சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து!இந்திய பங்குச் சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,600 புள்ளிகள் சரிவு!ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது! கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்!
/

வெஜிடபிள் இட்லி

புழுங்கலரிசியைத் தனியாகவும், வெந்தயம்,உளுந்தம்பருப்பைச்சேர்த்தும்ஊறவைத்துஎடுத்துஅரைத்து உப்புச்சேர்த்துஎடுத்து வைக்கவும்.

News image
Updated On :8 ஜூலை 2020, 8:57 am

வெஜிடபிள் இட்லி 

தேவையானவை:
புழுங்கலரிசி -1கிண்ணம்
உளுந்தம்பருப்பு-2தேக்கரண்டி
வெந்தயம் -அரைதேக்கரண்டி
நறுக்கிய காய்கறிகலவை
(கேரட், உருளைக்கிழங்கு, பீன்ஸ், 
குடமிளகாய், தக்காளி)-1கிண்ணம்
பச்சைமிளகாய் -2
நறுக்கிய இஞ்சி -சிறியதுண்டு
கொத்துமல்லி, கறிவேப்பிலை -சிறிது
உப்பு -தேவைக்கேற்ப
தாளிக்க:
கடுகு, உளுந்தம் பருப்பு, 
கடலைப்பருப்பு-தலாஅரை தேக்கரண்டி
எண்ணெய் - 2தேக்கரண்டி

Story image

செய்முறை: புழுங்கலரிசியைத் தனியாகவும், வெந்தயம், உளுந்தம்பருப்பைச் சேர்த்தும் ஊறவைத்து எடுத்து அரைத்து உப்புச் சேர்த்து எடுத்து வைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்தவுடன், கடுகு, உளுந்தம் பருப்பு, கலந்துவைக்கவும். கடலைப்பருப்பு, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி,மல்லி கறிவேப்பிலைப் போட்டுத் தாளித்து, அதனுடன் நறுக்கி வைத்துள்ள காய்கறிக்கலவை, உப்புச் சேர்த்து நன்கு வதக்கி எடுத்துக் கொள்ளவும்.இட்லி மாவுடன், வதக்கிய காய்கறிக் கலவையைக் கலந்து இட்லிசுட்டெடுத்து  பரிமாறவும். 


மசாலா இட்லி 


தேவையானவை: 
இட்லிமாவு -4கிண்ணம்
உருளைக்கிழங்கு -2
வெங்காயம் -1
பச்சைமிளகாய் -1
இஞ்சி-சிறிது (பொடித்தது)
மஞ்சள்தூள்,கடுகு, உளுந்தம்பருப்பு-
தலா 1தேக்கரண்டி
கறிவேப்பிலை -சிறிது
எண்ணெய்,உப்பு -தேவைக்கேற்ப

Story image


செய்முறை: அடுப்பில் வாணலிவைத்து, சிறிது எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுந்தம் பருப்பு தாளித்து, அதில் நறுக்கிய பச்சைமிளகாய், இஞ்சி,வெங்காயம், உப்பு சேர்த்து வதக்கவும். அத்துடன் வேகவைத்த உருளைக்கிழங்கையும், மஞ்சள் தூளையும் சேர்த்து நன்கு வதக்கி எடுத்துக் கொள்ளவும். இட்லித் தட்டில்  எண்ணெய் தடவி, முதலில் மசாலாக் கலவையை வைத்து,பின் இட்லி மாவை  விட்டு, வெந்தவுடன் எடுத்தால், வித்தியாசமான சுவையில் மசாலா இட்லி  தயார்.இதற்கு சட்னி எதுவும் தேவையில்லை.

கிரீன் இட்லி 


தேவையானவை: 
இட்லிமாவு -2கிண்ணம்
எண்ணெய் -சிறிது
 உப்பு -தேவைக்கேற்ப
அரைக்க: 
கொத்துமல்லிஇலை-அரைகிண்ணம்
பச்சைமிளகாய் - 2
இஞ்சி -1துண்டு

Story image


செய்முறை: கொத்துமல்லித் தழை, பச்சைமிளகாய், இஞ்சி மூன்றையும்  மிக்ஸியிலிட்டு அரைத்து எடுத்துக் கொள்ளவும்.பின்னர், இட்லி மாவில் உப்பு சிறிது  ர்த்து அரைத்த கொத்துமல்லிக் கலவையைச் சேர்த்து கலந்து கொள்ளவும்.  பின்னர், இட்லித் தட்டில் எண்ணெய் தடவி,இட்லியைச் சுட்டெடுக்கலாம். இட்லி பச்சை நிறத்தில் இருக்கும். கொத்துமல்லி உடம்புக்கு மிகவும் நல்லது.

கருப்பட்டிஇட்லி 


தேவையானவை: 
இட்லிஅரிசி- 4கிண்ணம்
கருப்பட்டி -1கிண்ணம்(பொடித்தது)
பாசிப்பருப்பு -1கிண்ணம்
நெய் - 2தேக்கரண்டி
தேங்காய்த்துருவல் - 1கிண்ணம்
ஏலப்பொடி - 1தேக்கரண்டி
உப்பு - 1சிட்டிகை

Story image

செய்முறை:அரிசி, உளுந்தைக்களைந்துஊறவைத்து, உப்பு போட்டு, இட்லிமாவாக அரைத்துக்கொள்ளவும். 

பாசிப்பருப்பை சுத்தம் செய்து, சிவக்கவறுத்துபாதியளவு வேகவிடவும். தண்ணீரை வடிகட்டி, அதனுடன் பொடித்த கருப்பட்டி, தேங்காய்த் துருவல் ஒரு தேக்கரண்டி நெய், ஏலப்பொடி எல்லாம் கலந்து இறக்கி விடவும். இட்லித்தட்டில் நெய்தடவி, சிறிது மாவைவிட்டு, மத்தியில் கலவையை வைத்துப் பரப்பி, மேலும்சிறிதுமாவைவிட்டு, இட்லிவெந்ததும், எடுத்தால்சத்துள்ள, சுவையான இட்லிதயார். 

-இல.வள்ளிமயில், மதுரை. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.