இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த இந்திய கப்பல்கள்! ஈரான் அனுமதி! தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

நிவாரணப்பணியில் உணர்வு பூர்வமான ஆதரவு! "ஜெட் ஏர்வேஸ்' நம்ரதா

விண்ணில் பறக்கும் ஜெட் ஏர்வேஸ் ஊழியர்களும் அவர்களின் விமான நிலையப் பணியாளர்களும் தமிழகத்தின் வெள்ள நிவாரணப் பணியில் ஆக்ஷன் எய்ட்-இந்தியா அமைப்புடன் கைகோர்த்து, இரவு

News image
Updated On :22 டிசம்பர் 2015, 5:25 am

சாருகேசி

விண்ணில் பறக்கும் ஜெட் ஏர்வேஸ் ஊழியர்களும் அவர்களின் விமான நிலையப் பணியாளர்களும் தமிழகத்தின் வெள்ள நிவாரணப் பணியில் ஆக்ஷன் எய்ட்-இந்தியா அமைப்புடன் கைகோர்த்து, இரவு பகல் பாராமல் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் என்று ஈடுபட்டதை ஜெட் ஏர்வேஸ் அதிபரின் மகள் நம்ரதா கோயலும், ஆக்ஷன் எய்டு சந்தீப்பும் எடுத்துச் சொன்ன போது, அவர்கள் பின்னால் அவர்களோடு ஒத்துழைத்த பலரும் பல நிகழ்ச்சிகளைப் பகிர்ந்து கொண்டார்கள்.

காபின் க்ரூவைச் சேர்ந்த ஹரி, தன் பெர்சனல் அலவன்ஸ் முழுதையும் நன்கொடையாகக் கொடுத்ததை நம்ரதா பெருமையுடன் சொன்ன போது, ஹரியின் முகத்தில் பெருமிதம்.  விமானப் பணிப்பெண் முதல் கடை நிலை ஊழியர் வரை இந்தப் பணியில் ஈடுபட்டதைச் சொன்னார் நம்ரதா.

""பாதிக்கப்பட்டவர்களின் மறுவாழ்வு

முயற்சிகளில் ஈடுபடுவது எங்களுக்கு இது முதல் தடவை அல்ல.  ஏற்கெனவே 1999இல் ஒரிசாவில், பின்னர் குஜராத் பூகம்பத்தில், அதை அடுத்து சுனாமியில், கடந்த வருடம் ஜம்மு காஷ்மீர் வெள்ளச் சேதத்தின்போது என்று தொடர்ந்து உதவிகள் செய்து வருகிறோம்.  வெள்ளத்தின் போது மீட்புபணியிலும், பின்னர் மறுவாழ்வு அளிப்பதிலும், இவை இரண்டையும் தாண்டி உணர்வுபூர்வமான ஆதரவு அளிப்பதும்தான் எங்கள் நோக்கம்.  எங்கள் குழுவில் மன நல ஊழியர்களும் இருந்தார்கள்.  இனியாவது பாதிக்கப்பட்டவர்கள் வாழ்க்கையை ஓரளவாவது சீராக்க வேண்டும் என்பதும், அவர்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப ஆவன செய்ய வேண்டும் என்பதுமே எங்கள் குறிக்கோள்.  எங்கள் ஊழியர்களுடன் முறைப்படி செயலாற்ற ஆக்ஷன் எய்டு-இந்தியா தன்னார்வத் தொண்டர்களைக் கேட்டுக் கொண்டோம்'' என்றார் நம்ரதா.

Story image

""இந்தியாவில் நாங்கள் 43 ஆண்டுகளாக, 45 மையங்களுடன், 25 மாநிலங்களில் இயங்கிவருகிறோம்.  தடைகளையும், வறுமையையும் எதிர்த்துப் போராடுவது எங்கள் பணி.  உடைந்த மனங்களை மீண்டும் ஒட்டவைப்பது எங்கள் பணி.  எல்லா பெரிய இடர்களிலும் நாங்கள் உதவுகிறோம். அங்கே கடற்கரை மீனவர்களுடன், உப்பளத் தொழிலாளிகளுடன் நாங்கள் தோளோடு தோள் கொடுத்து

உதவினோம். மகளிரை, மாற்றுத் திறனாளிகளை மீட்பதில் நாங்கள் கவனம் செலுத்தினோம்.  நிலைமை சீராக நாட்கள் ஆகும்.  ஆனால் லீடர்ஷிப் எனப்படும் தலைமை ஒன்றிருந்தால், மாற்றம் சாத்தியம்தான்'' என்றார் சந்தீப்.

