இணைய வெளியினிலே...
எல்லா அப்பாக்களும் பாசத்தை வெளிப்படுத்தி விடுவதுமில்லை.எல்லாப் பிள்ளைகளும் அப்பாக்களைப் புரிந்துகொள்வதுமில்லை...காலம் கடந்த புரிதல்.


எல்லா அப்பாக்களும் பாசத்தை வெளிப்படுத்தி விடுவதுமில்லை.
எல்லாப் பிள்ளைகளும் அப்பாக்களைப் புரிந்துகொள்வதுமில்லை...
காலம் கடந்த புரிதல்.
தி. ச. சந்திரசேகர்
மறுப்பதற்குச் சாத்தியமில்லை...
ஒரு புள்ளியிலிருந்து
தொடங்கியதுதான்
அந்த நேர்கோடு.
ஏதாவதொரு புள்ளியை
இறுகப்பற்றிக் கொள்ளுங்கள்.
பொள்ளாச்சி முருகானந்தம்
எவ்வளவு நிதானம்...
எவ்வளவு சிந்தனை...
தரையிறங்கும் சருகு.
இளமதி
இரவிரவாக
உன் குளத்தில் விழுந்து
உன்னையே
இசைக்கிறேன்,
தவளையென...
மழை பொழிந்தபடி
இருக்கிறது
பரமேசுவரி
திருமண நிகழ்வுகளில் பன்னீருக்குப் பதில்,
சானிட்டைசர் தெளிக்கப்படுவதைத் தவிர,
வேறெந்த மாற்றமும் இல்லை.
கோழியின் கிறுக்கல்
சிக்கனமாய் இரு.
இருக்கும்போது செலவு செய்வதுபோல் அவ்வளவு எளிதல்ல...
இல்லாதபோது சம்பாதிப்பது இப்பணம்எனும் காகிதத்தினை.
நல்ல நண்பன்
இருபத்து இரண்டாயிரம் முறை கைகளால் இழுத்து அடித்து,
கால்களால் மிதித்து போராடினால் தான்...
ஒரு பெண்ணின் மானம் காக்கப்படும்...
சேலை
அழகிய கவிதை
மனித இனத்தின் மூதாதையரின் குடல் பகுதியில் குடியிருந்த பாக்டீரியாக்கள் மனித பரிணாம வளர்ச்சியில் முதன்மைப் பங்காற்றியதாக புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது. புதிய நிலப்பரப்புகளுக்கு மனித இனம் குடிபெயர்ந்த போது அங்கு தாக்குப் பிடித்து உயிர் வாழ இந்த நுண்ணுயிர்கள் உதவி இருக்கக்கூடும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மனிதர்கள், மனிதக்குரங்குகள், இதர பாலூட்டிகளின் குடலில் வெவ்வேறு வகைப்பட்ட பாக்டீரியாக்கள் உள்ளன. இவற்றை ஒன்றுடன் ஒன்று ஒப்பிட்டுக் கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு இது. அப்படி ஆராய்ந்ததில் மனிதக்குடலில் காணப்படும் பாக்டீரியாக்கள் புதிய சூழலுக்குத் துரிதமாக தங்களைத் தகவமைத்துக் கொள்வது தெரிய வந்துள்ளது.
மனித இனத்தின் மூதாதையர் புதிய நிலப்பரப்புக்குள் நுழைந்த போது புதிய உணவு முறை மட்டுமின்றி புதிய நோய்களையும் எதிர்கொள்ள வேண்டி இருந்தது. இதனால் உணவைப் பதப்படுத்த அவர்கள் வித்தியாசமான கருவிகளைப் பயன்படுத்தினார்கள். அப்போது அவர்கள் குடலில் இருந்த பாக்டீரியாக்கள் புதியவகை உணவு பண்டங்களை ஜீரணிக்கவும் ஒவ்வாமையைச் சரி செய்யவும் கற்றுக்கொண்டன. இதன் மூலம் நோய் எதிர்ப்புச் சக்தியானது மனிதர்களுக்கு வளர்ந்தது.
மனித குடலில் குடிகொண்டிருந்த பாக்டீரியாவின் உதவியால்தான் மனிதர்கள் வெற்றிகரமாக வெவ்வேறு பிரதேசங்களுக்கு குடிபெயர்ந்தார்கள்.
உடலுக்குள் இருந்தபடி மனிதர்களுக்கு உதவியது மட்டுமல்லாமல் உணவு பண்டங்களைப் பதப்படுத்தவும் இந்த பாக்டீரியாக்கள் உதவுகின்றன. மொத்தத்தில் மனிதர்கள் உணவைச் சேமிக்கவும் ஒரே இடத்தில் நெடுங்காலம் தங்கி வாழ்க்கையை நடத்தவும், குழுக்களாக இணைந்து கூடி வாழவும் வழிவகை செய்தது இந்த பாக்டீரியாக்கள் என்றால் அது மிகையாகாது
என்கிறது இந்த ஆய்வு.
https://suransukumaran.blogspot.com/
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...