இணைய வழி கட்டுரைப் போட்டி!

சர்வதேச உயிரிப்பல்வகைமை தினத்தை ஒட்டி தமிழ்நாடு உயிர்ப்பல்வகைமை வாரியம் (தமிழக அரசின் சட்டமுறைப்படி தன்னாட்சி பெற்ற ஒழுங்கு
இணைய வழி கட்டுரைப் போட்டி!


சர்வதேச உயிரிப்பல்வகைமை தினத்தை ஒட்டி தமிழ்நாடு உயிர்ப்பல்வகைமை வாரியம் (தமிழக அரசின் சட்டமுறைப்படி தன்னாட்சி பெற்ற ஒழுங்கு முறைப்படுத்தும் அமைப்பு) இணையவழி கட்டுரைப் போட்டியை அறிவித்துள்ளது. 

சர்வதேச உயிரிப் பல்வகைமை தினம் மே 22- ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதை ஒட்டி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இணையவழியில் கட்டுரைப் போட்டி நடைபெறுகிறது.
8-ஆம் வகுப்பு மாணவர்கள்  முதல் 10- ஆம் வகுப்பு மாணவர்கள் வரை "பறவைகளோடு என் உரையாடல்' என்ற தலைப்பில் கட்டுரை எழுதி அனுப்பலாம். 

11-ஆம் வகுப்பு  மற்றும் 12- ஆம் வகுப்பு மாணவர்கள் "மரங்களே நம் கருவூலம்' என்ற தலைப்பில் கட்டுரைகளை அனுப்பலாம். இவ்விரண்டு பிரிவுகளிலும் முதல் பரிசாக  ரூ.2500, இரண்டாம் பரிசாக ரூ.1,500, மூன்றாம் பரிசாக ரூ.1000  வழங்கப்படும். 

இளங்கலைப் பட்டப்படிப்பு மாணவர்கள் "நீர்நிலை இல்லா உலகம்' என்ற தலைப்பிலும், முதுகலைப் பட்டப்படிப்பு மாணவர்கள் "பசுமை நகரம் ஓர் எட்டக் கூடிய கனவு' என்ற தலைப்பிலும் கட்டுரைகளை அனுப்பலாம். இரு பிரிவிலும் முதல் பரிசாக  ரூ.5000, இரண்டாம் பரிசாக ரூ.3000, மூன்றாம் பரிசாக ரூ.2000 வழங்கப்படும். 

அதுபோன்று,  தமிழகத்தைச் சார்ந்த பொதுமக்களும் இதில் கலந்து கொள்ளலாம். அவர்கள் "மனித- வனவிலங்கு முரண்பாடு:  காரணங்கள் மற்றும் தீர்வுகள்' என்ற தலைப்பில் கட்டுரைகளை அனுப்பலாம். முதல் பரிசாக ரூ.5000, 
இரண்டாம் பரிசாக ரூ.3000,  மூன்றாம் பரிசாக ரூ.2000 வழங்கப்படும். 

கட்டுரைகள் அனைத்தும் மே 30 மாலை 5 மணிக்குள் அனுப்பப்பட வேண்டும். தமிழ் மற்றும் ஆங்கிலக் கட்டுரைகள் தனித்தனியே மதிப்பீடு செய்யப்படும். 2500 வார்த்தைகளுக்கு மிகாமல் கட்டுரைகள் எழுதப்பட வேண்டும். கட்டுரைகள் சுயமாக எழுதப்படவேண்டும். நகல் எடுக்கப்பட்ட கட்டுரைகள் தகுதி நீக்கம் செய்யப்படும். 

கட்டுரைகளை secy.tnbb@tn.gov.in என்ற இணைய முகவரிக்கு அனுப்பலாம். பரிசு 
பெற்றவர்கள் விவரம் www.forests.tn.gov.in  என்ற இணையதளத்தில் ஜூன் மாதம் எட்டாம் தேதி மாலை வெளியிடப்படும் என்று  அறிவிக்கப் பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com