மின்னல்கள்!
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும், புதிய தொடர் "நீதானே எந்தன் பொன்வசந்தம்' இந்த தொடரின் மூலம் நாயகியாக அறிமுகமாகியிருப்பவர் தர்ஷணா.


ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும், புதிய தொடர் "நீதானே எந்தன் பொன்வசந்தம்' இந்த தொடரின் மூலம் நாயகியாக அறிமுகமாகியிருப்பவர் தர்ஷணா. தனது சின்னத்திரை என்ட்ரி குறித்து அவர் கூறியதாவது:
""எனது பூர்வீகம் கேரளா. படித்தது வளர்ந்தது எல்லாம் சேலம். அப்பா மருத்துவர். அதனால் நானும் மருத்துவம் படிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார். அப்பாவின் ஆசைக்காக பல் மருத்துவம் படித்தேன். இருந்தாலும், சின்ன வயதிலிருந்தே மாடலீங் செய்வதிலும், நடிப்பிலும் ஆசை இருந்தது. இதனால் அவ்வப்போது, என்னுடைய புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிடுவது வழக்கம். அதன்மூலம் கிடைத்ததுதான், நீதானே எந்தன் பொன்வசந்தம் தொடரின் வாய்ப்பு. "ஜோதே ஜோதேயலி' என்ற கன்னட தொடரின் ரீமேக் தான் இந்தத் தொடர். அனு என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறேன். 40 வயது ஆணுக்கும், 20 வயது பெண்ணுக்கும் இடையில் ஏற்படும் காதலை மையமாக கொண்டதுதான் இந்தக் கதை.
எனது முதல் தொடரே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுத் தந்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது'' என்றார்.

சன் டிவியில் ஒளிபரப்பான அசத்தப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் தொகுப்பாளினியாக அறிமுகமானவர் மகேஸ்வரி. அதன் பின்னர் இசைஅருவி தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றி வந்தார். இதற்கிடையில் அவருக்கு திருமணம் ஆனதால் பிரேக் எடுத்துக்கொண்ட மகேஸ்வரி. ஒரு குழந்தை பிறந்த பிறகு மீண்டும் தொலைக்காட்சியில் பணிபுரிய தொடங்கினார். இதற்கிடையில், "குயில்', "மந்திர புன்னகை", " சென்னை 28 -2' போன்ற திரைப் படங்களிலும், "தாயுமானவன்', "புதுக்கவிதை' போன்ற ஒரு சில தொடர்களிலும் நடித்திருக்கிறார்.
சமீபத்தில் ஜி தமிழ்' சேனலில் புதிதாக தொடங்கியிருந்த "பேட்டராப்' நிகழ்ச்சியை தீபக்குடன் இணைந்து தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிலையில் கரோனா பொதுமுடக்கத்தால், பெரும்பாலான சின்னத்திரை நிகழ்ச்சிகள் நிறுத்தப்பட்டிருப்பதால், தற்போது சமூக வளைதளத்தில் ஆக்டிவாக இருக்கிறார் மகேஸ்வரி. விதவிதமாக போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் சேலை அணிந்து அவர் வெளியிட்டிருந்த புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரவி வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...