மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

வெற்றிக்கான வழி: எது தேவையோ... அதைச் செய்வது!

மழைக்காலத்தில் உப்பு விற்பனை செய்ய போய் வீணான கதைகளும், காற்றடிக்கும் காலத்தில் பஞ்சு விற்க போனவர்களும் ஜெயிக்க முடியாது என்பதை பல தமிழ் சினிமாப் பாடல்கள் நமக்கு உணர்த்தியுள்ளன.

News image
Updated On :7 ஏப்ரல் 2020, 12:43 pm

வி.குமாரமுருகன்

மழைக்காலத்தில் உப்பு விற்பனை செய்ய போய் வீணான கதைகளும், காற்றடிக்கும் காலத்தில் பஞ்சு விற்க போனவர்களும் ஜெயிக்க முடியாது என்பதை பல தமிழ் சினிமாப் பாடல்கள் நமக்கு உணர்த்தியுள்ளன.

பொருத்தமில்லாத காலங்களில், தேவையின்றி உழைப்பினைக் கொடுத்தாலும் கூட லாபம் ஈட்ட முடியாது என்பதை பலரின் வாழ்க்கையிலிருந்து நம்மால் கற்றுக் கொள்ள முடியும். 

அத்தகைய போக்கை விட்டு விட்டு, யாருக்கு எது தேவை? எந்த நேரத்தில் எதைச் செய்தால் வெற்றி கிடைக்கும்... எதில் முதலீடு செய்தால் லாபம் ஈட்டலாம்... இந்த நேரத்தில் எது மக்களால் அதிகஅளவில் விரும்பப்படுகிறது... எதற்கு அதிக டிமாண்ட் உள்ளது என்பன போன்ற தரவுகளைச் சேகரித்து புதிய சிந்தனைகளுடன் தொழில் தொடங்குபவர்களால் மட்டுமே பெரும் தொழிலதிபர்களாக உருவாக முடியும். 

அப்படி  சூழ்நிலையை உணர்ந்து வெற்றி பெற்று வருகின்றனர் சகோதரர்கள் இருவர். குருகிராம்மைச் சேர்ந்த சகோதரர்கள்தான் அத்தகைய சாதனைக்குச் சொந்தக்காரர்கள்.   30 வயதான கௌரவ்கத்ரி பிலிப்பைன்ஸில் கமர்ஷியல் பைலட் பயிற்சியை முடித்தவர். ஆனால், அவருக்கு தொழிலதிபர் ஆக வேண்டும் என்பதுதான் மிக பெரிய ஆசையாக இருந்து வந்தது. பைலட் பயிற்சியை முடித்த அவர் தேடலில் இறங்கினார். எத்துறையில் கால் பதித்தால் லாபம் ஈட்ட முடியும் என்பது குறித்து அலசி ஆராய்ந்தார். 

அப்போதுதான் ஃப்ளிப்கார்ட்டிலும் அமேஸான் இந்தியாவிலும் ஸ்மார்ட் ஃபோன்கள், ஸ்மார்ட் ஃபோன் கவர்கள், ப்ளூடூத் இயர் ஃபோன்கள் முதலான எலக்ட்ரானிக்ஸ் பொருள்களின் விற்பனை அமோகமாக இருப்பதை அவர் தெரிந்து கொண்டார்.  இது போன்ற பல இ-காமர்ஸ் தளங்களிலும் ஸ்மார்ட் ஃபோன்களின் விற்பனையும், அவற்றின் உதிரி பாகங்கள் விற்பனையும் அதிக அளவில் இருப்பதையும் அவர் தெரிந்து கொண்டார். 

இந்த தெரிதல் அவருக்கு இத்துறையின் மீது ஆர்வத்தை ஏற்படுத்தியது. இது குறித்து அவரது சகோதரர் அமீத்திடம் ஆலோசனை மேற்கொண்டார். அமீத் ஃபேஷன் துறையைச் சேர்ந்தவர். இருவரும் கலந்து பேசி ஸ்மார்ட் ஃ போன் கவர்கள் பிரிவில் நல்ல முதலீட்டு வாய்ப்புகள் இருப்பதை தெரிந்து அதில் முதலீடு செய்ய தீர்மானித்தனர். 

