பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

வங்க மொழியில் ராமாயணம் படைத்த கவி சந்​தி​ரா​வதி

கி.பி. 16-ஆம் நூற்​றாண்​டில் கிழக்கு வங்​கா​ளத்​தில் உள்ள புலே​சு​வ​ரம் என்ற அழ​கிய சிறு கிரா​மத்​தில் கவி வம்​சீ​தா​சர் என்ற பிர​சித்தி பெற்ற கவி​ஞர் வாழ்ந்து வந்​தார். அவ​ருக்கு மக​ளா​கப் பிறந்​த​வர

News image
Updated On :26 ஆகஸ்ட் 2020, 12:30 am

டி.எம். இரத்தினவேல்

கி.பி. 16-ஆம் நூற்​றாண்​டில் கிழக்கு வங்​கா​ளத்​தில் உள்ள புலே​சு​வ​ரம் என்ற அழ​கிய சிறு கிரா​மத்​தில் கவி வம்​சீ​தா​சர் என்ற பிர​சித்தி பெற்ற கவி​ஞர் வாழ்ந்து வந்​தார். அவ​ருக்கு மக​ளா​கப் பிறந்​த​வர் சந்​தி​ரா​வதி. ஒரே மகள் தந்​தை​யைப் போன்றே அவ​ரும் கவிதை புனை​வ​தி​லும், பாடு​வ​தி​லும் சிறந்து விளங்​கி​னார். அந்​தக் காலத்​தில் வங்​கா​ளத்​தில் வாழ்ந்த ஆண் கவி​ஞர்​க​ளுக்கு எந்த விதத்​தி​லும் குறைந்​த​வர் அல்ல சந்​தி​ரா​வதி.

