கின்னஸ் சாதனை... புதிய முயற்சி!

காஞ்சிபுரம் அருகே ஓரிக்கை கிராமத்தில் வாழ்பவர் 31 வயதேயான இளைஞர் எஸ்.இளவரசன். இவர் காஞ்சிபுரத்தில் தனியார் பெயிண்ட் உற்பத்தி நிறுவனத்தில் நிர்வாகப்பிரிவு அலுவலராகப் பணியாற்றி வருகிறார்.
கின்னஸ் சாதனை... புதிய முயற்சி!

காஞ்சிபுரம் அருகே ஓரிக்கை கிராமத்தில் வாழ்பவர் 31 வயதேயான இளைஞர் எஸ்.இளவரசன். இவர் காஞ்சிபுரத்தில்தனியார் பெயிண்ட் உற்பத்தி நிறுவனத்தில் நிர்வாகப்பிரிவு அலுவலராகப் பணியாற்றிவருகிறார். இவர் கையடக்க கணினியில் ஏ.பி.சி.டி. ஆங்கில எழுத்துக்கள் 26 ஐயும் ஒரே ஒரு விரலால் (ஆள்காட்டி விரல்) தலைகீழாக தட்டச்சு செய்து கின்னஸ் சாதனை புரிந்துள்ளார். இச்சாதனையை 5.24 நொடிகளில் நிகழ்த்தியிருக்கிறார்.

இதுகுறித்து இளவரசனிடம் பேசினோம்...

உங்களுடைய கின்னஸ் சாதனை வித்தியாசமானதாக இருக்கிறதே?

கரோனா அச்சுறுத்தல் காரணமாக பொதுமுடக்கம் அமலில் இருந்த நேரத்தில் என்னிடம் இருந்த கையடக்க கணினியில் எனது நண்பர் ஒருவருக்கு ஆங்கில எழுத்தில் குறுந்தகவல் அனுப்பினேன். அனுப்பிய பிறகு அந்த எழுத்துகள் சிலவற்றை தலைகீழாக தட்டச்சு செய்து பார்த்தேன்.

அதாவது, ஆங்கில எழுத்துக்களை பெரும்பாலும் ஏ.பி.சி.டி.வரிசையில் சுலபமாக எல்லாராலும் தட்டச்சு செய்து விட முடியும். ஆனால் அதற்கு நேர்மாறாக இஸட், ஒய், எக்ஸ், டபிள்யூ என தலை கீழாகத் தட்டச்சு செய்வது மிகவும் கடினமான ஒன்று. இதை எல்லோராலும் செய்து விட முடியாது. நான் தலை கீழாகத் தட்டச்சு செய்வதையே ஒரு சவாலாகஎடுத்துக் கொண்டேன்.

அதன் பின்னர் ஏ.பி.சி.டி.ஆங்கிலஎழுத்துகள் 26 ஐயும் ஆள்காட்டி விரல் ஒன்றை மட்டுமே வைத்து தலைகீழாக தட்டச்சு செய்தும் பார்த்தேன். இதன் தொடர்ச்சியாக தலைகீழாக தட்டச்சு செய்வதையே மிக வேகமாகவும் செய்து
பழகினேன்.

இந்தப் பயிற்சியை எடுத்துக் கொண்டிருந்த போதே தலைகீழாக யாரும் தட்டச்சு செய்து கின்னஸில் இடம் பிடித்திருக்கிறார்களா என்று இணையத்துக்குள் தேடிப்பார்த்தேன்.

ஐக்கிய அரபு நாட்டைச் சேர்ந்த ஒருவர் கடந்த 2017 - ஆம் ஆண்டு 6.82 நொடிகளில் தலைகீழாக தட்டச்சு செய்துகின்னஸில் இடம் பிடித்திருந்தது தெரிய வந்தது. அவரது சாதனையை முறியடிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. இந்தஎண்ணமே செயலாக மாறியது.

இதன் விளைவாக தலைகீழாக கையடக்க கணினியில் தட்டச்சு செய்வதை மிக, மிக வேகமாக செய்து பழகினேன்.

கடந்த 18.9.2021 அன்று ஒரே ஓர் ஆள்காட்டி விரலால் ஏ.பி.சி.டி.ஆங்கில எழுத்துகள் 26 ஐயும் 5.24 நொடிகளில் தட்டச்சு செய்து முந்தைய நபரின் சாதனையை முறியடித்தேன். கின்னஸ் அமைப்பிடமிருந்து உலக சாதனையை நிகழ்த்தியிருப்பதாகதகவல் வந்த போது அடைந்த உற்சாகத்துக்கு அளவே இல்லை.

கடந்த 26.2.2021 ஆம் தேதி கணினியில் அனைத்து விரல்களாலும் ஆங்கில எழுத்துகள் 26 ஐயும் தலைகீழாக தட்டச்சு செய்தேன். ஒவ்வோர் எழுத்துக்கும் சரியான இடைவெளி இருக்கும் வகையில் வகையில் தட்டச்சு செய்வது மிகவும் கடினம்.

அச்சாதனையை இரு கண்களையும் கட்டிக் கொண்டு தலைகீழாக தட்டச்சு செய்தது குறிப்பிடத்தக்கது.

வேறு சாதனைகள் எதுவும் நிகழ்த்திடவிருப்பமா?

ஆமாம். இத்தாலி நாட்டைச் சேர்ந்தஒருவர் ஒரு நிமிடத்தில் 430 முறை பஞ்சிங் செய்திருக்கிறார். நான் அவரது சாதனையை முறியடிக்கும் வகையில் ஒரு நிமிடத்துக்கு 500 முறை பஞ்சிங் செய்ய முயற்சித்து வருகிறேன். அதே போல பாகிஸ்தானைச் சேர்ந்த ஒருவர் செல்போனில் கையை எடுக்காமலேயே ஒரு வாக்கியத்தை 17 நொடிகள் தட்டச்சு செய்திருக்கிறார். நான் அச்சாதனையை முறியடிக்கும் வகையில் 15 நொடிகளில் ஒரு வார்த்தையை தட்டச்சு செய்ய முயற்சித்து வருகிறேன். கனடா நாட்டைச் சேர்ந்த ஒருவர் டேபிள் டென்னிஸ் பந்தை தனது உள்ளங்கையில் வைத்து அதை தலைகீழாக கீழே விழாமல் 13 பந்துகளை பிடித்திருக்கிறார். அதையே நான் 14 பந்துகளாக பிடிக்க தீவிர பயிற்சி எடுத்து அதையும் கின்னஸ் நிறுவனத்துக்கு அனுப்பி இருக்கிறேன். ஓரிரு மாதங்களில் அதற்கான கின்னஸ் சாதனை சான்றிதழும் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

அமெரிக்க நாட்டைச் சேர்ந்த ஒருவர் கால்களை மட்டும் தரையில் வைத்துக் கொண்டும், முழங்கை மட்டும் கீழேஇருக்கும் வகையில் உடல் சற்று உயரமாக இருக்கும் வகையிலும் படுத்துக்கொண்டே 38 கிரிக்கெட் பந்துகளை பிடித்து சாதனை படைத்துள்ளார்.அந்த சாதனையையும் முறியடிக்கும் வகையில் 50 கிரிக்கெட் பந்துகளை பிடிக்கவும் முயற்சித்து வருகிறேன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com