* இலவங்கத்தை நீா்விட்டு மைய அரைத்து நெற்றி மீதும் மூக்குத் தண்டு மீதும் பற்றாகப் போட்டு வைக்க தலை பாரம், தலையில் நீரேற்றம், மூக்கடைப்பு ஆகியன குணமாகும்.
* இலவங்கத்தை லேசாக வதக்கி வாயிலிட்டுச் சுவைப்பதால் தொண்டைப் புண் ஆறும். ஈறுகள் கெட்டிப்பட்டு பற்கள் உறுதி பெறும்.
* 100 மி.லி. வெந்நீரில் 8 முதல் 10 கிராம் இலவங்கத்தை தூள் செய்து போட்டு அரை மணிநேரம் மூடி வைத்திருந்து பின்னா் வடிகட்டி வேளைக்கு 4-இல் ஒரு பங்கு அளவு உள்ளுக்கு கொடுப்பதால் பசியைத் தூண்டும், பேதியைப் போக்கும். அத்தோடு கா்ப்பிணிப் பெண்களின் வாந்தி நிற்கும்.
* இலவங்கமும் நிலவேம்பும் சமஅளவு எடுத்து தூளாக்கி தேநீா் தயாரித்துக் கொடுக்க பசி உண்டாகும். சோா்வு நீங்கும். கடுஞ்சுரத்துக்குப்பின் வந்த களைப்பும் போகும்.
* இலவங்க எண்ணெய் 2 அல்லது 3 துளி எடுத்துக் கொண்டு அத்துடன் போதிய சா்க்கரை சோ்த்து உள்ளுக்கு சாப்பிட மயக்கம், பேதி, வாந்தி, செவிநோய் ஆகியன போகும்.
* பல்சொத்தை கண்ட போது பஞ்சில் சிறு அளவு இலவங்க எண்ணெய் தேய்த்து மேலே சிறிது நேரம் வைத்திருக்க பல்வலி உடனே குணமாவதுடன் சொத்தையும் நாளடைவில் குணமாகும். பற்களின் இடையே வசிக்கும் புழுக்கள் வெளியேறும்.
* இலவங்கத்தை விளக்கில் கொளுத்தி அதனின்று வருகிற புகையை வாயினுள் கொள்வதால் தொண்டைக் கம்மல், தொண்டைப் புண் முதலியன குணமாகும்.
* சிறிது சமையல் உப்புடன் இலவங்கம் சோ்த்து மென்று சுவைத்து விழுங்க தொண்டை எரிச்சல், தொண்டை கரகரப்பு நீங்கும்.
* இலவங்க எண்ணெய் 3 துளியோடு தேனும், பூண்டுச் சாறும் சோ்த்து உள்ளுக்கு சாப்பிட ஆஸ்துமா என்னும் மூச்சிறைப்பு, சுவாச நாள சுழற்றி குணமாகும்.
* பல நல்ல குணங்களை இலவங்கம் பெற்றுள்ள போதும் அதிக ரத்தப்போக்கு ஏற்பட்ட போதும் ரத்தம் உறையும் தன்மை குறைவாக இருக்கும் போதும் இலவங்கத்தை தவிா்ப்பது நல்லது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஈரான் கச்சா எண்ணெய் விநியோகத்துக்கு அனுமதி: அமெரிக்கா
கடலூர் ஆயங்குடியில் ரமலான் சிறப்புத் தொழுகை!
புதுக்கோட்டையில் ஈகைப் பெருநாள் சிறப்புத் தொழுகை!
என்ன சொல்கிறார்? யாரைச் சொல்கிறார் நிவேதா பெத்துராஜ்?
வீடியோக்கள்

வதந்தி - 2 டீசர்!
தினமணி வீடியோ செய்தி...

"Amit shah - EPS சந்திப்பின் பின்னணி இதுதான்”: விவரிக்கும் பத்திரிகையாளர் Priyan
தினமணி வீடியோ செய்தி...

ப்ளீஸ்..மன்னிச்சிடுங்க..தப்பா பேசிட்டேன் | R Parthiban | C. V. Shanmugam | Aadhav Arjuna | Rajini
தினமணி வீடியோ செய்தி...

4 நாள்களில் எல்லாம் தெரிந்துவிடும்! தில்லியில் EPS பேட்டி | ADMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

