பிழையில்லாமல் தமிழ்... உதவும் இணையதளம்!

தமிழ் மொழிக்கான பிழை திருத்தி, சந்திப்பிழை திருத்தி, ஒருங்குறி மாற்றி, தொகுப்பகராதி, எழுத்தாய்வுக் கருவி, பல்குறியீட்டு எழுதி,விக்கி உருமாற்றி உள்ளிட்ட தமிழ் மொழியினை மேம்படுத்தும் சில கருவிகளையும்
பிழையில்லாமல் தமிழ்... உதவும் இணையதளம்!

தமிழ் மொழிக்கான பிழை திருத்தி, சந்திப்பிழை திருத்தி, ஒருங்குறி மாற்றி, தொகுப்பகராதி, எழுத்தாய்வுக் கருவி, பல்குறியீட்டு எழுதி,விக்கி உருமாற்றி உள்ளிட்ட தமிழ் மொழியினை மேம்படுத்தும் சில கருவிகளையும், செயலிகளையும் உருவாக்கி, அவற்றைக் கணினியிலும் இணையத்திலும் பயன்படுத்தக்கூடியதாக நீச்சல்காரன் இணையதளம் (http://www.neechalkaran.com/) இலவசமாக வழங்கி வருகிறது.  அவற்றைப் பற்றி விரிவாகப் பார்ப்போம். 

http://dev.neechalkaran.com/naavi எனும் இணைய முகவரியில் நாவி எனும் சந்திப்பிழை திருத்தும் கருவி இடம் பெற்றிருக்கிறது. இந்தப் பக்கத்தில் தோன்றும் காலிப்பெட்டியினுள் தமிழ் மொழியிலான உரையினை உள்ளீடு செய்து, கீழே தோன்றும் பெட்டியில் சுட்டிக்காட்டப்படும் சொற்களுக்கேற்ற பரிந்துரைகளைப் பயன்படுத்தி, தமிழ் உரையினைச் சந்திப்பிழையின்றி மேம்படுத்திக் கொள்ளலாம்.  

http://vaani.neechalkaran.com எனும் இணைய முகவரியில் வாணி எனும் பிழை திருத்தும் கருவி தரப்பட்டிருக்கிறது. இங்கு தமிழ் உரையினை உள்ளீடு செய்தால், சந்திப்பிழை, எழுத்துப்பிழை, புணர்ச்சிப்பிழை, தட்டுப்பிழை என்று உரையில் இருக்கும் பல்வேறு பிழைகள் சுட்டிக்காட்டப்படுகின்றன. இந்தப் பிழைகளைத் திருத்தம் செய்வதற்கான பரிந்துரைகளும் வழங்கப்படுகின்றன. இந்தப் பரிந்துரைகளைப் பயன்படுத்தி, உரையில் தேவையான மாற்றங்களைச் செய்து உரையினைப் பிழையின்றி மேம்படுத்திப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.  

http://vaani.neechalkaran.com   எனும் இணைய முகவரியில் ஓவன் ஒருங்குறி மாற்றி எனும் கருவி இடம் பெற்றிருக்கிறது. இந்தக் கருவியின் வழியாக, தமிழ் மொழியில் உருவாக்கப்பட்ட 45 வகையிலான விசைப்பலகையில் செயல்படும் எழுத்துருக்களை ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு எளிதாக மாற்றிக் கொள்ள முடியும். இந்தக் கருவியின் மூலம், எழுத்தாளர்கள், புத்தக வெளியீட்டாளர்கள், தமிழ்த்துறைப் பேராசிரியர்கள் உள்ளிட்டோர், கணினியில் தட்டச்சு செய்து சேமித்து வைத்திருக்கும் தங்களது முந்தைய படைப்புகளை எளிதாக மற்றொரு எழுத்துருக்கு மாற்றிக் கொள்ள முடியும். 

