நீங்கள் இந்த உலகை ஆண்டால், உங்கள் செயல்பாடுகள் எப்படி இருக்கும்? என பிரபல கிரிக்கெட் வீராங்கனை மித்தாலி ராஜிடம் "ரீடர்ஸ் டைஜஸ்ட்' கேள்வி எழுப்பியிருந்தது. அவர் கூறிய கருத்துகள் இதோ. இவற்றுடன் உங்களால் ஒத்துப்போக முடிகிறதா பாருங்கள்:
குரல் எழுப்பாதவர்கள், குரல்களை எழச் செய்வேன்
சிலர், தாங்கள் பேசினாலே, தங்களை ஓரம் கட்டிவிடுவார்கள் என பயந்து பேசாமல் இருப்பர். அவர்களை தட்டிக் கொடுத்து பேச வைப்பேன். சிலர் வேண்டுமென்ற அமைதி காப்பர். அவர்கள் வாயையும் திறக்க வைத்து பேச தூண்டுவேன். அதே சமயம் உண்மைகளையும், கருத்துகளையும், திரித்துக் கூறுபவர்களை விடமாட்டேன். அவர்களுடைய சலுகைகளை பறிப்பேன். என்னுடைய நிர்வாகத்தில், வேண்டியவர் வேண்டாதவர் கிடையாது. எல்லாரும் சமம். அனைவரும் கருத்து தெரிவிக்கலாம். கிண்டல் அடிக்கலாம். அவர்கள் பேச்சுக்கும், எழுத்துக்கும் நையாண்டிகளுக்கும் தடை இருக்காது.
சாமான்யனை மறக்கலாகாது
பிரபலங்கள் தரும் பரபரப்புகளில் சாதாரணமானவர்கள் மறக்கடிக்கப்படுகின்றனர். ஒரு சாதாரண மனிதனுக்கு வாழ்க்கை, தினமுமே சவால் தான். என்னுடைய உலகத்தில் சாதாரண மனிதர்களுக்கே முன்னுரிமை. அவர்களை, ஊர் அறிய ரோல் மாடல்கள் ஆக்கி, ஆவர்களிடமுள்ள கற்பனைகள், திறமைகளைக் கண்டுபிடித்து ஊக்குவித்து, வெற்றிப் பாதைக்கு உயர்த்துவேன்.
குழந்தைகள் மகிழ்ச்சியாக இருக்கணும்
என்னுடைய உலகில், பள்ளிகள் அதிகாலையில் தொடங்காது. குழந்தைகளை மேலும் கொஞ்ச நேரம் கூடுதலாக தூங்கவிடுவேன். கனமான பள்ளி புத்தக-நோட்டு பையையும், அதிகப்படியான ஹோம் ஓர்க் கொடுப்பதற்கும் தடை விதிப்பேன். குழந்தைகள், தங்கள் இளமை பருவத்தை அனுபவித்து ரசிக்க வேண்டும். அதற்கு ஏற்ப பள்ளியை மாலையில் சீக்கரம் மூடி. விளையாட போதுமான நேரம் ஒதுக்குவேன்.
தனித் திறமைக்கே அங்கீகாரம்
தனிமனிதர் திறமைகள் அங்கீகரிக்கப்பட்டு, இணைந்து செயல்படும்போது அங்கீகரிக்கப் பட வேண்டும். அதன் மூலம் கூடுதல், வெற்றி வாய்ப்பு வரும். மாறாக, தனிமனிதர் திறமைகள் கண்டுகொள்ளப்படாமல் நடக்கும் கூட்டு முயற்சிகளை ஆதரிக்க மாட்டேன். உழைப்பவர்களிடையே ஆரோக்கியமான போட்டி தேவை. அது கல்லூரி துவங்கி, பணிபுரியும் இடம் வரை கடை பிடிக்கப்பட்டால், நிச்சயம் தனிமனிதர் திறமை பளிச்சிடும்.
அன்பு மற்றும் பொறுமையை அனைவரும் கடைபிடிக்க வேண்டும்
ஆண், பெண் பாரபட்சம் காட்டமாட்டேன். மக்கள் ஒருவரை ஒருவர் அன்புடன் அணுக வேண்டும். அவசியமானால், பால் வேறுபாடு தடை செய்வேன். சமூக நீதியை அனைவருக்கும் நிலைநாட்டுவேன். ஆண்கள், பெண்கள், குழந்தைகள் அனைவரும் ஒற்றுமையுடன் வாழும் சூழலை உருவாக்குவேன். அதேசமயம் அவர்களிடையே பொறுமையின் அவசியத்தை வலியுறுத்துவதுடன், பலவிதமான வாழ்க்கை, கலாசாரம் மற்றும் மதங்களை ஏற்று சகிப்புத்தன்மையுடன் நடக்கவும் நடவடிக்கை எடுப்பேன்.
பூமியை காப்போம்
சுற்றுச்சூழலை பாதுகாக்க இன்று பல பிரசாரங்கள் நடக்கின்றன. அதனை ஏற்று மக்களும் சிலகாலம் பின்பற்றுகிறார்கள். பிறகு அதனை மறந்து, தங்களுடைய தினசரி காரியங்களில் முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு விடுகின்றனர். மக்கள் இயற்கையையும் காட்டு விலங்குகள் வாழ்க்கையையும் பாதுகாக்க, பிரசாரம் செய்வதுடன், அதில் அவர்களையும் ஈடுபட வைத்து, இயற்கை நமக்கு அளிப்பதைவிட, கூடுதலாக திருப்பித் தர, நடவடிக்கை எடுக்க தூண்டுவேன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தேர்தலைப் புறக்கணித்த வேங்கைவயல் மக்கள்!

தமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! பிற்பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு! - நேரலை!
ஜனநாயகக் கடமையாற்றிய திரை பிரபலங்கள்!

அரசியலுக்கு வந்தால் விமர்சனங்கள் இருக்கும்! வாக்களித்த பிறகு சிம்பு
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


