பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

மேடை நாடகத்தில் ஒரு சாதனையாளர்!

பெண்களைப் பொருத்தவரை நாடகம், இசை மற்றும் நடனம் போன்றவைகளில் ஒரு சிலரால் மட்டுமே சாதனை படைக்க முடிகிறது.

News image
Updated On :26 ஆகஸ்ட் 2020, 12:30 am

அ. குமார்


பெண்களைப் பொருத்தவரை நாடகம், இசை மற்றும் நடனம் போன்றவைகளில் ஒரு சிலரால் மட்டுமே சாதனை படைக்க முடிகிறது. கர்நாடக மாநிலம் கொப்பல் மாவட்டத்தில் உள்ள பன்னி கொப்பா கிராமத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் சுதா முட்டல். இதுவரை 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாடகங்களில் நடித்ததோடு, ஐந்நூறுக்கும் மேற்பட்ட கலாசார நிகழ்ச்சிகளையும் நடத்தியுள்ளார்.

"நடிகர்களுக்கு நாடகமேடை என்பது புனிதமான இடமாகும். ஓட்டுநர் ஆசனத்தில் இருப்பதால் அவர்களுக்கு பொறுப்பு அதிகம்' என்று ஆஸ்திரேலிய- இத்தாலி நடிகை கிரிட்டா ஸ்காச்சி கூறியது. சுதா முட்டல் வாழ்க்கையைப் பொருத்தவரை உண்மையாகும். இந்த சாதனையை படைக்க இவர் எத்தனை இன்னல்களை சந்திக்க வேண்டியதாயிற்று என்பதை அவரே இங்கு விவரிக்கிறார்:

""பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு எவ்வித பாரபட்சமும் காட்டுவதில்லை. சரிசமமாக நடத்துகிறோம் என்று கூறுவதை யாரும் நம்ப மாட்டார்கள். இன்றளவும் அந்த வேறுபாடு இருந்து வருகிறது என்பது உண்மை. நான் சிறு வயதில் அரசு பள்ளியில் படித்தபோது, என் போன்று பிற்படுத்தப்பட்ட மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய சமூகத்தை சேர்ந்த மாணவிகளை வகுப்பில் கடைசி பெஞ்சில்தான் உட்காரவைப்பார்கள். இதன்காரணமாக நானும் சில மாணவிகளும் ஏழாம் வகுப்போடு பள்ளிக்குச் செல்வதை நிறுத்திக் கொண்டோம். வயல்களில் ஏதாவது வேலை செய்து பிழைக்கலாமென்று நினைத்தோம். அதன்மூலம் கிடைக்கும் வருமானம் குறைவு என்றாலும் அந்த நேரத்திற்கு எங்கள் குடும்பத்தினர் பசியை போக்கிக் கொள்ள போதுமானதாக இருந்தது.

எவ்வித சிரமும் இல்லாமல் வாழ்க்கை சென்று கொண்டிருந்தது. ஆனால் தொடர்ந்து படிக்க முடியவில்லையே என்ற ஏக்கம் உள்ளுக்குள் இருந்தது. அந்த சமயத்தில் எங்கள் கிராமத்தில் "கஸ்தூரிபா காந்தி பாலிகா வித்யாலயா' என்ற அமைப்பை மத்திய அரசு தொடங்கியது. ஏழைக்குடும்பங்களில் படிப்பை பாதியில்விட்ட மாணவிகள் மீண்டும் கல்வி கற்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தனர். நான் படித்துக் கொண்டிருந்த பள்ளியைச் சேர்ந்த ஆசிரியை ஒருவர் என்னையும் அந்த பள்ளியில் சேர்த்துவிட்டார். அதுவே என் வாழ்க்கைக்கு திருப்புமுனையாக அமைந்தது. மீண்டும் படிக்கத் தொடங்கினேன்.

அந்த பள்ளியில் கல்வியுடன் யோகா, நடனம், நாடகம், இசை போன்றவைகளை கற்றுக் கொடுத்தனர். நானும் ஆர்வத்தோடு கற்றுக் கொண்டேன். பத்தாம் வகுப்பு முடித்தவுடன் கொப்பல் நகரத்தில் இருந்த அரசு கல்லூரியில் சேர்ந்து பியூசி முடித்தேன்.

