பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

இந்த உணவுகளை சூடுபடுத்தினால் விஷமாக மாறலாம்!

பெரும்பாலானோர் எப்போதும் சூடாகச் சாப்பிட வேண்டும் என்ற எண்ணத்தில் உணவுகளை மீண்டும், மீண்டும் சூடுபடுத்திச் சாப்பிடுவதால், அதிலுள்ள சத்துகள் குறைந்து, ஃபுட் பாய்சனில் தொடங்கி

News image
Updated On :26 ஆகஸ்ட் 2020, 12:30 am

ஏ.எஸ்.கோவிந்தராஜன்


பெரும்பாலானோர் எப்போதும் சூடாகச் சாப்பிட வேண்டும் என்ற எண்ணத்தில் உணவுகளை மீண்டும், மீண்டும் சூடுபடுத்திச் சாப்பிடுவதால், அதிலுள்ள சத்துகள் குறைந்து, ஃபுட் பாய்சனில் தொடங்கி இதய நோய், புற்றுநோய் போன்ற பலவித நோய்களுக்கு வழிவகுக்கிறது. எனவே அந்த வகையில் மீண்டும் சூடுபடுத்திச் சாப்பிடக் கூடாத உணவுகள்

சமையல் எண்ணெய் :

சமையல் எண்ணெய்யை திரும்பத் திரும்ப சூடுபடுத்திப் பயன்படுத்தக் கூடாது. ஏனெனில் எந்த வகை சமையல் எண்ணெய்யாக இருந்தாலும், அதைச் சூடுபடுத்தும்போது, அந்த எண்ணெய்யின் அடர்த்தி அதிகரித்து, பயன்படுத்த முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுவிடும். மேலும், இதனால் புற்றுநோய் மற்றும் இதய நோய்கள் ஏற்படும்.

சாதம் :

Story image

நாம் அன்றாடம் அதிகமாக எடுத்துக்கொள்ளும் சாதத்தை மீண்டும் சூடுபடுத்திச் சாப்பிட்டால், அதில் நச்சுத்தன்மை அதிகரித்து, ஃபுட் பாய்சனாக மாறிவிடும்.

உருளைக்கிழங்கு :

Story image

உருளைக்கிழங்கை சமைத்து ஃப்ரிட்ஜில் வைத்துவிட்டு, தேவைப்படும்போது சாப்பிடுவதால், சமைத்த உருளைக்கிழங்கில் உள்ள பாக்டீரியாக்கள் அதிலேயே தங்கி நச்சுத் தன்மை உள்ளதாக மாறிவிடும். இதனால் வாந்தி, குமட்டல் போன்ற உடல்நல பாதிப்புகள் உண்டாகும்.

காளான் :

Story image

காளானில் புரோட்டீன் அதிகமாக உள்ளது. எனவே காளானைச் சமைத்ததும், சாப்பிடுவதே உடலுக்கு நல்லது. ஏனெனில், அதை இரண்டாம் முறை சூடுபடுத்தும்போது அது விஷத்தன்மை உள்ளதாக மாறி செரிமானக் கோளாறுகள் மற்றும் வயிற்று உபாதைகளை உண்டாக்கும்.

கீரை :

Story image

கீரையில் அதிகளவு இரும்புச்சத்து மற்றும் நைட்ரேட் உள்ளது. எனவே இதை சூடுபடுத்தும்போது, நைட்ரேட் ஆனது நைட்ரைட்டாக மாறி, புற்றுநோயை உண்டாக்கும். அதுமட்டுமின்றி கீரை உணவுகளை மீண்டும் சூடுபடுத்திச் சாப்பிடுவதால், செரிமான பிரச்னைகள், குடல் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.