பொய்ச் செய்திகளைக் கண்டுபிடிக்க புதிய முயற்சி!
உலகம் முழுவதும் கரோனா நோய்த் தொற்று வேகமாகப் பரவி வரும் சூழலில், வீட்டில் முடங்கிக் கிடக்கும் கோடிக்கணக்கான மக்களின் ஸ்மார்ட் போன்களில் பொய்ச் செய்திகள் அதைவிட வேகமாகப் பரவி வருகின்றன.


உலகம் முழுவதும் கரோனா நோய்த் தொற்று வேகமாகப் பரவி வரும் சூழலில், வீட்டில் முடங்கிக் கிடக்கும் கோடிக்கணக்கான மக்களின் ஸ்மார்ட் போன்களில் பொய்ச் செய்திகள் அதைவிட வேகமாகப் பரவி வருகின்றன.
இதைத் தடுக்க பலமுறை பகிரப்பட்ட தகவலை ஒரு முறை மட்டும் பகிரும் கட்டுப்பாட்டை வாட்ஸ் ஆப் கொண்டு வந்தது. எனினும், பொய்ச் செய்திகள் எவை எனக் கண்டறிவது என்பது பெரும் சவாலாகவே இருந்து வருகிறது. உச்சநீதிமன்றத்தையும், காவல் துறையையும் கூட இந்த பொய்ச் செய்திகள் விட்டு வைப்பதில்லை.
அதிலும், முழு ஊரடங்கு உத்தரவு குறித்த அரசு அறிவிப்புகள் சமூக வலைதளங்களில் நாளுக்கு நாள் பொய்ச் செய்திகளாகவே அதிகமாக உலா வந்த வண்ணம் உள்ளன. இதைத் தடுக்க, மத்திய அரசு வாட்ஸ் ஆப் நிறுவனத்துடன் கைகோர்த்து புதிய வழிமுறையைக் கையாண்டுள்ளது.
மத்திய அரசின் உத்தரவுகள் தொடர்பான செய்திகளின் உண்மைத் தன்மையை அறிய இந்திய பத்திரிகை தகவல் மையம் (பிஐபி) pibfactcheck@gmail.com என்ற இ-மெயில் முகவரியையும், +918799711259 என்ற வாட்ஸ் ஆப் எண்ணையும் அறிமுகம் செய்துள்ளது. கரோனா தொடர்பாக மத்திய அரசின் அறிவிப்புகளை இந்த இ-மெயிலுக்கோ அல்லது வாட்ஸ் ஆப் எண்ணுக்கோ அனுப்பி உண்மைத் தன்மையைத் தெரிந்து கொள்ளலாம்.
இதேபோன்று https://factcheck.pib.gov.in என்ற இணையதளத்தில் சென்று உங்கள் இ-மெயிலைப் பதிவிட்டு உள்ளே நுழைந்து தகவலையோ, செய்திகளையோ, புகைப்படங்களையோ பதிவேற்றம் செய்து அதன் உண்மைத் தன்மையை அறிந்து கொள்ளலாம். இதையடுத்து, அந்த செய்தியை "பொய்' என முத்திரையிட்டு "பிஐபி ஃபேக்ட் செக்' (#PIBFactCheck) வெளியிடும். மத்திய அரசின் இந்த முயற்சி தற்போதைய சூழ்நிலையில் வரவேற்கத்தக்கது.
பொய்ச் செய்திகளைக் கண்டுபிடிக்க வாட்ஸ் ஆப், ஃபேஸ் புக், கூகுள் போன்ற முன்னணி நிறுவனங்கள் கடந்த மக்களவைத் தேர்தலின்போது எடுத்த முயற்சிகள் தோல்வியில் முடிந்ததால் தற்போது அவை புதிய ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...