மேற்கொண்டு படிக்க நான் விரும்பியபோது, "சகி' என்ற அரசு சாரா தொண்டு நிறுவனத்தில் கிராமத்துப் பெண்களையும், இளைஞர்களையும் மேம்படுத்தும் பணியாளர் வேலை கிடைத்தது. அந்த அமைப்பில் நாடகம், நடனம் போன்றவைகளிலும் பயிற்சி அளித்தனர். பள்ளியில் படிக்கும்போதே நாடகத்தில் நடிக்கும் ஆர்வம் எனக்கிருந்ததால், என் திறமைகளை வெளிப்படுத்தும் வாய்ப்பாக கருதினேன், குந்தாபுராவில் உள்ள "ரங்க அத்யாயனா கேந்திரா'வில் சேர்ந்து நாடகத் துறையில் பட்டம் பெறும்படி அறிவுறுத்தினர்.

நாடகத்தில் நடிப்பது எதிர்காலத்திற்கு தேவையான வருமானத்தைக் கொடுக்காது என்று கருதிய என் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும் நான் பிடிவாதமாக நாடகத் துறையில் பயிற்சி பெற விரும்பினேன்.
நாடகத்தில் நடிக்கும்போது வசன உச்சரிப்பு, முக பாவம் எப்படி இருக்க வேண்டும் போன்ற அடிப்படை விஷயங்களை கற்றுக் கொண்டேன். பட்டம் பெறுவதற்கு முன்பே 2010 - ஆம் ஆண்டு பிரபல நாடக கலைஞர் பி.வி.கரந்த் உருவாக்கிய மைசூரில் உள்ள "ரங்கயானா' என்ற நாடகக்குழுவில் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு தேடி வந்தது.

ராஷ்ட்ரிய கவி குவெம்பு எழுதிய "மலே காலல்லி மதுமகளு' என்ற நாவலை தழுவி 300 கலைஞர்கள் பங்குபெறும் ஒன்பது மணி நேரம் தொடர்ந்து நடக்கும் நாடகத்தில் எனக்கும் நல்ல கதாபாத்திரம் கிடைத்ததால் ஆர்வத்துடன் நடித்தேன்.

ஐம்பதுக்கும் மேற்பட்டு நடந்த இந்த நாடகத்தின் மூலம் எனக்கு நல்ல மேடை அனுபவம் கிடைத்தது. கூடவே என் நடிப்புத் திறமைக்கான பட்டத்தையும் பெற்றேன்.

பின்னர் நான் விரும்பியபடி நாடகத்துறையில் முழு கவனத்தையும் செலுத்தத் தொடங்கினேன். கர்நாடகாவில் மட்டுமின்றி நாடு முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாடகங்கள் நடத்தியதால் நாடகத்துறையில் நான் எதிர்பார்த்த அங்கீகாரமும், பாராட்டும் கிடைத்தது.

கிராமத்தில் என்னுடைய பெற்றோர் மட்டுமின்றி கிராம மக்களும், இளம் வயதினருக்கு நான் ஒரு எடுத்துக்காட்டாக இருப்பதாக கூறி பாராட்டினர். இப்போது பொருளாதார ரீதியில் வசதியாக இருந்தபோது, சமூக வேறுபாடின்றி அனைவராலும் ஏற்றுக் கொள்ளும் உயர்வைப் பெற்றுள்ளேன்.

2018 - ஆம் ஆண்டு நானே துணிந்து "அக்ளாதவ்வா சாவித்திரிபாய் பூலே கலாரங்கா சமஸ்தே' என்ற பெயரில் அரசு சாரா தொண்டு நிறுவனமொன்றை துவங்கி பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த பெண்களையும், ஆண்களையும் சேர்த்து நாடகங்களை நடத்தத் தொடங்கினேன்.

கூடவே படிப்பறிவு இல்லாத பெண்களுக்கு கன்னட மொழியை கற்பிக்க இரவு பாட சாலையை தொடங்கினேன். 60-க்கும் மேற்பட்ட பெண்கள் இதில் சேர்ந்து கன்னடம் படிக்கவும், எழுதவும் கற்றுக் கொண்டனர். பொருளாதாரத்தில் பின் தங்கிய சமூகப் பெண்களுக்கு நடனம், நடிப்பு, இசை போன்றவைகளையும் கற்றுத்தருகிறேன்.

இது மட்டுமின்றி ஆண்கள் மட்டுமே பங்கேற்று நடத்தும் பாரம்பரிய கலைகளை பெண்களுக்கும் கற்றுத் தருகிறேன். என்னுடைய குழுவினர் தற்போது பல இடங்களுக்குச் சென்று நாடகங்களை நடத்துகின்றனர்'' என்றார். இவர் கன்னடத்தில் எழுதிய கவிதைகள் "மௌன கொம்பய' மாத்து என்ற தலைப்பில் புத்தகமாக வெளிவந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.