வேதவதி கதை தெரியுமா?
வேதவதியா... யார் அது? என கேட்கிறீர்களா? - இதற்கு விடை ராமாயணத்தில் இருக்கிறது.


வேதவதியா... யார் அது? என கேட்கிறீர்களா? - இதற்கு விடை ராமாயணத்தில் இருக்கிறது.

முன்பு ஒரு காலத்தில் வேதவதி... முனிவர் குஷத்வஜாவின் மகளாகப் பிறந்தார்! அழகியென்றால் அப்படியோர் அழகி. முனிவர் குஷத்வாஜா தன் மகளை மகாவிஷ்ணுவுக்குதான் திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என நினைத்தார்.
அந்தப்பகுதியைச் சாம்பு என்ற அரக்கன் ஆண்டு வந்தான். அவன் ஒருநாள் முனிவரின் ஆஸ்ரமம் அருகில் வேட்டையாட வந்த போது, வேதவதியைப் பார்த்தான். உடனே அவள் அழகில் மயங்கி அவள் மீது மோகம் கொண்டான்.
ஆனால் முறைப்படி, வேதவதியின் தந்தை முனிவர் குஷ்த்வாஜாவிடம் வந்து, ""தங்கள் மகளை எனக்கு திருமணம் செய்து கொடுங்கள்'' எனக் கேட்டான். அதற்கு முனிவர் ""முடியாது'' என மறுத்து அவனை அனுப்பிவிட்டார்.
சாம்பு அரக்கன் ஆயிற்றே... அதனால் அவன் கடும் கோபம் கொண்டான். மூர்க்கத்தனமாக முனிவரையும், அவருடைய மனைவியையும் கொன்றான்.
இவனிடமிருந்து எப்படித் தப்புவது என யோசித்த வேதவதி, உடனே சந்நியாசினி உடையணிந்து, தன்னை சந்நியாசினியாக ஆக்கிக் கொண்டுவிட்டாள்.
இதனால் திகைத்த சாம்பு, "பிழைத்துப்போ' என அவளை விட்டுவிட்டு சென்றுவிட்டான்.
வேதவதி சந்நியாசினியாகி முழுமையான தவத்தில் ஈடுப்பட்டாள். இதனால் அவள் முகத்தில் மேலும் தேஜஸ் கூடியது. விதி மறுபடியும் அவளைத் தேடி வந்தது.
இமாலயத்தில் வலம் வந்த ராவணனின் கண்களில் வேதவதி பட்டாள். அவனுக்கு வேதவதியின் தேஜஸ் தெரியவில்லை. மாறாக ஜொலித்த அழகுதான் தெரிந்தது. விளைவு... அவள் மீது கடும் மோகம் கொண்டான் ராவணன்.
இதனால் வேதவதியை நெருங்கி, ""தவத்தை துறந்து, தன்னைக் கணவனாக ஏற்று, தன்னுடன் வாழவேண்டும்'' எனக் கோரினான்.
வேதவதியோ, ""தான் சந்நியாசினியாகவே வாழ விரும்புகிறேன்'' எனக் கூறி மறுத்தாள்.
இது ராவணனின் கடும் கோபத்தைத் தூண்டியது. காமத்தில் அவளைத் துரத்தினான். அவள் ஓடினாள். ஒரு கட்டத்தில், வேதவதியின் தலை முடியைப் பிடித்து இழுத்தான்.
வேதவதி உடனே தன் தவ வலிமையால், தன் ரோமத்தை, தன்னிடமிருந்து விலக்க; தலைமுடி அனைத்தும் ராவணன் கையில் இருக்க; அவன் மேலும் கோபத்துடன் வேதவதியை துரத்தினான்.
இனி தப்ப இயலாது என்ற நிலையில் அருகில் இருந்த குளத்தில், உயிரை மாய்த்துக் கொள்ள குதித்தாள் வேதவதி. ஆனால் மூழ்கும் முன், திகைத்து நின்ற ராவணனைப் பார்த்து சபித்தாள்:
"" என் விருப்பம் இல்லாமல் என்னை தொட்டாய். அடுத்த ஜென்மத்தில் நான் சீதையாகப் பிறந்து; உன் சாவுக்கு; நானே காரணமாக அமைவேன். இது நிச்சயம்'' எனக் கூறி மூழ்கினாள்.
இந்தப் பெண் பாவம்தான் பின்னாளில், ராமனால் ராவணன் இறக்க நேர்ந்தது.
நாம் ராவணனின் சாவுக்கு சீதை காரணம் என நினைத்திருக்கிறோம்; ஆனால் உண்மையில் வேதவதியே காரணம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...