தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

அமேஸான் காடுகளுக்கு மேலே!

உலகின் மிகப்பெரிய வெப்பமண்டல மழைக் காடுகளான அமேசான், வெகுகாலமாகவே பேரழிவைச் சந்தித்து வருகிறது.

News image
Updated On :9 மார்ச் 2021, 12:30 am


உலகின் மிகப்பெரிய வெப்பமண்டல மழைக் காடுகளான அமேசான், வெகுகாலமாகவே பேரழிவைச் சந்தித்து வருகிறது. பிரேசில் அரசு நிர்வாகமே அதை ஊக்குவிப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்தநிலையில்,  அமேசான் காடுகளைக் கண்காணிப்பதற்காக பிரேசில் விண்வெளி ஆய்வு நிறுவனம் ஒரு செயற்கைக்கோளை உருவாக்கியது. 2008-ஆம் ஆண்டு தொடங்கிய இந்த செயற்கைக்கோள் உருவாக்கும் பணி, 60 மில்லியன் டாலர் முதலீட்டைக் கொண்ட இப்பணியில் பத்துக்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் கைகோர்த்துள்ளன.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) ஸ்ரீஹரிகோட்டா தளத்திலிருந்து இந்த செயற்கைக்கோள் பிப்.28-இல் ஏவப்பட்டது.

"அமேசானியா-1' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த செயற்கைக்கோள் 2018-ஆம் ஆண்டிலேயே செலுத்தப்படவிருந்த நிலையில், நிதிப் பற்றாக்குறை காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

640 கிலோ எடை கொண்ட இந்த செயற்கைக்கோளில் 3 அதிநவீன கேமராக்கள் இடம் பெற்றுள்ளன. இவை சுமார் 850 கி.மீ. தொலைவைக் கண்காணிக்கும் திறன் கொண்டவை. 

இவை அமேசானின் காடழிப்பு மற்றும் விவசாய நடவடிக்கைகள் குறித்து தகவல்களை வழங்கும். 

இந்தப் புகைப்படங்களைக் கொண்டு அமேசானைக் காப்பாற்ற நடவடிக்கை எடுக்க முடியும். 

இந்தத் திட்டம் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டால் செயற்கைக்கோள்களை சொந்தமாக வடிவமைத்து, தயாரித்து, செயல்படுத்தும் 20 நாடுகளின் வரிசையில் பிரேசிலும் இணையும்.  தற்போதைக்கு அமேசான் காடுகளைக் கண்காணிக்கும் நடவடிக்கையானது அமெரிக்காவின் லேண்ட்செட் செயற்கைக்கோளையும், பிரேசிலும் சீனாவும் இணைந்து தயாரித்துள்ள இரு செயற்கைக்கோள்களையும் நம்பியே உள்ளது. இந்த செயற்கைக்கோள்கள் குறிப்பிட்ட நாள்கள் இடைவெளியில் அமேசானின் காடழிப்புகள் குறித்த புகைப்படங்களை வழங்குகின்றன.  இப்போது  உருவாக்கப்பட்டுள்ள அமேசானியா-1 பூமியிலிருந்து 752 கி.மீ. உயரத்தில் சுற்றி வந்து அமேசான் காடுகளைக் கண்காணித்து தினமும் அல்லது இரு நாள்களுக்கு ஒருமுறை புகைப்படங்களை  அனுப்பும்.

2003-ஆம் ஆண்டு பிரேசிலின் அல்சாண்டாரா தளத்திலிருந்து இயக்கப்பட்ட ஒரு செயற்கைக்கோள் வெடித்துச் சிதறியதில் 21 பேர் உயிரிழந்தனர். அந்தத் தளம் இப்போது செயல்பட்டாலும் அந்த  சம்பவத்துக்குப் பிறகு எந்த ஒரு செயற்கைக்கோளும் அங்கிருந்து செலுத்தப்படவில்லை. இந்நிலையில், அமேசானியா-1 முக்கியத்துவம் பெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.