குளிர்ச்சித் தரும் கீரைகளில் பசலைக்கீரை சிறப்பான ஒன்று. இதில் வைட்டமின் ஏ, பி மற்றும் சி என்ற உயிர்ச் சத்துகளுடன் புரதம், சுண்ணாம்பு மற்றும் இரும்புச் சத்துகளும் உள்ளன.
இந்தக் கீரையைச் சமைக்காமலேயே இதன் தளிர்களை பச்சையாகவே வாயிலிட்டு மென்று சாப்பிடலாம்.
உஷ்ணத்தினால் நீர்க்கடுப்பு, நீர்ச்சுருக்கு இருந்தாலும் போய்விடும்.
ரத்த சோகையுள்ளவர்கள் இந்தக் கீரையைத் தொடர்ந்து சாப்பிட்டு வர நோய்குணமாகும்.
ருசியின்மையைப் போக்கி, பசியை உண்டாக்கும். உணவை எளிதில் ஜீரணமடையச் செய்யும்.
பித்த சம்பந்தமான வாந்தி, கிறுகிறுப்பு போன்ற தொல்லைகளை அகற்றும். எந்த வயதினரும் இந்தக் கீரையைச் சாப்பிடலாம்.
சிறுநீர் சம்பந்தப்பட்ட தொல்லைகளை நீக்கும். நீர்த்தாரையில் கடுப்பு, எரிச்சல் இருந்தால் குணமாகும்.
சில பெண்கள் வெள்ளைப் படுதல் நோயால் அவதிப்படுவர். அவர்கள் இக்கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வரகுணமாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இந்திய யு-18 ஹாக்கி அணிகள் ஜப்பான் பயணம்

இந்தோ-பசிபிக்கில் ஸ்திரத்தன்மை, வளமை: பிரதமா் மோடி உறுதி
கரம்பயம் பகுதிகளில் நாளை மறுநாள் மின்தடை

டாஸ்மாக் பணியாளா்கள் பணிக்குத் திரும்ப தமிழக அரசு வேண்டுகோள்: காலி மதுப்புட்டிகளைத் திரும்பப் பெற மாற்று ஏற்பாடு
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



