குழந்தைகள் உயரமாக வளர ?
குழந்தைகளின் உயரம் சற்று குறைவாக இருந்தால், அதற்கு அவர்கள் மரபணு மட்டும் காரணமாக இருக்காது.


குழந்தைகளின் உயரம் சற்று குறைவாக இருந்தால், அதற்கு அவர்கள் மரபணு மட்டும் காரணமாக இருக்காது. சரியான அளவில், போதுமான ஊட்டச்சத்துள்ள உணவுகளை அவர்கள் சாப்பிடாததும், உடல் இயக்கச் செயல்பாடுகளில் ஈடுபடாததும்தான் இந்தப் பிரச்னையை ஏற்படுத்தும்.
மேலும் நமது உடலில் உள்ள பிட்யூட்டரி சுரப்பிதான் உடல் உயரத்தை அதிகரிக்கும் மனித வளர்ச்சிக்கான ஹார்மோனை சுரக்கிறது. இந்த ஹார்மோன் சுரப்பைத் தூண்டவும், அதைச் சீராக வைத்திருக்கவும் சில அடிப்படையான விஷயங்களை கண்டிப்பாக நாம் பின்பற்றியே ஆக வேண்டும். அந்த வகையில் உயரமாக வளர கடைப்பிடிக்கவேண்டிய வழிமுறைகள், சாப்பிடவேண்டிய சில உணவுகளைப் பார்ப்போம்:
ஆழ்ந்த தூக்கம்
நாம் தூங்கும்போது, திசுக்கள் புதுப்பிக்கப்படுகிறது. அதோடு, உடலும் சீராக வளர்ச்சியடையும். எனவே, நாம் உயரமாக வளர, உடலுக்குப் போதிய ஓய்வு தேவை. அதிலும், நமது வயதுக்கேற்ற தூக்கம் கட்டாயம் அவசியமாகும். சிறு வயதினர் தினமும் 8-11 மணிநேரம் கட்டாயம் ஆழ்ந்த தூக்கத்தை மேற்கொண்டால், நன்கு உயரமாக வளர முடியும்.
கால்சியம் சத்துள்ள உணவுகள்
எலும்புகள் வலிமையாவதற்குத் தேவையானவை கால்சியமாகும். அதற்கு கால்சியம் நிறைந்த உணவுகளான பால்பொருள்கள், முட்டை, மீன், காளான், பச்சைநிறக் காய்கறிகளைச் சாப்பிட வேண்டும்.
தண்ணீர்
குளிர்பானங்கள், கார்போனேட்டட் பானங்கள் போன்றவற்றைத் தவிர்த்துவிட்டு, தண்ணீர் குடிக்கும் அளவை அதிகரிக்க வேண்டும். இதனால் நமது உடலின் மெட்டபாலிசம் அதிகரிக்கும். மேலும், இது நமது உடலில் இருந்து நச்சுக்களை வெளியேற்றி, எலும்புகளின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்க உதவுகிறது.
வைட்டமின் டி
வைட்டமின் டி, நமது எலும்புகளின் வளர்ச்சிக்கும் வலிமைக்கும் சத்துக்களை தரக்கூடியது. நமது உடலில் சூரியஒளி படுவதால், உடலுக்குத் தேவையான வைட்டமின் டி கிடைக்கிறது. சிறு வயதிலேயே குழந்தைகளை வெயிலில் விளையாடுவதை வழக்கமாக்கிக் கொள்ளச் செய்தால், அவர்களுக்கு வைட்டமின் டி எளிதாகக் கிடைக்கும்.
உடற்பயிற்சி
குழந்தைகள் எப்போதும் ஒரே இடத்தில் அமர்ந்து விளையாடுவதை கட்டாயம் தவிர்க்க வேண்டும். அவர்களை கட்டாயம் ஓடி, ஆடி விளையாடும் விளையாட்டுக்களில் அதிகம் ஈடுபடச் செய்ய வேண்டும். இதனால் வயதுக்கேற்ற உயரம் அவர்களுக்குக் கிடைக்கும். அதிலும் கூடைப்பந்து, ஸ்கிப்பிங், கைப்பந்து, கால்பந்து, கிரிக்கெட், டென்னிஸ், நடனம், நீச்சல் போன்றவற்றை விளையாடச் செய்யலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...