சப்பாத்தி உப்புமா 

சுவையான சப்பாத்தி உப்புமா..
 சப்பாத்தி உப்புமா 



தேவையானவை :
சப்பாத்தி - 6
வெங்காயம் - 2
தக்காளி - 2
பச்சை மிளகாய் - 3
மிளகாய்த் தூள் - 1 தேக்கரண்டி
பெருங்காயத்தூள் - சிறிதளவு
தேங்காய்த் துருவல் - சிறிதளவு
கொத்துமல்லி - சிறிதளவு
மஞ்சள் தூள் - சிறிதளவு
உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப
கடுகு, கறிவேப்பிலை - சிறிது

செய்முறை : சப்பாத்தியை சிறுசிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். வெங்காயம், தக்காளி, கொத்து மல்லி தழை, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர் வெங்காயம், பச்சைமிளகாய் போட்டு வதக்கவும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளியைச் சேர்த்து வதக்கவும். தக்காளி நன்றாக வதங்கியதும் மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், தேங்காய்த் துருவல், பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து வதக்கவும். அடுத்து அதில் சப்பாத்தி துண்டுகளை போட்டு 5 நிமிடம் மிதமான தீயில் வைத்து கிளறவும்.
கடைசியாக கொத்துமல்லி தழை தூவி இறக்கினால் சப்பாத்தி உப்புமா தயார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com