காவல்துறையில் பெண்கள்!

உலகில் முதன்முதலில் லண்டன் மாநகர காவல் துறையில்தான் 1916 -ஆம் ஆண்டு 30 பெண்காவலர்கள் சேர்த்துக் கொள்ளப்பட்டனர்.

உலகில் முதன்முதலில் லண்டன் மாநகர காவல் துறையில்தான் 1916 -ஆம் ஆண்டு 30 பெண்காவலர்கள் சேர்த்துக் கொள்ளப்பட்டனர்.

* இந்தியாவில், 1937 - ஆம் ஆண்டு கேரள மாநிலம் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் முதன்முதலில் காவல்துறையில் பெண்களையும் சேர்த்து கொண்டார்கள்.

* 1948 - ஆம் ஆண்டு டெல்லியில் ஒரே பெண் உதவி ஆய்வாளர் தலைமையில் பெண்கள் காவலர் பிரிவு ஏற்படுத்தப்பட்டது.

* 1973- ஆம் ஆண்டு பெண்களை முழுமையாகக் கொண்ட காவல் நிலையம் கேரள மாநிலம் கொல்லங்கோட்டில் துவங்கப்பட்டது.

* தமிழ்நாட்டில் 1973- ஆம் ஆண்டு ஒரு பெண் உதவி ஆய்வாளர், ஒரு தலைமைக்காவலர், இருபது பெண்காவலர்கள் பணியில் அமர்த்தப்பட்டனர். 

* 1992- ஆம் ஆண்டு சென்னை ஆயிரம் விளக்கில் முழுவதும் பெண்களைக் கொண்ட அனைத்து மகளிர் காவல் நிலையம் தொடங்கப்பட்டது.
- கோட்டை செல்வம்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com