சந்​தி​ரா​வதி இயற்​றிய பாடல்​க​ளின் தொகுப்​பு​தான் "மய்​மன்​சிங்' பாடல்​கள் என்ற நாடோ​டிப் பாடல் கதை​கள். வங்​கா​ளத்​தில் மிக​வும் பிர​ப​ல​மா​னவை. அவர் இயற்​றிய இந்​தக் கவி​தை​க​ளில் அடிப்​ப​டை​யாக இருப்​பவை காத​லும் அதன் துன்ப விளை​வு​க​ளும்​தான். அவர் இயற்​றிய கதைப் பாடல்​க​ளில் சிறந்து விளங்​கி​யது திரு​டன் கேனா​ரா​மின் கதை.
கொள்​ளைக்​கா​ரன் ஒரு​வன், சந்​தி​ரா​வ​தி​யின் தந்​தை​யான வம்​சீ​தா​ச​ரின் இனிய பாடல்​க​ளைக் கேட்டு மன​மு​ரு​கித் தீய நெறி​க​ளி​லி​ருந்து விடு​பட்டு தானும் ஒரு சிறந்த பக்​த​னாக மாறி​வி​டு​கி​றான். இந்த அற்​பு​த
​மான கதைப்​பா​டலை எழு​தி​ய​வர் கவி வம்​சீ​தா​ச​ரின் மகள் சந்​தி​ரா​வதி. அவர் வாழ்ந்​ததே கொஞ்​ச​கா​லம்​தான் என்​றா​லும் அவர் எழு​திய நூல்​க​ளின் புகழ் இன்​றும் மங்​கா​மல் ஒளிர்​கி​றது.
நிகழ்ச்​சி​களை வர்​ணிப்​ப​தும், குண​சித்​தி​ரம் தீட்டு​வ​தும், தங்கு தடை​யற்ற எளிய நடை​யும் அவ​ரு​டைய கவி​தை​யி​லுள்ள சிறப்பு அம்​சங்​க​ளா​கும். அவர் எழு​திய "ராமா​ய​ணம்', "திவான் பாப்னா', "கேனா​ரா​மின் கதை' இவை​க​ளில் இந்த அம்​சங்​கள் துள்ளி நடை போடு​வ​தைக் காண​லாம்.
இளம் வய​தில் தந்தை வம்​சீ​தா​ச​ரின் பூஜைக்​கா​கத் தினந்​தோ​றும் அவர் பூப்​ப​றிக்க அக்​கம் பக்​கம் உள்ள தோட்டங்​க​ளுக்​குச் செல்​வது வழக்​கம். அப்​ப​டிச் செல்​லும்​போது ஒரு​நாள் அவர் ஜயா​னந்த சக்​ர​வர்த்தி என்ற அழ​கிய இளை​ஞ​னைக் கண்​டார்.
அவ​னது அழ​கில் மயங்​கி​னார். கண்​ட​தும் காதல் கொண்​டார். அவ​னும் அவர் மீது மிகுந்த பிரேமை கொண்​டான்.
கவி சந்​தி​ரா​வ​தி​யும் அவ​னைப் பார்த்த நாள் முத​லாக அவ​னையே தன் கண​வ​னாக ஏற்​ப​தென்று முடிவு செய்​து​விட்​டார். அந்த வாலி​பக் கவி​ஞ​னும் அவரை மணம் செய்து கொள்ள தம் உள்​ளக் கருத்தை அவ​ரி​டம் தெரி​வித்​தான்.
சந்​தி​ரா​வ​தி​யின் தந்தை ஒரு​வி​த​மாக அவ​ரு​டைய உள்​ளக் கருத்தை அறிந்து கொண்டு அவ​னுக்கே மணம் முடிக்க இசைந்​தார். எல்லா ஏற்​பா​டு​க​ளும் நடந்​து.
ஆனால், விதி வேறு​மா​திரி நினைத்​தது. மண​நா​ளுக்கு முதல்​நாள் இரவு ஜயா​னந்த சக்​ர​வர்த்தி அந்​நிய மதத்​தைச் சேர்ந்த ஒரு கட்ட​ழ​கி​யின் மேல் மோகங்​கொண்டு அவ​ளோடு ஓடிப் போய்​விட்​ட​தாக செய்தி வந்​தது.
கவி சந்​தி​ரா​வதி துடி​து​டித்​துப் போய்​விட்​டார். அவ​ருக்கு உல​கமே வெறுத்​தது. தன் விதியை எண்​ணிக் கண்​ணீர் வடித்​தார். அதன்​பி​றகு, வேறொரு வரை மணந்து கொள்ள அவர் விரும்​ப​வில்லை. காலம் முழு​வ​தும் கன்​னி​யா​கவே இருப்​ப​தா​கத் தன் தந்​தை​யி​டம் சொன்​னார்.
தந்​தை​யும் சரி என்று அவ​ரது முடிவை ஏற்​றுக் கொண்​டார். அவர் தன் வாழ்​நாட்​களை அமை​தி​யா​கக் கழிப்​ப​தற்​காக ஒரு சிறு கோயி​லைக் கட்டிக் கொடுத்​தார். அதில் அவர் சிவ பெரு​மா​னின் திரு​வு​ரு​வத்​தைப் பிர​திஷ்டை செய்​தார். நாளும் மன​மு​ருகி வழி​பட்டு வந்​தார்.
தந்தை வம்​சீ​தா​ச​ரின் கட்ட​ளைப்​படி ராமா​ய​ணத்தை எளிய நடை​யில் ஓய்வு நேரங்​க​ளில் எழுதி வந்​தார். அவ​ரு​டைய கவிதை வரி​கள் எளிய நடை​யில் எல்​லோ​ரும் விரும்​பும் வண்​ணம் இருந்​தது. கவி சந்​தி​ரா​வ​தி​யின் புகழ் நாடெங்​கும் பர​வி​யது.
சில ஆண்​டு​க​ளுக்​குப் பின் ஜயா​னந்த சக்​ர​வர்த்தி சோகத்​து​டன் திரும்​பி​வந்​தான். அந்​நிய மதத்​துக் கட்ட​ழ​கி​யி​டம் மோகம் தீர்ந்​து​விட்​டது. "என்னை மன்​னித்து ஏற்​றுக் கொள். இனி நான் உன் அடிமை' என்று உறுதி கூறித் தன்னை மணந்து கொள்​ளும்​படி வேண்​டி​னான்.
சந்​தி​ரா​வதி மணம் இள​கி​னார். தந்​தை​யா​ரி​டம் அவ​னு​டைய வேண்​டு​கோ​ளைச் சொன்​னார். அவன் நடத்​தை​யில் அரு​வ​ருப்​ப​டைந்த அவ​ரது தந்தை மறுத்து விட்ட​தோடு அவனை விரட்​டி​யும் விட்டார்.
கவி சந்​தி​ரா​வதி நினை​வா​கவே அவன் பித்​துப் பிடித்​த​வன்​போல் அலைந்து திரிந்​தான். ஒரு​நாள் ஆற்​றில் விழுந்து உயிர் துறந்​தான். அவ​னு​டைய சட​லம் ஆற்​றில் மிதப்​ப​தைக் கண்ட சந்​தி​ரா​வதி மனம் வெதும்பி மன​நோ​யால் மிக விரை​வில் மாண்டு போனார்.
கவி சந்​தி​ரா​வதி இறந்து 400 - ஆண்​டு​க​ளுக்கு மேல் ஆகின்​றன. இன்​றும் கிழக்கு வங்​கா​ளத்​தில் "மய்​மன்​சிங்' என்ற புகழ்​பெற்ற பாடல்​க​ளைப் பக​லில் ஓய்வு நேரங்​க​ளில் பெண்​கள் பாடி மகிழ்​கி​றார்​கள்.
கிழக்கு வங்​கா​ளத்​தில், சந்​தி​ரா​வதி கதை என்று வழங்​கும் சோக​ம​ய​மான ஒரு பாடலை அந்​தக் கிரா​ம​வா​சி​கள் திறந்த வெளி​யில் பந்​த​லிட்​டுப் பக்தி சிரத்​தை​யு​டன் கூடிப் பாடு​வதை இன்​றும் காண​லாம். கவி​சந்​தி​ரா​வதி தனது கவி​தை​கள் மூலம் இன்​றும் வாழ்ந்து வரு​கி​றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.