http://apps.neechalkaran.com/oovan  எனும் இணைய முகவரியில் ஓவன் ஒருங்குறி மாற்றி எனும் கருவி இடம் பெற்றிருக்கிறது. இந்தக் கருவியின் வழியாக, தமிழ் மொழியில் உருவாக்கப்பட்ட 45 வகையிலான விசைப்பலகையில் செயல்படும் எழுத்துருக்களை ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு எளிதாக மாற்றிக் கொள்ள முடியும். இந்தக் கருவியின் மூலம், எழுத்தாளர்கள், புத்தக வெளியீட்டாளர்கள், தமிழ்த்துறைப் பேராசிரியர்கள் உள்ளிட்டோர், கணினியில் தட்டச்சு செய்து சேமித்து வைத்திருக்கும் தங்களது முந்தைய படைப்புகளை எளிதாக மற்றொரு எழுத்துருக்கு மாற்றிக் கொள்ள முடியும். 

தமிழ் மொழியிலான உரையில் இடம் பெற்றிருக்கும் எழுத்து, சொல், அடிச்சொல் குறித்த ஆய்வுகளைச் செய்ய உதவும் இணையச் செயலியாக சுளகு எனும் எழுத்தாக்கக் கருவி ஒன்று http://apps.neechalkaran.com/sulaku  எனும் இணைய முகவரியில் தரப்பட்டிருக்கிறது. இதன் மூலம், அகரவரிசைப்படுத்தல், சொல் எண்ணிக்கை போன்ற கூடுதல் வசதிகளையும் பெற முடியும். 

தமிழ் மொழியிலிருக்கும் பல எழுத்துருவைக் கொண்டு, ஓர் எழுத்துரு போன்ற பிம்பத்தை உருவாக்கும் முறையில், தமிழில் வனப்பெழுத்துகள் கொண்டு எழுத உதவும் கருவியாக, மென்கோலம் - பல்குறியீட்டு எழுதி எனும் கருவி ஒன்று http://dev.neechalkaran.com/ascii-tamil எனும் இணைய முகவரியில் தரப்பட்டிருக்கிறது. இதனைப் பயன்படுத்தி இணையப் பக்க வடிவமைப்புக்கேற்ற புதிய தமிழ் எழுத்துருக்களை உருவாக்கிக் கொள்ள முடியும்.  

தமிழ் உள்ளடக்கங்களில் உள்ள எழுத்துப்பிழை, தட்டுப்பிழை, புணர்ச்சிப்பிழை, சந்திப்பிழை முதலியவற்றை அறிக்கையாகக் கொடுக்கும் இணையச் செயலியாக "நோக்கர்' எனும் செயலி http://apps.neechalkaran.com/nokkar எனும் இணைய முகவரியில் தரப்பட்டிருக்கிறது. இதன் மூலம் உரைகளில் இருக்கும் பிழைகளை மட்டும் அறிந்து கொள்ள முடியும்.   

இதே போன்று, "வாணி தொகுப்பகராதி' எனும் செயலி ஒன்று http://vaani.neechalkaran.com/word எனும் இணைய முகவரியில் தரப்பட்டிருக்கிறது. இங்கு உதாரணமாக, "அம்மாவிடம்' அல்லது "அம்மாவினால்' என்று கொடுத்தால், அதன் வேர்ச்சொல்லினைப் புரிந்து அம்மா என்ற சொல்லுக்குப் பல அகராதிகளிலிருந்து பொருளை எடுத்துக்காட்டும்.  

http://oss.neechalkaran.com எனும் இணைய முகவரியில், தமிழில் உள்ள மென்பொருட்கள், செயலிகள், எழுத்துருக்கள், இணையதளம் மற்றும் கலைச்சொற்கள் போன்றவைகளை கிட்ஹப் புள்ளி எனும் பெயரில் கட்டற்ற முறையில் தொகுத்துத் தரப்பட்டிருக்கிறது.  

தமிழ் மொழியினை மேம்படுத்திக் கொள்ள உதவும் வகையில் இடம் பெற்றிருக்கும் இக்கருவிகள் தமிழ்ப் பேராசிரியர்கள், ஆய்வு மாணவர்கள் மட்டுமின்றி எழுத்தாளர்கள், புத்தக வெளியீட்டாளர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்களுக்கும் பயனுடையதாக இருக்கின்றன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com