Story image

இதையடுத்து, ரூ.7.18 கோடியுடன் "நாய்ஸ்' (சர்ண்ள்ங்) எனும் நிறுவனத்தை 2014- இல் அவர்கள் தொடங்கினர்.  சர்ண்ள்ங்  நிறுவுநர்கள் கௌரவ்வும், அமீத்தும் சீன தொழிற்சாலைகளுடன் ஒப்பந்தம் செய்துகொண்டு, ஸ்மார்ட் ஃபோன் கவர்களைத் தயாரித்து இந்தியாவில் விற்பனை செய்தனர். இவர்களது முதல் முயற்சியே மகத்தான வெற்றி கண்டது. நிறுவனம் தொடங்கிய முதல் சில ஆண்டுகளில் மொபைல் ஆக்ஸசரீஸ் விற்பனையில் "நாய்ஸ்' சிறப்பிடம் பெற்றதாக கூறுகிறார் கௌரவ். 

""ஆனால், இந்தக் களத்தில் "நாய்ஸ்' மட்டுமே இல்லை. நல்ல சந்தைப் போக்கு நிலவியதால், ஏராளமானோர் இச்சந்தையில் நுழைந்தனர். இதனால், தரமற்ற பிராண்டுகளின் வருகை கூடியது. கச்சிதமற்ற சின்னச் சின்ன நிறுவனங்களும் உள்ளே புகுந்ததால், பல பிராண்ட் நிறுவனப் பொருள்களின் விலையும் கடும் சரிவைச் சந்தித்தன. இதனால், எங்கள் நிறுவனத்துக்கும் பாதிப்பு ஏற்பட்டது. எங்களின் நிகர லாபம் பெருமளவு பாதிக்கப்பட்டதுடன் இழப்புகளையும் எதிர்கொள்ள நேர்ந்தது'' எனக்கூறும் இவர்கள், ஸ்மார்ட் வேரபில்ஸ் மற்றும் ப்ளூடூத் இயர்போன்கள் விற்பனை செய்வது குறித்து ஆய்வு மேற்கொண்டனர். 

2018-இல் ஸ்மார்ட் வேரபில்ஸ் மற்றும் ப்ளூடூத் இயர்போன்கள் விற்பனையையும் தங்களது பட்டியலில் இணைத்தனர். உயர்தர வசதிகளுடன், வாங்கத் தக்க விலையில், நல்ல தரமான ஸ்மார்ட் வேரபில்ஸ் மற்றும் ப்ளூடூத் இயர் போன்களை மக்களுக்கு வழங்க வேண்டும் என்ற லட்சியத்துடன், சீனாவில் பெரிய அளவில் ஒரிஜினல் டிசைன் தொழிற்சாலைகளுடன் கரம் கோர்த்தனர். 

""மொத்த விற்பனைக்காக மிகப் பெரிய அளவில் உதிரிப் பாகங்களைத் தயாரிக்கும் சீன நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்தது நிறுவனத்திற்கு நல்ல பலனைத் தந்தது'' எனக்கூறும் கௌரவ், ""உலகப் புகழ்பெற்ற பிராண்டுகளுக்காக நல்ல தரமான பொருள்களைத் தயாரித்து வழங்கவே விரும்பினோம். இதற்காக, சிறந்த நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட்டோம். இதன் மூலம் தயாரிப்புச் செலவு குறைந்து, தரமான தயாரிப்புகளையும் விற்பனை செய்ய முடிந்தது''  என்கிறார். 

