தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

இணைய வெளியினிலே...

பெருமழை என்பதால் ஜன்னலை மூடினேன்.ஜன்னல் கதவில் சிறுமழை... பெய்தது.

News image
Updated On :20 ஜூலை 2021, 12:30 am

DIN

முக நூலிலிருந்து....

பெருமழை என்பதால் ஜன்னலை மூடினேன்.
ஜன்னல் கதவில் சிறுமழை... பெய்தது.

நேசமிகு ராஜகுமாரன்

உனக்கு ஒன்றும் தெரியாது என்பதைத் தெரிந்து கொள்ள...
உனக்கு நிறையத் தெரிந்திருக்க வேண்டும்.

- தாமஸ் சோவல்
இந்திரன் ராஜேந்திரன்

உதிக்காவிடில், இரவுகள் தானேநீளும்.

காந்தி கார்த்திகேயன்

Story image

கூண்டுக் கம்பிகள் வழியே
னம் பார்க்கும் வலி...
எனக்குத் தெரியும். 
நீயேனும் 
பறந்து பறந்து
வானில் பாடித் திரி கிளியே..

கவிதா பாரதி

சுட்டுரையிலிருந்து...


"எல்லாம் நல்லதுக்கே'  என்றார்கள் இவர்கள் மொழியில் 
எது நல்லது என்று புரியாமல் திக்கற்று நிற்கிறேன்.

சயின்டிஸ்ட் சந்துரு

ஆசையைத் தூண்டி விட்ட மனசுதான்...
தவறுக்குப் பிறகு  தத்துவமும் சொல்லும்!


சவேதி


இயல்பிலிருந்து தன்னை 
வேறுபடுத்திக் காட்டும்
அனைத்தும் அதிகம்
கவனம் பெறும். 

கிருத்திகா சம்பத்

வலைதளத்திலிருந்து...

முதியவர்களின் மறதி என்பது அவர்களை விட அவர்களைச் சுற்றியிருப்பவர்களைத்தான் அதிகம் பாதிக்கிறது. நினைவுகளின் பாரத்தை மெல்ல மெல்ல இழந்து, இலகுவாகி விடுகிறார்கள். நட்பு முறுவல்களும், கையணைதலும், இளிவரலும், முகம் சுருக்குதலும், வசைகளுமாக சிடுக்காகிவிட்ட மனம் நெகிழ்ந்து போகிறது. எஞ்சி நிற்பது வெறுமை மட்டும்தான். வரம் வாய்த்த சில முதியோர்கள் தங்கள் குழந்தைமையை மீட்டெடுத்துக் கொண்டு களிப்படைகிறார்கள்  நினைவுகளின் அழுத்தமும் மறதியும் நேரெதிர் நிலையில் இருந்தாலும் அவை நம் வாழ்க்கையில் ஏற்படுத்தும் தாக்கம் ஏறக்குறைய ஒன்று போலத்தான். வள்ளுவர் சொல்வது போல "நன்றல்லது அன்றே மறப்பது' சாலச் சிறந்தது. குறைந்தபட்சம் நன்றல்லாதவற்றை விலக்கி வைக்கலாம்.

சிறுவயதில் பின்மாலைப் பொழுதுகளில், எங்களுக்கான முக்கிய பொழுதுபோக்காக இருந்தது தாத்தாவின் நனவோடை தோய்தல். அவர் ஒவ்வொரு தடவை விவரிக்கும்போதும் அது புதியதொரு அனுபவமாக பிறக்கும். அதையும் உடனடியாகச் சொல்லிவிடாமல், ஒரு தேர்ந்த கதைசொல்லி போல முன் பீடிகை, நடுவில் சுவாரசிய முரண், திருப்பம் என ஒரு வடிவில் கோத்து சொல்வார். ஒரு சமயம் அவருக்கு கால்களில் பிரச்னை ஏற்பட்டு நடக்க முடியாதபடி படுத்த படுக்கையானபோது, அவர் முதலில் நிறுத்தியது பேச்சைத்தான். தணிந்த குரலில் ஒரு சில சொற்களும், பெரும்பாலும் சைகைகள் மட்டும்தான் அவருடைய தொடர்பு மொழியாக இருந்தது. தன்னிடமிருந்து நீங்கிச் செல்லும் நினைவுகளை அவர் நோக்கியபடி இருந்தார் எனத் தோன்றுகிறது.

http://www.sridharblogs.com/

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.