தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

கருத்தடை என்ற வார்த்தையை உருவாக்கியவர்!

19-ஆம் நூற்றாண்டில் கருத்தடை பற்றி பொது வெளியில் பேசுவது பாவமாகக் கருதப்பட்டது.

News image
Updated On :2 பிப்ரவரி 2022, 12:30 am

DIN

19-ஆம் நூற்றாண்டில் கருத்தடை பற்றி பொது வெளியில் பேசுவது பாவமாகக் கருதப்பட்டது. கருத்தடை சாதனங்களும், அவை குறித்து விளக்கும் புத்தகங்களும், மற்ற வெளியீடுகளும் ஆபாசமானவை என்று பல நாடுகளில் சட்டம் வரையறுக்கப்பட்டிருந்தது. அத்தகைய காலகட்டத்தில் பிறந்தவர் மார்கரெட் சேங்கர்.

அமெரிக்காவில் கருத்தடைக்கு ஆதரவான இயக்கத்தைத் தொடங்கினார். பெண் உடல் நலம் குறித்து முற்றிலும் உணர்ந்த வல்லுநர் என்று உலக அளவில் கருதப்பட்டார். மார்கரெட் சேங்கர்தான் கருத்தடை என்ற வார்த்தையை உருவாக்கினார்.

"திட்டமிடாத கருத்தரிப்பைத் தவிர்க்க ஒவ்வொரு பெண்ணுக்கும் உரிமை இருக்கிறது' என்று முழுக்கமிட்டார்.

கருத்தடைச் சாதனங்களைப் பற்றி வெளிப்படையாகப் பேசுவதற்கு இருந்த சட்டத் தடைகளை அகற்றுவதற்காக போராடினார். அதே நேரம் கருக்கலைப்பை அவர் ஆதரிக்கவில்லை.

1912- ஆம் ஆண்டில் செவிலியர் பணியைத் துறந்து அமெரிக்காவில் பிரபலமான "நியூயார்க்கார்' இதழில் உடற்கூறு, கருத்தடை, பாலியல் கல்வி பற்றி தொடர் கட்டுரைகளை எழுதினார். துண்டுப் பிரசுரங்களை விநியோகம் செய்தார். பெண்கள் கருத்தடை சாதனங்களை பயன்படுத்தத் தூண்டுகிறார் என்று காரணம் காட்டி அவர்மீது குற்றப்பதிவு செய்யப்பட்டது.

1916-ஆம் ஆண்டு நியூயார்க்கின் ப்ரூக்ளீன் பகுதியில் அமெரிக்காவின் முதல் கருத்தடை மருத்துவ மையத்தைத் தொடங்கினார். அதன் காரணமாக 1917-ஆம் ஆண்டு அமைதியான பொது வாழ்க்கைக்கு அச்சுறுத்தலாக இருக்கிறார் என்று குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

மார்க்ரெட் தொடர்ந்து நடத்தி வந்த சட்டப் போராட்டங்களுக்கு நல்ல பலன் கிடைத்தது. மருத்துவர்கள் கருத்தடை முறைகளைப் பற்றி நோயாளிகளுக்கு அறிவுறுத்தலாம். என்று அமெரிக்காவின் மைய நீதி மன்றம் தீர்ப்பளித்தது.

1936-ஆம் ஆண்டில் மருத்துவர்கள் கருத்தடை சாதனங்களைப் பரிந்துரைப்பதோடு அவற்றை இறக்குமதியும் செய்யலாம் என்று தீர்ப்பளித்தது. அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் கருத்தடை குறித்தும் திட்டமிடப்பட்ட பெற்றோர் பருவம் குறித்தும் பரப்புரை செய்துவந்த மார்கரெட், சீனா, கொரியா, ஐப்பான், இந்தியா போன்ற நாடுகளுக்குப் பயணம் செய்து கருத்தடை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

கருத்தடை, தாய்மையடைதல் குறித்த பல புத்தகங்களை எழுதியிருக்கிறார். மகப்பேறும் பெண்களின் உரிமை என்பது குறித்து பொதுமக்களின் கவனத்தில் நிலைபெறச் செய்த சாதனையாளர் என்ற பெருமைக்குரியவர் மார்கரெட் சேங்கர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.