பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

திருமண பந்தத்தில் இணைந்த மலாலா!

பாகிஸ்தானில் தாலிபான்களின் செல்வாக்கு  அதிகரித்து வருவது குறித்து 2008-இல் அவர்களுக்கு எதிராக, மலாலா எழுதத் தொடங்கினார்.

Published On :

பாகிஸ்தானில் தாலிபான்களின் செல்வாக்கு  அதிகரித்து வருவது குறித்து 2008-இல் அவர்களுக்கு எதிராக, மலாலா எழுதத் தொடங்கினார். பின்னர் 2012-இல் பெண்களுக்கான கல்வி குறித்து பிரசாரம் செய்யத் தொடங்கினார்.  இதனால், தாலிபானைச் சேர்ந்த ஒருவன் அவரை, சுட்டதில் கடுமையான காயம் அடைந்தார்.

அதன்பின், பாகிஸ்தான் மிலிட்டரி மருத்துவமனைக்கு விமானம் மூலம் அழைத்துச் செல்லப்பட்டவர் அங்கிருந்து இங்கிலாந்து கொண்டு செல்லப்பட்டார். அதன்பிறகு, அங்கேயே தங்கி தனது செயல்பாடுகளை தொடர்ந்து வந்தார். மீண்டும் பெண் கல்வியின் அவசியத்தையும், முக்கியத்துவத்தையும் வலியுறுத்தி விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்த  மலாலாவுக்கு,  2014-இல் நோபல் பரிசு வழங்கப்பட்டது. 

இந்நிலையில் தற்போது இல்லற வாழ்க்கையில் இணைந்துள்ளார் மலாலா.

இதுகுறித்து, மலாலா தனது ட்விட்டர் பதிவில், அசர் மாலிக் என்பவரை திருமணம் செய்து கொண்டதாகவும், இங்கிலாந்தின் பர்மிங்காமில் உள்ள இல்லத்தில் எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றதாகவும் தெரிவித்திருக்கிறார். அசர் மாலிக் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் பொது மேலாளராக பதவி வகித்தவர்.  பாகிஸ்தானில் நடத்தப்பட்டு வரும் லீக் போட்டியான பிபிஎல் அணியை நிர்வகித்து வருகிறார்.

கடந்த இரண்டு ஆண்டுகளாகவே அசர் மாலிக்கும் மலாலாவும் நண்பர்களாக பழகி வந்த நிலையில், தற்போது இருவரும் அவர்களது குடும்ப முறைப்படி திருமணம் செய்து கொண்டுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.