வெஜிடபிள் மசாலா சாதம்
அரிசியைக் களைந்து தண்ணீரை வடிய வைக்கவும். பின்னர், வாணலியில் சிறிது நெய் விட்டு மிதமான தீயில் அரிசியை லேசாக வறுத்துக் கொள்ளவும்.


தேவையானவை:
அரிசி - 100 கிராம்
காலிஃப்ளவர் சிறியது - 1
பட்டாணி - 100 கிராம்
கேரட் - 1
பீன்ஸ் - 10
முந்திரிப் பருப்பு -4
தேங்காய் - கால் மூடி
பெரிய வெங்காயம் - 1
பச்சைமிளகாய் - 4
நெய் - 3 தேக்கரண்டி
எண்ணெய் - 3 மேசைக் கரண்டி
பாதாம் பருப்பு -4
கறிவேப்பிலை - 1ஈர்க்கு
உப்பு - தேவையான அளவு
மசாலாவுக்கு:
காய்ந்த மிளகாய் - 2
தனியா - 1 தேக்கரண்டி
பட்டை - 2 துண்டு
லவங்கம் - 2
ஏலக்காய் - 2
மராட்டி மொக்கு - 2
கொப்பரைத் துருவல் - 2 தேக்கரண்டி
மஞ்சள் துண்டு - சிறிதளவு
செய்முறை:
அரிசியைக் களைந்து தண்ணீரை வடிய வைக்கவும். பின்னர், வாணலியில் சிறிது நெய் விட்டு மிதமான தீயில் அரிசியை லேசாக வறுத்துக் கொள்ளவும். காலிஃப்ளவரை சுத்தம் செய்து உப்புத் தண்ணீரில் போட்டு வைக்கவும். வறுத்த அரிசியை ஒன்றோடொன்று ஒட்டாமல் பக்குவமாய் வேக வைக்கவும். பாதாம் பருப்பை சற்று வெந்நீரில் போட்டு தோலை அகற்றவும். தேங்காயைத் துருவி கால் டம்ளர் தண்ணீர் சேர்த்து அரைத்துப் பாலெடுத்து வடி கட்டவும். முந்திரிப் பருப்பு, பாதாம் பருப்பு இரண்டையும் மைய அரைத்துத் தேங்காய்ப் பாலில் கலந்து வைத்துக் கொள்ளவும். கேரட், வெங்காயத்தின் தோலை அகற்றி, பீன்ஸ், கேரட், வெங்காயம் காலிஃப்ளவர், பச்சை மிளகாய் முதலியவற்றை மெல்லியதாய்ச் சற்று நீளமாய்த் துண்டுகள் செய்யவும். வாணலியை அடுப்பில் போட்டு, சிறிது எண்ணெய் விட்டு காய்ந்த பின், காய்ந்த மிளகாய், தனியா, லவங்கப்பட்டை, லவங்கம், ஏலக்காய், மராட்டி மொக்கு, மஞ்சள் துண்டு முதலியவற்றை தனித்தனியாக வறுத்து தண்ணீர் சேர்க்காமல் அரைக்கவும். 6 தேக்கரண்டி எண்ணெய்விட்டு கொப்பரைத் துருவலையும் சேர்த்து அடுப்பில் வைத்துக் காய்ந்தபின் வெங்காயம், பச்சைமிளகாய், பட்டாணி, காய்கள் முதலியவற்றைப் போட்டு உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து மிருதுவாய் வதக்கி, மசாலாப் பொடி, தேங்காய்ப்பால் இரண்டையும் சேர்த்து நன்றாகக் கலந்து அடுப்பில் இருந்து இறக்கி விடவும். ஒரு பாத்திரத்தில் சாதத்தைப் போட்டு, காய்கள், நெய், கறிவேப்பிலை மூன்றையும் சேர்த்து சாதத்தை நன்றாகக் கலந்து உபயோகப்படுத்தவும்.
பிரியப்பட்டால் ஒன்றிரண்டு பூண்டுப் பருப்புகளை மசாலாவோடு சேர்த்துக் கொள்ளலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...