகவும் சிக்கலானது, கடினமானது என்றாலும் இன்று இக்கலை தமிழகத்திலும் பிரபலமடைந்திருக்கிறது. 

இக்கலையை  சிறப்பாகக் கற்றுக்கொண்டு, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்று, கடந்த 1991 ஆம் ஆண்டு தேசிய வீரராக வெற்றி பெற்ற காஞ்சிபுரத்துக்கு அருகே உள்ள கிராமத்தில் வாழும் இளைஞர்  ஒருவர்,  இன்று பல வெளிநாடுகளுக்கும் சென்று, அங்கு உள்ள இளைஞர்களுக்கு குங்பூ கலையைக் கற்றுக் கொடுத்து  வருகிறார்.

காஞ்சிபுரம் அருகேயுள்ள  சாலவாக்கம் என்ற சின்னஞ்சிறு கிராமத்தில் வசித்து வரும் மல்லை.சத்யா தான் அவர்.  அவர் ம.தி.மு.க.வைச் சேர்ந்தவர்  என்பது எல்லாருக்கும் தெரிந்திருந்தாலும் அவருடைய "குங்பூ முகம்'  பலரும் அறியாதது. 
பிரான்ஸ் நாட்டின் தலைமைக் கமாண்டர் மேத்யூ,  இவருக்கு "சிறந்த பயிற்சியாளர்', "குங்பூ கலையில் சிறந்த நடுவர்'  ஆகிய  விருதுகளை  வழங்கி மல்லை.சத்யாவைக் கௌரவித்திருக்கிறார்.

""பிரான்ஸ், மலேசியா, கொரியா போன்ற நாடுகளில் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு இக்கலையைக் கற்றுக் கொடுத்துள்ளேன். அடுத்த மாதம் தென்ஆப்பிரிக்க இளைஞர்களது அழைப்பின் பேரில் அங்கு சென்று அங்கேயே தங்கியிருந்து இக்கலையைக் கற்றுக் கொடுக்க உள்ளேன். வாள், கத்திச்சண்டைகள்,செயின் சுற்றுதல், துங்பா குச்சிக்கம்பு, மான் கொம்பு சுற்றுதல்,சிலம்பம் ஆகியன உட்பட மொத்தம் 65-க்கும் மேற்பட்ட ஆயுதங்களை எவ்வாறு சுழற்றி நம்மை தற்காத்துக் கொள்வது என்றும் கற்றுக் கொடுத்து வருகிறேன்.   இந்தியாவிலும் ஏராளமான இளைஞர்களுக்கு தேவைப்படும் இடங்களுக்கு சென்று இக்கலையின் மகத்துவங்களைக் கற்றுத் தந்து வருகிறேன்'' என்கிறார் மல்லை.சத்யா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.