""இது தற்கால நடவடிக்கை அல்ல.  அவர்கள் வாழ்க்கையை மாற்ற முயலும் திட்டம்''   அவர்களுக்கு என்ன தேவை என்று நமக்குத் தெரியாது.  ""ஒரு பெண்மணி, பழைய துணிகளைக் கொண்டு வந்து கொடுக்கிறார்கள்.  சிலர் தங்களுக்குப் பயன்படாத சாமான்களைக் கொண்டுவந்து கொடுக்கிறார்கள்'' என்றார்.  அவர்களுக்கு என்னென்ன தேவை என்பதை நான் அவரையே சொல்லச் சொன்னேன்.  ""ரப்பர் படுக்கை ஷீட்டுகள், பாய்கள், பாத்திரங்கள், டார்ச் லைட், ஸ்டவ்'' என்று அவர்களாக முன்வந்து சொன்ன போதுதான் தெரிந்தது அவர்கள் எதற்காகக் காத்திருக்கிறார்கள் என்று. மீனவர்களின் மனைவிமார்கள் "மீன்பிடி வலை வேண்டும்' என்று கேட்டார்கள்.   நாங்கள் போன பெரும்பாலான இடங்களிலும் பெண்கள்தாம் முன்வந்து எங்களைச் சந்தித்தார்கள்.  வேண்டுகோள் வைத்தார்கள்.  நிவாரணப் பொருட்களைப் பெற்றுக்கொண்டார்கள்'' என்றார் நம்ரதா.

""கடலூரில் ஒரு கார்மெண்ட் பாக்டரியில் ஒரு பெண்ணைச் சந்தித்தேன்.  அவர்தான் அந்தக் குடும்பத்தைக் காப்பாற்றுபவர்.  அவரும் சிரமத்தைப் பார்க்காமல் நிவாரணப் பணிகளில் உதவினார்.  "நீ என்னவாக ஆக விரும்புகிறாய்' என்று கேட்டேன்.  "ஒரு தொழிலை நடத்தும் ஆண்டர்ப்ரூனராக இருக்க ஆசை' என்றார்.  அவருடைய தன்னம்பிக்கை என்னைக் கவர்ந்தது, "ஒரு மூதாட்டி முன் வந்து தங்களை ஆற்றங்கரை ஓரத்திலிருந்து வெகுதூரத்துக்குப் போகச் சொல்லாதீர்கள் என்று கேட்டுக்கொண்டார்.  நாங்கள் இங்கேதான் வேலை செய்து சம்பாதிக்க வேண்டும்' என்று கண்களில் நீர் வழியச் சொன்னார்.  மறுவாழ்வு முயற்சிகளை மேற்கொள்ளும்போது, இதை எல்லாம் கவனத்தில் வைத்துக்கொள்ள வேண்டும்''.

""நாங்கள் நேற்று வந்துவிட்டு, இன்று போகப் போகிறவர்கள் இல்லை.  மீண்டும் அவர்களைப் போய்ப் பார்ப்போம்.  அவர்களுக்குத் தேவைப்படுவதை கொடுப்போம்'' என்ற நம்ரதா சொன்ன இன்னொரு தகவல், வித்தியாசமாக இருந்தது. நமக்காக நம் வீட்டில் உழைப்பவர்களை, பெயர் சொல்லி அழைத்துக் கேட்பதுதான் வழக்கம். ஆனால் எங்கள் குடும்பத்தில் சிறுவயதிலேயே ஊழியர்களை உறவாகக் கருதி அழைக்கும் பழக்கம் இருந்தது.  ஆண்களை பய்யா (சகோதரன்) என்றும் பெண்களை ஆன்ட்டி என்றும்தான் அழைப்போம். இது ஒருவிதப் பிணைப்பை உருவாக்குகிறது'' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.