பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

மகளிர் தின கொண்டாட்டம்

ஆண்டுதோறும் மார்ச் 8-ஆம் தேதி சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

Published On :

ஆண்டுதோறும் மார்ச் 8-ஆம் தேதி சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளை உலகம் முழுவதும் உள்ள பெண்கள் கோலாகலமாகக் கொண்டாடி வருகிறார்கள்.  சாதனை படைத்த பெண்களை தேர்ந்தெடுத்து விருது வழங்கி கெளரவிக்கிறார்கள். 

மகளிர் தினம் கொண்டாடப்படுவதற்குப் பின்னால்  வரலாறும் உள்ளது. அந்த வரலாறு தான் என்ன?

1857-ஆம் ஆண்டு மார்ச் 8-இல் நியூயார்க் ஜவுளி தொழிலில் ஈடுபட்ட பெண்களின் போராட்டத்தை நினைவுபடுத்தும் விதமாக மகளிர் தினம் அனுசரிக்கப்பட்டது.

சர்வதேச மகளிர் தினமாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது  1911-ஆம் ஆண்டு மார்ச் 18-ஆம் தேதி. தெரசா மால்கீல் மற்றும் ஏர்லா சலாஜர் ஆகியோரது ஆலோசனைப்படி அமெரிக்காவின் சோசலிஸ்ட் கட்சி மகளிர் தினத்தை அறிவித்தது.

1910 -ஆம் ஆண்டில் கோபன்ஹேகனில் உழைக்கும் பெண்களின் இரண்டாவது சர்வதேச மாநாடு நடைபெற்றது. கிளாரா ஜெட்கின் (ஜெர்மனியில் சமூக ஜனநாயகக் கட்சிக்கான மகளிர் அலுவலகத்தின் தலைவர்) சர்வதேச மகளிர் தின யோசனையை முன்வைத்தார். 

ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு ஆண்டும் ஒரே நாளில் - ஒரு மகளிர் தினம் - அவர்களின் கோரிக்கைகளுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று அவர் முன்மொழிந்தார்.

17 நாடுகளைச் சேர்ந்த பெண்கள் இந்த ஆலோசனையை ஏகமனதான ஒப்புதலுடன் வரவேற்றனர். 

இதனால் மார்ச் 8-ஆம் தேதி சர்வதேச மகளிர் தினத்தை ஏற்றுக்கொண்டனர். இதையடுத்து, டென்மார்க், ஆஸ்திரியா (ஐரோப்பா), ஜெர்மனி மற்றும் சுவிட்ஸர்லாந்து ஆகிய நாடுகளில் முதன் முறையாக 1911-ஆம் ஆண்டு மார்ச் 8-ஆம் தேதி சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டது.

2011- சர்வதேச மகளிர் தினத்தின் நூற்றாண்டு விழாவைக் கண்டது.

முன்னாள் அமெரிக்க அதிபர்  பராக் ஒபாமா மார்ச் 2011 -ஆம் ஆண்டை "மகளிர் வரலாற்று மாதம்' என்று அறிவித்தார். ஒவ்வொரு ஆண்டும் உலக பெண்களை உற்சாகப்படுத்தும் விதமாக அவர்களின் சாதனைகளைக் கொண்டாடுகிறது. 

பல நாடுகளில் ஆண்கள் தங்கள் தாய்மார்கள், மனைவிகள், தோழிகள், சகாக்கள் போன்றவர்களைப் பூக்கள் மற்றும் சிறிய பரிசுகளுடன் கௌரவிக்கிறார்கள். 

பெண்களை ஆண்டுதோறும் கெளரவிக்கும் விதமாக மார்ச் 8-ஆம் தேதி கூகுள் தனது தேடுதல் இயந்திரத்தில் பெண்களுக்கு முக்கியத்துவம் ஏற்படுத்தும் வகையில் தனது கூகுள் எழுத்துகளில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தி சர்வதேச மகளிர் தினத்துக்கு மரியாதை செலுத்தி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.