இந்தியாவின் முதல் பெண் போர் விமானி!

இந்திய ராணுவத்தின் மூன்று படைகளில் ஒன்றான விமானப் படையில், போர் விமானங்களை இயக்கும் பெண் விமானிகளை பணியில் அமர்த்தலாம் என்று 2016இல் மத்திய பாதுகாப்பு அமைச்சகம் ஓர் அதிரடி முடிவை எடுத்தது.
இந்தியாவின் முதல் பெண் போர் விமானி!
Updated on
1 min read

இந்திய ராணுவத்தின் மூன்று படைகளில் ஒன்றான விமானப் படையில், போர் விமானங்களை இயக்கும் பெண் விமானிகளை பணியில் அமர்த்தலாம் என்று 2016இல் மத்திய பாதுகாப்பு அமைச்சகம் ஓர் அதிரடி முடிவை எடுத்தது. அந்த முடிவின் அடிப்படையில், இந்திய விமானப்படையில் மோகனா சிங், பவானா காந்த் மற்றும் அவானி சதுர்வேதி ஆகிய மூன்று இளம் பெண்கள் பறக்கும் அதிகாரிகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 
தொடர்ந்து இந்த மூன்று பெண்களுக்கு போர் விமானத்தைத் திறம்பட இயக்க பல கட்டங்களாக சிறப்புப் பயிற்சிகள் அளிக்கப்பட்டன. பயிற்சியின் முடிவில் இந்த மூன்று வீராங்கனைகளை போர் விமானிகளாக அதிகாரப்பூர்வமாக இந்திய விமானப் படை அறிவித்தது. இந்த வீராங்கனைகளுக்கு இந்தியாவின் முதல் மூன்று போர் விமானிகள் என்ற பெருமை கிடைத்தாலும், இந்த மூன்று பேரில் முதல் போர் விமானியாக முந்திக் கொண்டிருப்பது அவானி சதுர்வேதி தான். 

குஜராத் மாநிலத்தில் உள்ள ஜாம்நகர் விமானப்படைத் தளத்தில் "மிக் 21' ரக போர் விமானத்தைத் தனியாக இயக்கி வானில் பறந்து, "மிக்' ரக போர் விமானத்தைத் தனியாக இயக்கிய இந்தியாவின் முதல் பெண் விமானி என்ற பெருமையை அவானி சதுர்வேதி பெற்றுள்ளார்.

மத்தியப்பிரதேசத்தில் ஒரு கிராமத்தில் பிறந்த அவானி, தூரிகை ஏந்தி ஓவியங்கள் வரைந்தும், வயலின் வாசித்தும் வளர்ந்தவர். தனியாக போர் விமானத்தை ஓட்டினாலும், பல்வேறு பயிற்சிகள் இன்னும் பாக்கியுள்ளதாம். அதையும் வெற்றிகரமாக முடித்துவிட்டால் இந்திய விமானப் படையின் "சிறுத்தை அணி'யின் கீழ் இயங்கும் போர் விமானத்தை ஓட்டும் முழுநேர போர் விமானியாக அவானி சதுர்வேதி மாறுவார்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com