""இதற்காக நாங்கள் பிரத்யேக டிசைன் டீம்களை வைத்துள்ளோம். உற்பத்தி செய்யப்பட்ட தயாரிப்புகள் இந்தியாவுக்குக் கொண்டு வரப்பட்டு, மற்ற பிராண்டுகள் நிர்ணயித்திருக்கும் விலையைவிட குறைந்த விலையில் எங்களது பொருள்கள் சந்தையில் விற்கப்படுகின்றன. அதேநேரத்தில், பிரபலமான பிராண்டுகளில் இருக்கக்கூடிய அனைத்து அம்சங்களும் எங்களது பொருள்களிலும் இருப்பதை உறுதி செய்துகொள்கிறோம்'' என்கின்றனர் இருவரும். 

ஜேபிஎல், ஜாப்ரா, சென்ஹெய்ஸர், சோனி, ரியல்மீ மற்றும் அமேஸ்ஃபிட் ஆகியவை பிரபலமான போட்டியாளர்களாக உள்ளனர். இந்த நிலையில், தங்களது புதிய தயாரிப்புகளுக்கு வாடிக்கையாளர்களிடம் இருந்து ஃபீட்பேக் வாங்குவது, ஒவ்வொரு மாதமும் புதிய தயாரிப்புகளை வெளியிடுவது, சலுகைகளை உயர்த்துவது போன்ற நடவடிக்கைகள் மூலம் போட்டியாளர்களை எதிர்கொள்வதாகச் சொல்கிறார் கௌரவ். இந்தியாவில் 2018- இல் "நாய்ஸ்' நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட "ட்ரூலி ஒயர்லெஸ் ப்ளூடூத் இயர்போன்கள்' மக்களிடம் அதிக வரவேற்பைப் பெற்றன. அவர்களுக்கு முன்பே போஸ், ஆப்பிள் மற்றும் ஜாப்ரா ஆகிய நிறுவனங்கள் இந்த சந்தையில் தடம் பதித்தனர். ஆனால், அவர்களுடைய தயாரிப்புகளின் விலை மிக மிக அதிகம். 

""நாங்கள் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு தரமான தயாரிப்புகளை குறைந்த விலையில் தருகிறோம்'' என்கின்றனர். 

"நாய்ஸ்' நிறுவனத்திற்கு தற்போது 10 லட்சம் வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள். ஒவ்வொரு நிமிடத்திலும் 4 பொருள்கள் ஆர்டர் செய்யப்படுகின்றன.  ட்ரூலி ஒயர்லெஸ் ப்ளூடூத் இயர்போன்கள் மற்றும் ஸ்மார்ட் வேரபில்ஸ் பிரிவில் இவர்கள் முன்னணி பிராண்டாக உருவெடுத்திருக்கிறார்கள். 

ஒவ்வொரு மாதமும் ரூ.25 கோடி அளவில்  விற்பனை நடைபெறுகிறது.   சிறு கடைகள் மற்றும் பெரிய  ஸ்டோர்கள் மூலம் ஆஃப்லைனிலும் விற் பனை நடந்து வருகிறது. ஆஃப்லைன் விற்பனையைத் தொடங்கி ஏழு மாதங்கள் தான் ஆகின்றன. அதற்குள் இவர்கள் மொத்த வருவாயில் 10 சதவீதத்தை ஆஃப் லைன் தந்துவிட்டது. 

""இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் ஆஃப்லைன் விற்பனையை விரிவுப்படுத்தத் திட்டமிட்டிருக்கிறோம். எங்களது நிறுவனத்தை மென்மேலும் விரிவுப்படுத்த, நாட்டிலுள்ள மிகப் பெரிய ரீடெயில் ஸ்டோர்களுடன் கரம் கோக்க திட்டமிட்டிருக்கிறோம். ஆன்லைன் - ஆஃப்லைன் ஆகிய இரு சந்தைகளிலும் இன்னும் தீவிரமாக செயல்படப்போகிறோம். நாய்ஸ் நிறுவனத்தின் ஆண்டு நிகர விற்பனையை ரூ.500 கோடியாக உயர்த்த விரும்புகிறோம்'' என்கிறார் கௌரவ். இடம் பார்த்து தடம் பதித்தால் வெற்றியை எளிதில் தொட்டு விடலாம் என்பதற்கு இந்த சகோதரர்களே சாட்சி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.