மத்திய அமைச்சரவையில் 11 பெண் அமைச்சர்கள்!
இரண்டாம் முறையாக பிரதமராகப் பொறுப்பேற்ற மோடி, தனது அமைச்சரவையில் மிகப் பெரிய மாற்றத்தைச் செய்திருக்கிறார்.


இரண்டாம் முறையாக பிரதமராகப் பொறுப்பேற்ற மோடி, தனது அமைச்சரவையில் மிகப் பெரிய மாற்றத்தைச் செய்திருக்கிறார். அந்த வகையில், மத்திய அமைச்சர்களாகப் புதிதாகப் பதவியேற்ற 43 பேரில் இம்முறை 11 பெண்களுக்கு அமைச்சர் பதவி அளித்திருக்கிறார். ஏற்கெனவே மத்திய அமைச்சரவையில், கேபினட் அமைச்சர்களாக நிர்மலா சீதாராமன், ஸ்மிருதி இரானி, இணை அமைச்சர்களாக, சாத்வி நிரஞ்சன் ஜோதி, ரேணுகா சிங் என நான்கு பெண்கள் அமைச்சர்களாக உள்ளனர். இந்நிலையில், சமீபத்தில் மத்திய அமைச்சரவை விரிவாக்கத்தில், பாஜகவைச் சேர்ந்த மீனாட்சி லேகி, ஷோபா கரன்ட்லஜே, அனுப்பிரியா சிங் படேல், தர்ஷனா விக்ரம் ஜர்தோஷ், அன்னப்பூர்ணா தேவி, பிரதிமா பவுமிக், டாக்டர் பாரதி பிரவீன் பவார் என ஏழு பெண் அமைச்சர்கள் பதவியேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...