எண்ணெய் பாத்திரங்கள் கழுவ கஷ்டமாக உள்ளதா ஒரு அகலமான பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைத்து அதில் 1 டேபிள் ஸ்பூன் சமையல் சோடா, 2 தேக்கரண்டி பேக்கிங் பவுடர் மற்றும் 1 மூடி எலுமிச்சை சாறு அல்லது வினிகர் சேர்த்து கலந்து எண்ணெய் பாத்திரங்கள் போட்டு 2 மணி நேரம் கழித்து கழுவினால் சுலபமாக இருக்கும்.
இரும்பு வாணலியில் உள்ள துருவை நீக்க வெங்காயத்தை தோலோடு நறுக்கி சிறிது எண்ணெய் விட்டு வதக்கி இரவு முழுவதும் அப்படியே வைத்து மறுநாள் காலையில் தேய்த்து கழுவினால் துரு நீங்கி விடும்.
குருமா, சால்னா போன்ற கிரேவிகளுக்கு காரம் அதிகமாகி விட்டால் ஒரு டேபிள் ஸ்பூன் வெண்ணெய் மற்றும் 1/2 கப் காய்ச்சி ஆறவைத்த பால் சேர்த்து கொதிக்க வைத்து இறக்கவும்.
ரவா தோசைக்கு மாவு கரைக்கும் போது 2 கரண்டி தோசை மாவு சேர்த்து கரைத்தால் தோசை ருசியாக இருக்கும்.
உருளைக்கிழங்கு, சேனைக்கிழங்கு, வாழைக்காய் ரோஸ்ட் செய்யும் போது சிறிது அரிசி மாவு தூவி வறுத்தால் மொறு மொறுப்பான ரோஸ்ட் ரெடி.
வெங்காய பஜ்ஜி செய்யும் போது வெங்காயத்தை தோலோடு வட்டமாக நறுக்கி பின் தோலைப் பிரித்து கொள்ளுங்கள். வடிவம் மாறாமல் வட்டமாக இருக்கும்.
பிரியாணிக்கு தயிர் பச்சடி செய்யும் போது வெங்காயத்தை மெலிதாக அரிந்து சிறிது உப்பு கலந்து பிசறி வைக்கவும். 20 நிமிடங்களுக்கு பின் கைகளால் பிழிந்து கெட்டியான தயிரில் கலந்தால் சுவையாக இருக்கும்.
பனீர் பட்டர் மசாலா போன்ற கிரேவிக்களுக்கு ஃபிரெஷ் கீரீமுக்கு பதிலாக 2 தேக்கரண்டி மக்காச்சோள மாவை 1/4 கப் பாலில் கலந்து கடைசியில் சேர்க்கலாம்.
சாதத்திற்கு அரிசியை இரண்டு முறை கழுவிய பின் 30 நிமிடங்கள் ஊறவைத்து வேக வைத்தால் ஒட்டாமல் உதிரியாக இருக்கும். கழுவுவதற்கு முன் ஊறவைத்தால் சாதம் சீக்கிரம் குழைந்து விடும்.
ஃபரைட் ரைஸ் செய்வதற்கு வடித்த சாதத்தை அகலமான தட்டில் ஆறவைத்து ஒரு வெள்ளைத் துணியால் இரண்டு மணி நேரம் மூடி வைத்து ஆறவைத்து ஃபரைட் ரைஸ் செய்து பாருங்கள் உதிரி உதிரியாக சாதம் ஒட்டாமல் இருக்கும்.
தேங்காய் சட்னி செய்யும் போது தேங்காய்த் துருவல், 1 பச்சை மிளகாய் மற்றும் 2 தேக்கரண்டி உடைத்த முந்திரி சேர்த்து அரைத்து பாருங்கள் ஹோட்டல் சுவையில் தேங்காய் சட்னி தயார்.
அவியல் செய்யும் போது தேங்காயோடு சிறிய துண்டு ஊறவைத்த புளி சேர்த்து அரைத்தால் அவியல் சுவையாக இருக்கும்.
பருப்புகளை மிதமான சூட்டில்சிறிது நேரம் வறுத்து எடுத்து வைத்தால் புழு பூச்சி வராது.
சின்ன வெங்காயத்தை வெயிலில் உலர்த்தி எடுத்து வைத்துக் கொண்டால் முளை வராமல் நீண்ட நாள்கள் அப்படியே இருக்கும்.
பூண்டு பற்களை வெது வெதுப்பான நீரில் போட்டு பிறகு எடுத்து உரித்தால் எளிதில் உரிக்க வரும்.
பாத்ரூமில் பிடித்திருக்கும் பாசிகளை போக்க கோலமாவை போட்டு தேய்த்தால் பளிச்சென்று மாறிவிடும். மீந்து போன இட்லி மாவையும் பயன்படுத்தலாம்.
கத்திரிக்காயை வெட்டி தண்ணீரில் போடும்போது அந்த தண்ணீரில் சிறிதளவு பால் விட்டு நறுக்கி போட்டால் கத்தரிக்காய் கருக்காமல் அப்படியே இருக்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

எஃப்ஐஆர் எனப்படும் முதல் தகவல் அறிக்கை என்பது என்ன ?
பெரம்பூர் செல்லும் அரசுப் பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய்!

300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்!

ஆளுங்கட்சி மிரட்டலுக்கு அஞ்சும் இயக்கம் திமுக அல்ல: மு.க. ஸ்டாலின்
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!


