செவ்வாய் கிரகத்தில் அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவின் சிறிய ரக ஹெலிகாப்டர் வெற்றிகரமாகப் பறந்தது உந்துவிசை தொழில்நுட்பத்தின் புதிய சாதனையாகக் கருதப்படுகிறது. நீங்கள் ஒரு டிரோனை (ஆளில்லா சிறியரக விமானம்) இயக்குவதாக வைத்துக் கொள்வோம். அதன் கட்டுப்பாடு உங்கள் கைகளில் இருக்கும். விரும்பும் உயரத்துக்கு அதை நீங்கள் இயக்க முடியும். ஆனால், இங்கிருந்து 18 கோடி கி.மீ. தொலைவில் உள்ள செவ்வாய் கிரகத்தில் ஒரு டிரோனை எவ்வாறு கட்டுப்படுத்துவீர்கள்? ஏனெனில் உங்களது கட்டளைகள் செவ்வாய் கிரகத்தைச் சென்றடையவே 20 நிமிடங்கள் ஆகும். உங்கள் கட்டளையை ஏற்று அங்கு டிரோன் பறப்பது தொடர்பான புகைப்படம் உங்களுக்குக் கிடைத்தாலும், அது 20 நிமிடத்துக்கு முன்பு நிகழ்ந்ததாகத்தான் இருக்கும். எதுவும் தவறாக இருந்தால் அதை சரி செய்யக் கூட முடியாது. ஆனால், இந்தச் சாதனையைத்தான் நிகழ்த்திக் காட்டியுள்ளது நாசா குழு.
செவ்வாய் கிரகத்துக்கு பெர்சிவரன்ஸ் விண்கலத்துடன் இணைத்து அனுப்பப்பட்டிருந்த இன்ஜெனியூட்டி ஹெலிகாப்டர் திட்டமிட்டபடி செவ்வாய் கிரகத்தின் தரைப்பரப்பில் மணல் புயலைக் கிளப்பியபடி கடந்த ஏப். 19-ஆம் தேதி பறந்தது. தரையிலிருந்து 10 அடி உயரத்துக்கு மேலெழும்பிய இன்ஜெனியூட்டி ஹெலிகாப்டர் மொத்தம் 40 நொடிகள் பறந்து பின்னர் தரையிறங்கியது. அதன் நிழல் தரையில் விழுந்த புகைப்படத்தை ஹெலிகாப்டரின் அடிப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கேமரா படம் பிடித்து அனுப்பியது. கருப்பு-வெள்ளை புகைப்படமாக இருந்தாலும் ஓர் அறிவியல் சகாப்தத்தின் அடையாளமாக அது திகழப் போகிறது. அதைத் தொடர்ந்து, பெர்சிவரன்ஸ் விண்கலத்தின் ரோவரில் பொருத்தப்பட்டிருக்கும் கேமரா, இன்ஜெனியூட்டி தரையிலிருந்து மெலெழும்பி பறந்து மீண்டும் தரையிறங்குவது வரை விடியோவாகவே பதிவு செய்து அனுப்பியது. ஒரு ரோபோ மற்றொரு ரோபோவை படம் எடுத்ததுபோலத்தான் இது. அனிமேஷன் படம்போலக் காட்சியளித்தாலும், இந்தச் செயல்பாடு உண்மையானது. அதைச் சாதித்துக் காட்டியுள்ளது நாசா. தொழில்நுட்பம் மற்றும் பொறியியல் சாதனையாகத்தான் இதைக் கருத வேண்டும். பெர்சிவரன்ஸ் திட்டத்தின் ஒரு பகுதியாக செவ்வாயிலிருந்து மண், கல் மாதிரிகளை சேகரித்துக்கொண்டு பூமிக்குத் திரும்பவுள்ளது ஒரு விண்கலம். ஆச்சரியங்கள் இத்துடன் நின்றுவிடப் போவதில்லை...
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

குடும்பத்துடன் வாக்களித்த நடிகை ரம்யா பாண்டியன்!
தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு! மாவட்டவாரியாக விவரம்...

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 78.77% வாக்குப்பதிவு- நேரலை

மேற்குவங்க பாஜக எம்எல்ஏ கார் மீது கற்கள் வீசித் தாக்குதல்!
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


