இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த இந்திய கப்பல்கள்! ஈரான் அனுமதி! தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

ஆட்டிஸம் குழந்தைகளுக்கு மியூசிக் தெரபி!

சிறப்புக் குழந்தைகள் அல்லது ஸ்பெஷல் சில்ட்ரன் என்று ஆட்டிஸம் பாதித்த குழந்தைகளுக்கு 13 வருடங்களாக இசையைப் பயன்படுத்தி அவர்கள் திறமையை வெளிக் கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார் லட்சுமி மோகன். சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் வகுப்புகள் நடத்தி வருகிறார். சென்ற ஒரு வருடமாக

News image
Updated On :29 பிப்ரவரி 2016, 10:49 am

சாருகேசி

சிறப்புக் குழந்தைகள் அல்லது ஸ்பெஷல் சில்ட்ரன் என்று ஆட்டிஸம் பாதித்த குழந்தைகளுக்கு 13 வருடங்களாக இசையைப் பயன்படுத்தி அவர்கள் திறமையை வெளிக் கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார் லட்சுமி மோகன். சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் வகுப்புகள் நடத்தி வருகிறார். சென்ற ஒரு வருடமாக சௌமனஸ்யா அறக்கட்டளை ஒன்றை இதற்காகவே உருவாக்கியுள்ளார். அவரைச் சந்தித்தோம்: 

பயனடைந்த குழந்தைகளின் பெற்றோர் மூலம் அறிந்தவர்கள், என்னை அணுகுகிறார்கள்.  என்னைப் பற்றிப் பத்திரிகைகள் எதிலாவது செய்தி வந்தால் அதைப் படித்துவிட்டும் பெற்றோர் என்னிடம் வருவதுண்டு.  "முன்னைவிட என் மகனிடம் இப்போது பொறுமை அதிகமாகத் தெரிகிறது. வெளியே ஹோட்டலுக்கோ, மாலுக்கோ போனால் அவனை எளிதாகக் கையாள முடிகிறது' என்று அதிகத் தீவிரமான பையனைப் பற்றி பெற்றோர் தெரிவித்த கருத்து இது.

  சிடிஎன் ஆன் லைன் செய்தி சானல், சென்ற ஆண்டு மகளிர் தினத்தன்று, "ஃபெதர் லேடி 2015' என்று விருது அளித்து கௌரவித்தது.  பாய் கம்யூனிடி அமைப்பு, "ரோஸ் ஆஃப் ட்வான்' என்ற விருது அளித்துப் பாராட்டியது. எனக்கு இசை சொல்லிக் கொடுத்த குரு வானொலியில் பணியாற்றிய சியாமளா ராமசாமி.  இப்போது அவர் இல்லை. 

என்னுடைய மியூசிக் தெரபியில் முக்கிய இடம் பெறுவது பஜன் பாடல்கள்தாம்.  நானே சிறிய, எளிமையான பஜன் பாடல்களை உருவாக்குகிறேன். சிலர் உடனடியாகக் கற்றுக் கொண்டு விடுவார்கள்.  சிலர் கற்றுக்கொள்ளக் கொஞ்சம் தாமதமாகும்.  பாட்டுப் பாடுவதைவிட, கற்றுக்கொள்ளும் முறை முக்கியமானது.

  இந்தக் குழந்தைகளிடம் இருக்கும் இசைத் திறமையை வெளிக்கொண்டு வருவதுதான் என் நோக்கம்.   எனது ஒரு மாணவர் கிருஷ்ணகுமாருக்கு  40 வயதாகிறது.  நன்றாகப் பாடுவார்.  ஆனால் அவரிடம் இருந்த பாதிப்புகள், கொஞ்சம் கூட சகித்துக் கொள்ள முடியாத பண்பும், ஒருவித பரபரப்பு எனப்படும் ரெஸ்ட்லெஸ்னஸýம்தான்.  அவரை ஒரு பொது மேடையில் பாட வைக்க வேண்டும் என்பது என் ஆசை.  இதற்காக ஒரு வருடம் முழுக்க அவருக்குப் பயிற்சி கொடுத்தேன்.   அவர் ட்யூனை அதாவது இசையமைப்பை உடனே கிரகித்துக் கொண்டுவிடுகிறார்.  ஆனால் வார்த்தைகளைச் சரியாக உச்சரிப்பதில் சிரமப்படுகிறார்.  இரண்டு-மூன்று தடவைகளில் பாடலைக் கற்றுக் கொண்டு விடுகிறார்.

  இவர்களைப் பாடத் தூண்ட வேண்டும் என்ற அவசியம் இருந்ததில்லை. நல்ல நினைவு ஆற்றல் இருக்கிறது.  வரிகளை மறக்கவே மாட்டார்கள்.  நான் எப்படி சொல்லிக் கொடுக்கிறேனோ அப்படியே பாடிவிடுகிறார்கள். அவர்களுக்குப் பொறுமை குறைச்சல் என்பதால், பயிற்சி அளித்துப் புரியவைப்பதில் அதிக நேரம் செலவிட வேண்டியிருக்கிறது. 

ஆனால் அடுத்தடுத்து அவர்களுக்கு வரிசையாக நினைவுபடுத்துகிறேன்.  அதிகபட்ச குழந்தைகளும் இசை வகுப்பின்போது மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். பெற்றோர்களும் இந்த ஒரு தெரபிதான் தங்களை என் வசம் ஈர்த்ததாகச் சொல்கிறார்க்ள்.  அவர்களிடம் முன்னேற்றம் காணும்போது, பெற்றோர் மகிழ்ச்சி அடைகிறார்கள்.

  மன அழுத்தத்தைத் தீர்க்க இசை ஒன்றுதான் வழி.  அது அவர்களை அமைதிப்படுத்துகிறது.  இசை அவர்களுடைய ஹைப்பர் ஆக்டிவிடியை - குறைத்துக் கட்டுப்படுத்துகிறது.  அவர்கள் மனத்தில் ஓர் ஒத்திசைவை உண்டாக்குகிறது.  கேட்பது மூலமும், கற்பது மூலமும் அவர்கள் மனத்தை ஒருவழிப்படுத்தி, அவர்களை ஒரு விஷயத்தில் போகஸ் செய்ய முடிகிறது.

  மேடையில் ராம நாடகக் கீர்த்தனைகளை கிருஷ்ணகுமார் பாடுவது இது இரண்டாவது முறை.  சென்ற வருடம் அவர் கணேஷுடன் சேர்ந்து நந்தனார் சரித்திர கீர்த்தனைகள் பாடினார்.  வயலின், மிருதங்கம்,

கஞ்சிரா என்று அமர்க்களமான பக்க வாத்தியங்கள். ""எங்கள் வாழ்க்கையில் ஒரு புதிய அர்த்தத்தை இப்போது தெரிந்து கொண்டோம்'' என்று கிருஷ்ணகுமார் பெற்றோர் நெகிழ்ந்து போய்ச் சொன்னார்களாம். 

  லட்சுமி மோகனிடம் மூன்று வயது முதல் 40 வயதுவரையுள்ள ஸ்பெஷல் சில்ட்ரன் இசை கற்று வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.