புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

வேலை... வேலை... வேலை...

பிளஸ் 2 தேர்ச்சியுடன் கணினியில் நிமிடத்திற்கு ஆங்கிலத்தில் 35 வார்த்தைகளும், இந்தியில் 30 வார்த்தைகளும் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். கணக்கியல் துறையில் அறிவுத்திறன் பெற்றிருக்க வேண்டும்.

News image
Updated On :5 அக்டோபர் 2021, 12:30 am

DIN


அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சி கவுன்சிலில்  வேலை 

பணி: ஜூனியர் செகரட்டேரியட் அசிஸ்டன்ட்  (ஜெனரல்)  
காலியிடங்கள்: 03

பணி: ஜூனியர் செகரட்டேரியட் அசிஸ்டன்ட்  (எஸ்&பி) 
காலியிடங்கள்: 02

பணி: ஜூனியர் செகரட்டேரியட் அசிஸ்டன்ட் (எஃப் & ஏ)
காலியிடங்கள்: 02

வயது வரம்பு: 28 வயதிற்குள் இருக்க வேண்டும். 

சம்பளம்: மாதம் ரூ.26, 624 

தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் கணினியில் நிமிடத்திற்கு ஆங்கிலத்தில் 35 வார்த்தைகளும், இந்தியில் 30 வார்த்தைகளும் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். கணக்கியல் துறையில் அறிவுத்திறன் பெற்றிருக்க வேண்டும்.

பணி: செக்யூரிட்டி அசிஸ்டன்ட் 

காலியிடங்கள்: 01

வயது வரம்பு: 28 வயதுக்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.47,616

தகுதி: முன்னாள் ராணுவத்தினர் மற்றும் செக்யூரிட்டி பணியில் 5 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். 

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு தட்டச்சுத் தேர்வு, திறன் தேர்வு, உடற்திறன் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.200. இதனை ஆன்லைனில் செலுத்தவும். எஸ்டி, எஸ்டி, பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பக் கட்டணம் செலுத்தத் தேவையில்லை.  

விண்ணப்பிக்கும் முறை: ww.niist.res.in  என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்த பின்னர் அதனை பிரிண்ட்  அவுட் எடுத்து கைவசம் வைத்துக் கொள்ளவும். 

மேலும் விவரங்கள் அறிய: https://www.niist.res.in/recruitment/advt_012021.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 11.10.2021 


பிரசார் பாரதியில்   வேலை


பணி: புரோகிராமர் I & II

காலியிடங்கள்: 04

சம்பளம்: மாதம் ரூ.33,500 - ரூ.40,000

வயது வரம்பு: 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.

தகுதி: கணினி அறிவியல்,  தகவல் தொழில்நுட்பம் பிரிவில் பி.டெக் அல்லது எம்சிஏ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் ஏஐசிடிஇ, யுஜிசி அங்கீகாரம் பெற்ற புரோகிராமிங்க் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். 

பணி: மொபைல் அப்ளிகேஷன் டெவலப்பர் 

காலியிடங்கள்: 02

சம்பளம்: மாதம் ரூ.37,500 - ரூ.45,000

வயது வரம்பு: 35 வயதுக்குள் இருக்க வேண்டும். 

தகுதி: மென்பொருள் பொறியியல் பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மூன்று ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

பணி: சாப்ட்வேர் டெஸ்ட்டர் 

காலியிடங்கள்: 01

சம்பளம்: மாதம் ரூ.37,500 - ரூ.45,000

வயது வரம்பு: 35 வயதுக்குள் இருக்க வேண்டும். 

தகுதி: கணினி அறிவியல் பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மூன்று ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.  

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்பிக்கும் முறை: https://applications.prasarbharathi.org என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

மேலும் விவரங்கள் அறிய: https://prasarbharati.gov.in/wp-content/uploads/2021/09/NIA-for-engagment-of-programmer.pdf- என்ற லிங்கில் சென்று பார்த்து தெரிந்து கொள்ளவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 8.10.2021


விளையாட்டு ஆணையத்தில் வேலை

பணி: பயிற்சியாளர்  

காலியிடங்கள்: 100

சம்பளம்: மாதம் ரூ.1,05,000 -  ரூ.1,50,000

வயது வரம்பு: 45 வயதுக்குள் இருக்க வேண்டும்.

தகுதி: இந்திய விளையாட்டு ஆணையத்தில் அல்லது என்எஸ்/என்ஐஎஸ் போன்ற ஏதாவதொரு புகழ்பெற்ற விளையாட்டு பயிற்சி நிறுவனத்தில் டிப்ளமோ இன் கோச்சிங் முடித்திருக்க வேண்டும் அல்லது காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ள விளையாட்டுப் பிரிவில் ஏதாவதொன்றில் சர்வதேசப் போட்டிகளில் விளையாடி இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:  நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம், தேதி போன்ற விவரங்கள் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும். 

