இணைய வெளியினிலே...
மேகம் அடிக்கடி வந்து முத்தமிட்டுச் சென்றாலும்...மயக்கம் கொள்வதேயில்லை மலை.


குளம் பருகுகிறது -
சூரியனை,
கரையோரப் புங்கையை,
கிளுவையை,
குறுக்கே பறக்கும் காகத்தை,
மீண்டு வந்த சந்திரனை,ஹ
பாசிப் பச்சைக்குள்ளிருந்து
தலைநீட்டிய அல்லிக்குதான்...
ஒருநாளே தாளவில்லை.
உமா மோகன்
புழுவாக அருவருத்த
ஒன்றுதான்,
பட்டாம்பூச்சியாக
தகவமையும் காலத்தில்,
அழகியல் அந்தஸ்து
பெறுகிறது.
யவனிகா ஸ்ரீராம்
மேகம் அடிக்கடி வந்து முத்தமிட்டுச் சென்றாலும்...
மயக்கம் கொள்வதேயில்லை மலை.
பொன். குமார்
நீர்வழிப் படுகிற இவ்வாழ்வின் தடம்
நேர்கோட்டில் மட்டுமே இல்லையென்பதை
எவ்விதமாகப் புரிந்துகொள்வது
என்றறியாமலேயே...
கடலினைச் சென்றடைகிறது
மலையுச்சியிலிருந்து
தன்னுடைய பயணத்தைத் தொடங்கிய
ஒரு சிற்றருவி.
சக்தி ஜோதி
இந்த நிமிடம் நிரந்திரமில்லை !
ஆனாலும் திட்டமிடுகிறோம்...
அடுத்த ஜென்மம் வரை !
கோவை காதர்ஹ
சொற்களால் எந்தத் துயரமும் தீர்வதில்லை,
எந்த காயமும் ஆறுவதில்லை,
எந்த மனமும் கனிவதில்லை
என்பதெல்லாம் எனக்குத்தெரியாதா?
பின் ஏன் சொற்களைக் கட்டிக் கொண்டு அழுகிறாய்?
இதை விட்டால் எனக்கு வேறு சமாதானங்கள் ஏது?
-ரிஸ்கா
ஜா.வி.
வாக் போறப்ப கேட்க மெலடி பாட்டுகளை செலக்ட் பண்ணக் கூடாது.
"மலரே மெüனமாஆஆஆஆஆ' ன்னு கேட்டுட்டு நடந்தா...
நாமளே ஸ்லோ மோஷன்ல நடக்கத் தொடங்கிடறோம்.
"அர்ஜூனரு வில்லு அரிச்சந்திரன் சொல்லு' ன்னு
அதிர விட்டா... ஜாகிங் ஆயிருது வாக்கிங்கே.
செளம்யா
அடிப்படையில் நமது பண்டையக் கல்வி முறையானது வாழ்வோடு இயைந்த கலைகளாகவும் தொழில் திறன் சார்ந்த பயனுறு படிப்பாகவும் இருந்தது.
வேட்டைத் தொழிலையும் வேளாண்தொழிலையும் அடிப்படையாகக் கொண்ட ஆதிக்குடிகளிடம் பாறைகளில்வண்ணம் தீட்டுவதும் கற்களைச் செதுக்குவதும் இயல்பான பொழுதுபோக்கு நிகழ்வாகத் தொடங்கியிருக்கும். பொருள் தேடி வெளியே சென்றவர்கள் திரும்பி வந்து அவர்கள்சந்தித்த இடர்பாடுகளையும் அதிலிருந்து தப்பித்த வகைகளையும்
நடித்துக் காட்டியதன் மூலம் நாடகம் அரங்கேறியிருக்கும். வாழ்வியல் சார்ந்த செயல்பாடுகள் அழகுணர்ச்சி வெளிப்பாடாக வளர்ச்சியடைந்திருக்கும். இதனடிப்படையிலேயே பயிற்றுவித்தலும் நடைபெற்றிருக்கும் என்பதால் பழந்தமிழகக் கல்வி முறையானது வாழ்வியல் சார்ந்ததாக மட்டுமே இருந்திருக்கும்.
அங்கிருந்து வெகுதூரம் பயணித்திருக்கும் இன்றைய கல்வி முறையில் படித்த கல்விக்கும், செய்யும் பணிக்கும் சம்பந்தமே இல்லாத சூழலில் வாழ்கிறவர்களை அன்றாடம் சந்திக்கமுடிகிறது.
இன்றைய கல்விமுறையினைக் குற்றம் சொல்லிக்கொண்டே அதனை வளர்த்தெடுக்கும் செயலும் நடந்து கொண்டிருக்
கிறது. பிறக்காத குழந்தைக்கு நுழைவுத் தேர்வெழுதும் பெற்றோர்
களைப் போலவே ஆறாம் வகுப்புப் படிக்கும் குழந்தையை ஐஐடி பரீட்சைக்குத் தயார் செய்வதும் முன்னிலும் தீவிரமடைந்திருக்கிறது.
ஒரு காலத்தில் குழந்தைகளுக்கு தற்கொலை என்றால்என்னவென்றே தெரியாது. குறிப்பாக தேர்வுக்கால பயமும், தேர்வு முடிவுகளை அறிந்து கொள்கிற நாளின் பதற்றமும் ஒவ்வொரு வருடமும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
http://sakthijothipoet.blogspot.com
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...