

முக நூலிலிருந்து....
ஒட்டிக் கொண்டிருப்பதில்லை.
வெட்டிக் கொள்ள முடியுமா
என்றும் தெரியவில்லை.
பாதி நிலவு தேய்ந்துவிட்டாலும்,
பார்த்துக் கொண்டே கடந்து
விடத் தோதாக
இந்தப் பாதை
ஒரு நதிக்கரையோடுதான் போகிறது.
எல்லாம் ஏதோ ஒரு
சமாதானந்தான்
வேறெப்படி வாழ்வதாம்?
உமா மோகன்
வளைந்து கொடுப்பது
நிமிர்வதற்காகத் தான்.
உமா மகேஸ்வரி பால்ராஜ்
எழுதி நிறுவிக் கொள்வான் எழுத்தாளன்.
இசைந்து இசைத்து நிறுவிக் கொள்வான் இசைஞன்.
ஆய்ந்தாய்ந்து நிறுவிக் கொள்வான் விஞ்ஞானி.
பெய்தும் பொய்த்தும் நிறுவிக் கொள்ளும் மழை.
டிகே கலாப்ரியா
சுட்டுரையிலிருந்து...
முன்நோக்கி செல்லுமே தவிர,
ஒருபோதும்
பின்நோக்கி சுற்றியதில்லை...
கடிகாரம்.
படிக்காதவன்
தனிமை சலிக்கவில்லை;
நான்கு பக்க சுவர்கள்தான் சலித்துப் போனது
வெட்டவெளியில்
ஒரு நீண்ட தனிமை
வேண்டும்.
சரண்யா ராஜ்
கோபம் தேவைப்படும் போது
கேடயமாக இருக்கலாமே தவிர...
ஒரு போதும்
ஆயுதமாக மாறக் கூடாது.
சிறகுகள்
வலைதளத்திலிருந்து...
வெகுஜன எழுத்தின் இன்னொரு வடிவமே திரைப்பாடல். அதில் இலக்கிய நுகர்வுக்கு இடமுண்டு. எனினும், அதுமட்டுமே குறிக்கோளல்ல. சந்தம், காட்சி, கதை, சூழல் என சகல விஷயங்களையும் கவனித்தே ஒரு திரைப்பாடல் எழுதப்படுகிறது. அவ்விதம் உள்வாங்கினால் தேய்வழக்கு, படிமம், குறியீடு, அநுபூதி போன்ற பஞ்சாயத்துகள் வரவே வராது.
ஒருவருடைய ஆளுமையை நிறுத்துப் பார்க்க, காகிதத்தில் எழுதியவற்றையே கணக்கிலெடுக்க வேண்டும். அப்படியல்லாமல், அதில் இதையும் இதில் அதையும் தேடி விமர்சன கத்திக்குச் சாணைத் தீட்டுவது, போதாமை.
கவிஞனுக்கான அளவுகோலில் பாடலாசிரியனை மதிப்பிடுவது பாமரத்தனமென்று நல்ல இலக்கிய ஆளுமைகளுக்குத் தெரியாமலில்லை. நம்மவர்களும் நவீன சுப்புடுகளாவதை ரசிக்கலாம். அவர்களிடமும் கற்கலாம்.
https://yugabharathi.wordpress.com/
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

தமிழ்நாடு ஆளுநர் (பொறுப்பு) ஆர்.வி. ஆர்லேகர்! 9 மாநிலங்களுக்கு ஆளுநர்கள் மாற்றம்!
இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!

திருமண நிகழ்ச்சிக்கு ஒன்றாகச் சென்ற விஜய் - த்ரிஷா!

தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?
வீடியோக்கள்

Podcast | செல்வப்பெருந்தகை சந்தித்த சவால்கள் | News and Views | Epi - 11
தினமணி வீடியோ செய்தி...

திமுக - காங்கிரஸ் கூட்டணியில் நல்ல முடிவு: கனிமொழி சோமு எம்.பி.
தினமணி வீடியோ செய்தி...

அரையிறுதியில் வெளிப்பட்ட நியூசி.யின் ருத்ரதாண்டவம்: அடிபணிந்த தெ.ஆ.! |
தினமணி வீடியோ செய்தி...

இரண்டாம் அரையிறுதிப் போர்: பழிதீர்க்குமா இங்கிலாந்து?
தினமணி வீடியோ செய்தி...