விண்ணப்பிக்கும் முறை: www.sportsauthorityofIndia.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.  

மேலும் விவரங்கள் அறிய: www.sportsauthorityofIndia.nic.in  என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்த்து தெரிந்துகொள்ளவும் .

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 15.10.2021


தமிழகத்தில்  ஆசிரியர் வேலை

பணி: போஸ்ட் கிராஜுவேட் அசிஸ்டன்ட்ஸ்/ பிசிக்கல் எஜுகேஷன் டைரக்டர்ஸ் கிரேடு -1, கம்ப்யூட்டர் இன்ஸ்ரக்டர் கிரேடு -1  

காலியிடங்கள்: 2207 

பாட வாரியாக காலிப் பணியிடங்கள் விவரம்: 

1. தமிழ் - 271
2. ஆங்கிலம் -192
3. கணிதவியல் -114
4. இயற்பியியல் - 97
5. வேதியியல் - 191
6. விலங்கியியல் -109
7. தாவரவியல் - 92
8. பொருளாதாரவியல் - 289
9. வணிகவியல் - 313
10. வரலாறு - 115
11. புவியியல் - 12
12. அரசியல் அறிவியல் - 14
13. வீட்டு அறிவியல் - 03
14. இந்திய கலாசாரம் - 03
15. உயிர் வேதியியல் - 01, 
16. உடற்கல்வி இயக்குநர் (நிலை- 1) - 39
15. கணினி பயிற்றுவிப்பாளர்(நிலை-1) - 44. 

சம்பளம்: மாதம் ரூ.36,900 - ரூ.1,16,600 வழங்கப்படும். 

வயது வரம்பு:  ஜூலை 2021-ஆம் தேதி 40 வயதைக் கடந்தவர்கள் விண்ணப்பிக்க முடியாது. ஆனால், இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு கூடுதலாக ஐந்து ஆண்டுகள் தளர்வு வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் 45 வயது வரை விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். 

தகுதி:  ஆசிரியர் தேர்வு வாரியம் பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித் தேர்வுக்கு வெளியிட்டுள்ள துறையில் 50 சதவிகித மதிப்பெண்களுடன் முதுகலைப் பட்டம் மற்றும் பி.எட் முடித்திருக்க வேண்டும். அதாவது தமிழ், ஆங்கிலம், புவியியல், வரலாறு, இந்திய கலாசாரம், கணிதவியல், உடற்கல்வி, இயற்பியல், அரசியல் அறிவியல், உயிர்வேதியியல், தாவரவியல், வேதியியல், வர்த்தகம், பொருளாதாரம், வீட்டு அறிவியல், விலங்கியல், கணினியியல் போன்ற பாடங்களில் முதுகலைப் பட்டத்துடன் பி.எட் முடித்திருக்க வேண்டும். 

தேர்வுக் கட்டணம்: ரூ.500. எஸ்சி, எஸ்சிஏ, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் பிரிவினர் ரூ.250 கட்டணமாகச் செலுத்த வேண்டும். கட்டணத்தை வங்கிகளின் பற்று, வரவு அட்டைகள் மற்றும் ஆன்லைனில் செலுத்த வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை:  www.trb.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: கணினி வழி எழுத்துத் தேர்வு,  சான்றிதழ்கள் சரிபார்ப்பு அடிப்படையில் பணியிடங்களுக்குத் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

தேர்வு: மூன்று மணி நேரம் நடைபெறும் கணினி எழுத்துத் தேர்வில் 150 மதிப்பெண்களுக்கு கேள்விகள் கேட்கப்படும். இதில், 50 சதவிகித மதிப்பெண் பெறுபவர்கள் தகுதி பெற்றவர்கள் ஆவார். எஸ்சி, எஸ்சிஏ பிரிவினர் 45 சதவிகித மதிப்பெண்களும், எஸ்டி பிரிவினர் 40 சதவிகித மதிப்பெண்களும் பெற்றால் தகுதி பெற்றவர்கள் ஆவர். ஆசிரியர்கள் நியமனத்தில் 69 சதவிகித இடஒதுக்கீட்டு முறை அரசு விதிகளின்படி பின்பற்றப்படும். தமிழ் வழிக் கல்வி பயின்றவர்கள் அதற்கான சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்ய வேண்டும். 

கணினி வழி எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 2021 நவம்பர் 13,14 மற்றும் 15 தேதிகளில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் விவரங்கள் அறிய:  http://trb.tn.nic.in/pg2021/Notification.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி:  17.10.2021 

- இரா.வெங்கடேசன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.