நறுக்கிய வாழைக்காய்களைத் தண்ணீரிலேயே போட்டு வைத்தால் நாலைந்து நாள்களுக்கு கெடாது.
*தக்காளிப் பழங்களை ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் கவிழ்த்து வைத்தால் அதிக நாள் கெடாமல் இருக்கும்.
*பச்சைமிளகாய் ஒரு வாரம் வரை கெட்டுப் போகாமல் இருக்க அதை ஒரு கண்ணாடி பாட்டிலில் போட்டு சிறிதளவு மஞ்சள் பொடியும் சேர்த்துக் காற்றுப் புகாமல் இறுக்கி மூடவும்.
*வெங்காயத்தை நைலான் நூலால் பின்னப்பட்ட பையில் போட்டுக் காற்றோட்டமாகக் கட்டித் தொங்கவிட்டால் நீண்ட நாள்களுக்குக் கெடாமல் இருக்கும்.
* பூரி, சப்பாத்தி மாவு பிசையும் பாத்திரத்தை தண்ணீர் இல்லாமல் நன்கு துடைத்து விட்டு மாவு போட்டு பிசைந்தால் பாத்திரத்தில் அதிகம் மாவு ஒட்டி வேஸ்ட் ஆகாமல் இருக்கும்
*தோசைப் பொடிக்கு மிளகாய் வற்றலை வறுக்கும் போது சிறிது உப்பு சேர்த்து வறுத்தால் மிளகாய் நெடி வீடு பூராவும் பரவாது.
*பாகற்காய், வெண்டைக்காய், சேப்பங்கிழங்கு போன்ற காய்களை வறுக்கும் போது சிறிது கார்ன்ஃபிளார் சேர்த்து வறுத்தால் மொறுமொறுப்பாக இருப்பதுடன் எண்ணெய் சிறிதும் ஒட்டாமல் இருக்கும்.
*புழுங்கல் அரிசியுடன் தக்காளி பழம் சேர்த்து அரைத்து தோசை வார்த்தால் சுவை அதிகமாக இருக்கும்.
*அரை கப் வறுத்த ரவை, மிக்ஸியில் நொறுக்கிய ரொட்டி அரை கப் இரண்டையும் கலந்து கூடவே துருவிய கேரட், புளித்த தயிர், கறிவேப்பிலை, கொத்துமல்லித் தழை நறுக்கிப் போட்டு தேவையான உப்பும் சேர்த்து இட்லியாக வார்த்து எடுத்து தேங்காய்ச் சட்னி சேர்த்து சாப்பிட பிரமாதமாக இருக்கும்.
*எலுமிச்சைச் சாறு சில துளிகள் மட்டும் தேவைப்படும் போது முழு பழத்தையும் வீணாக்காமல் ஊசியால் சிறுதுளை போட்டு வைத்தால் தேவையான அளவு சாறு பிழிந்து கொள்ளலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

குடும்பத்துடன் வாக்களித்த நடிகை ரம்யா பாண்டியன்!
தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு! மாவட்டவாரியாக விவரம்...

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 78.77% வாக்குப்பதிவு- நேரலை

மேற்குவங்க பாஜக எம்எல்ஏ கார் மீது கற்கள் வீசித் தாக்குதல்!
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


