ஜூன் 1ம் தேதி முதல் திருத்தப்பட்ட அட்டவணைப்படி புறநகர் மின்சார ரயில்கள் இயங்கும்குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்பயிர்க்கடன் தள்ளுபடி விவகாரம்: குறைகள் பரிசீலிக்கப்பட்டு முடிவெடுக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்வைகாசி விசாகம்: திருப்பரங்குன்றம் கோயிலில் பக்தர்கள் சிலர் மயக்கம்!டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு!பஞ்சாப் உள்ளாட்சித் தேர்தல்: வாக்காளர்களுக்கு கேஜரிவால் நன்றி!தமிழகத்தில் 5 நாள்களுக்குள் பருவமழை தொடங்கும்!27 ஆண்டுகளுக்குப் பின் இன்று இரவு நிகழும் 'புளூ மைக்ரோ மூன்'ஜூன் 1 திருச்சி கிழக்கு தொகுதி மக்களைச் சந்திக்கிறார் முதல்வர் விஜய்! தவெக குதிரை பேரம்: ஆளுநருடன் அதிமுக நிர்வாகிகள் சந்திப்பு!நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி காலமானார் குதிரை பேரம்: தலைமைச் செயலகம் தவெக அலுவலகமாக மாறிவிட்டது! அக்ரி கிருஷ்ணமூர்த்திஅஜித்குமாரைத் தேற்ற என்னிடம் வார்த்தைகள் இல்லை! மு.க. ஸ்டாலின்
/

சமையலில் ருசியை அதிகரிக்க.... 

சப்பாத்தி செய்யும் பொழுது மாவுடன் கொஞ்சம் சுக்குத்தூள், ஏலக்காய்த்தூள் ஆகியவற்றை பொடித்து சேர்த்தால் மிருதுவான சுவை மிகுந்த சப்பாத்தி தயார். இவை எளிதில் ஜீரணமாகக் கூடியது ஆகும்.

News image
Updated On :13 ஏப்ரல் 2022, 12:00 am IST

சப்பாத்தி செய்யும் பொழுது மாவுடன் கொஞ்சம் சுக்குத்தூள், ஏலக்காய்த்தூள் ஆகியவற்றை பொடித்து சேர்த்தால் மிருதுவான சுவை மிகுந்த சப்பாத்தி தயார். இவை எளிதில் ஜீரணமாகக் கூடியது ஆகும்.

ஆப்ப மாவு கொண்டு ஆப்பம் சுடுவதற்கு முன்பு மாவில் ஒரு தேக்கரண்டி அளவுக்கு கோதுமை மாவு சேர்த்து கலந்தால் சீக்கிரம் ஆப்பம் காயாமல் இருக்கும்.

புதினா துவையல், கொத்துமல்லி துவையல் போன்றவற்றை செய்யும் பொழுது புளி சேர்ப்பதற்கு பதிலாக மாங்காய் துண்டுகளாக வெட்டி சேர்த்து அரைத்து பாருங்கள். சுவையும், மணமும் அட்டகாசமாக இருக்கும்.

பருப்பு சேர்த்து கீரை கடையும் பொழுது கொஞ்சம் பால் சேர்த்து கடைந்தால் ருசி கூடுதலாக இருக்கும்.

ரவா இட்லி தயாரிக்கும் பொழுது ஒரு கைப்பிடி சேமியாவை வெறும் வாணலியில் வறுத்து தயிரில் 10 நிமிடம் ஊற வைத்து கலந்து பின் அவித்து பாருங்கள், ருசி கூடுதலாக இருக்கும்.

தோசை மாவு தனியாக அரைக்கும் பொழுது அதனுடன் கொஞ்சம் வெண்டைக்காய் துண்டுகளைச் சேர்த்து அரைத்து பாருங்கள், தோசை
மிருதுவாக மெத்தென்று வரும்.

வெங்காய பக்கோடா வீட்டில் செய்யும் பொழுது அதனுடன் கொஞ்சம் சோம்பு, கறிவேப்பிலை சேர்த்தால் பக்கோடா செம டேஸ்டாகஇருக்கும்.

இட்லி, தோசைக்கு மாவு அரைக்கும் பொழுது ஒரு கைப்பிடி அளவு வேக வைத்த சாதத்தை சேர்த்து அரைத்தால் இட்லி, தோசை எதுவாக இருந்தாலும் மெத்தென்று மிருதுவாக வரும்.

சாம்பார் செய்யும் போது திடீரென தண்ணீர் அதிகம் சேர்த்து விட்டால் கொஞ்சம் பொட்டுக் கடலையை மிக்ஸியில் போட்டு அரைத்து மாவாக்கி சாம்பாருடன் சேர்த்து பாருங்கள், கெட்டியான சாம்பார் கூடுதல் ருசியுடன் தயார்.

காலிஃப்ளவர் செய்யும் பொழுது அதன் பச்சை வாசம் சிலருக்கு பிடிக்காது. இது போன்ற சமயத்தில் பால் சேர்த்து தயாரித்துப் பாருங்கள், பச்சை வாசம் நீங்கும்.

காய்கறிகள் செய்யும் பொழுது இறுதியாக சேர்ப்பதற்கு தேங்காய் இல்லை என்றால் அதற்கு பதிலாக கொஞ்சம் புழுங்கலரிசியை வாணலியில் போட்டு வறுத்து மாவாக்கிவைத்துக் கொண்டால் தேங்காய்க்கு பதிலாக சேர்க்கலாம்.

தேங்காய்ப் பால் அரைக்க நேரம் இல்லாத சமயங்களில் கொதிக்கும் தண்ணீரில் கொஞ்சம் தேங்காயை துருவி சேர்த்துக் கொள்ளுங்கள். 5 நிமிடம் கழித்துப் பாதி ஆறியதும், தேங்காயை எடுத்து பிழிந்தால் சுலபமாக தேங்காய்ப் பால் கிடைக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.