தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

சின்னத்திரை மின்னல்கள்!: பெரியதிரையில் கவனம் செலுத்தும் டிடி!

சின்னத்திரை தொகுப்பாளினிகளில் நட்சத்திர அந்தஸ்து பெற்ற ஒரு சிலரில் டிடியும் (திவ்யதர்ஷினி) ஒருவர். பல ஆண்டுகளாக ரசிகர்களின் மனதில் தனக்கென ஓர் இடத்தை தக்க வைத்துக் கொண்டவர் இவர்.

News image
Updated On :2 பிப்ரவரி 2022, 12:30 am

ஸ்ரீ

சின்னத்திரை தொகுப்பாளினிகளில் நட்சத்திர அந்தஸ்து பெற்ற ஒரு சிலரில் டிடியும் (திவ்யதர்ஷினி) ஒருவர். பல ஆண்டுகளாக ரசிகர்களின் மனதில் தனக்கென ஓர் இடத்தை தக்க வைத்துக் கொண்டவர் இவர். சமீபத்தில் வெளியான தனுஷின் "பவர்பாண்டி' படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார். அவரது கதாபாத்திரம் நல்ல வரவேற்பை பெற்றதையடுத்து தற்போது தன்கவனம் முழுவதையும் பெரியதிரை பக்கம் திருப்பியிருக்கிறார் டிடி. "பவர்பாண்டி'யைத் தொடர்ந்து, தற்போது "துருவ நட்சத்திரம்', "ஜோஸ்வா' போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் "பவர்பாண்டி'யில் நடித்தது குறித்து டிடி கூறுகையில், ""நடிகர் தனுஷ் "பவர்பாண்டி'யில் நடிக்க கேட்டபோது, "கெஸ்ட் ரோலாக இருந்தாலும் பெண்களுக்கு ஒரு மெசேஜ் சொல்லும்படியான கேரக்டர். இந்த கதாபாத்திரத்தில், மக்களுக்கு பரிச்சயமான முகமாக இருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தோம். அதனால்தான் உங்களை தேர்தெந்தெடுத்தோம் நீங்கள் நடிக்கிறீர்களா?' என்றார். அவர், சொன்ன வார்த்தைகளுக்காக, அந்தப் படத்தில் ஒரே காட்சியாக இருந்தாலும் நடித்துக் கொடுத்தேன். அவர் சொன்னது போலவே, அந்த கதாபாத்திரமும் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தது மகிழ்ச்சியாக இருக்கிறது'' என்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.