தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

வாட்ஸ்ஆப்... குறைந்து வரும் வீடியோ நேரம்!

வாட்ஸ்ஆப் பயன்பாட்டாளரின் மனநிலையைப் பிரதிபலிக்கும் "ஸ்டேட்டஸ் வீடியோ'வின் கால அளவு பாதியாக குறைக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் ஏற்பட்டுள்ள கரோனாவின் தாக்கத்தால் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கும்

News image
Updated On :7 ஏப்ரல் 2020, 2:13 pm

அ. சர்ஃப்ராஸ்


வாட்ஸ்ஆப் பயன்பாட்டாளரின் மனநிலையைப் பிரதிபலிக்கும் "ஸ்டேட்டஸ் வீடியோ'வின் கால அளவு பாதியாக குறைக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் ஏற்பட்டுள்ள கரோனாவின் தாக்கத்தால் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கும் கோடிக்கணக்கான வாட்ஸ்ஆப் பயன்பாட்டாளர்கள், வாட்ஸ்ஆப்பில் அதிகமான நேரத்தைச் செலவிடுகின்றனர். இதனால் சர்வர்களின் நெருக்கடியைக் குறைக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுதிறது.

இந்தக் கட்டுப்பாடு இந்தியாவில் மட்டும் அமல்படுத்தப்பட்டுள்ளது என வாட்ஸ் ஆப் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்கு இந்தியாவில் மட்டும் 40 கோடிக்கும் அதிகமான வாட்ஸ்ஆப் பயன்பாட்டாளர்கள் இருப்பதே முக்கிய காரணமாகும். வாட்ஸ்ஆப் தொடங்கப்பட்டபோது 90 நொடிகளாக இருந்த ஸ்டேட்டஸ் வீடியோவின் கால அளவு பின்னர் 30 நொடிகளாகக்  குறைக்கப்பட்டது. தற்போது மீண்டும் 15 நொடிகளாக குறைக்கப்பட்டுள்ளது. அவ்வப்போது ஸ்டேட்டûஸ அப்டேட் செய்யும் இளைஞர்களுக்கு இது கசப்பான செய்தியாகும்.

இதேபோல், வாட்ஸ்ஆப்பில் அனுப்பப்படும் தகவல்கள் தானாகவே அழியும் சேவையையும் தொடங்கும் பணியில் அந்த நிறுவனம் மும்முரமாக ஈடுபட்டுள்ளது. தற்போது ஒருவர் அனுப்பிய தகவலை உடனடியாக அழிக்கும் சேவை "டெலிட் பார் எவரிஒன்' உள்ளது. இதன் அடுத்தகட்டமாக, தகவல் அனுப்பியவருக்கும், பெற்றவருக்கும் தானாக அழியும் வகையில் "எக்ஸ்பைரி மெசேஜஸ்' என்ற சேவை விரைவில் அமல்படுத்தப்பட உள்ளது. இந்த சேவை வந்துவிட்டால் வாட்ஸ்ஆப்பில் குவியும் ஏராளமான தகவல்களை அழிக்க நேரம் செலவிட வேண்டியிருக்காது. அதே நேரத்தில் முக்கிய தவல்களும் இதில் அழிந்து
விடும் அபாயமும் உள்ளது. மேலும், ஒரு வாட்ஸ்ஆப் கணக்கை டேப்லேட் போன்ற பல்வேறு டிஜிட்டல் பொருள்களில் பயன்படுத்தும் சேவையும் விரைவில் அறிமுகமாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.