பிணி அகற்றும் சித்த மருத்துவம்!
குடற்புண்ணால் அவதிப்படுபவர்கள் தினமும் சிறிதளவு அகத்திக்கீரையை சமைத்து சாப்பிட்டு வர படிப்படியாக குடற்புண் குணமாகும்.


குடற்புண்ணால் அவதிப்படுபவர்கள் தினமும் சிறிதளவு அகத்திக்கீரையை சமைத்து சாப்பிட்டு வர படிப்படியாக குடற்புண் குணமாகும்.
பப்பாளிப் பழத்தை அடிக்கடி உண்பதை பழக்கப்படுத்திக் கொண்டால் மூல நோய் படிப்படியாக குறைந்து குணமாகும்.
குடிக்கும் தண்ணீர் உள்ள பாத்திரத்தில் நொச்சிப் பூவை போட்டு ஊறவைத்து பின் அந்த தண்ணீரை பருகி வர ரத்தவாந்தி நிற்கும்.
அத்திப்பழத்தை சுத்தம் செய்து ஒரு நாளைக்கு இரண்டு பழம் என்ற அளவில் சாப்பிட்டு வந்தால் நரம்புத் தளர்ச்சி நீங்கும்.
முலாம் பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் சிறு நீரகம், தொடர்பான கோளாறுகள் விரைவில் குணமாகும்.
புதினா இலைகளை இடித்துச் சாறெடுத்து, அத்துடன் பச்சைத் கற்பூரம் சிறிதளவு சேர்த்துக் குழைத்து மூட்டுவலி உள்ள இடங்களில் அழுத்தித் தேய்த்து வந்தால் மூட்டு வலி குணமாகும்.
அகத்திக் கீரையை ஒரு நாள்விட்டு ஒரு நாள் சமைத்துச் சாப்பிட்டு வர ரத்தக் கொதிப்பு படிப்படியாக குணமாகும்.
வெந்தயக் கீரையை சமைத்து உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் இருமல் குணமாகும்.
( "எளிய செலவில் சித்த மருத்துவம்' நூலிலிருந்து)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...