ஆனியன்  கோபி  பராத்தா 

காலிஃப்ளவரை  சிறிதாக  நறுக்கி,  கொதிக்கும்  தண்ணீரில்  10 நிமிடம்  போட்டு வடிகட்டி,  மிக்ஸியில் ஒரு  சுற்று சுற்றி  உதிர்த்துக் கொள்ளவும்.
ஆனியன்  கோபி  பராத்தா 

தேவையானவை:

பொடியாக நறுக்கிய வெங்காயம்  - 2 கிண்ணம்
காலிஃப்ளவர்  - 1
இஞ்சி   பூண்டு விழுது  -  2 தேக்கரண்டி
மிளகாய் தூள்  -  2 தேக்கரண்டி
கொத்துமல்லி  - சிறிது
கரம் மசாலா  - 1 தேக்கரண்டி
கோதுமை மாவு  - 2 கிண்ணம்
எண்ணெய்  -  100 கிராம்
உப்பு  -  தேவைக்கேற்ப

செய்முறை:   

காலிஃப்ளவரை  சிறிதாக  நறுக்கி,  கொதிக்கும்  தண்ணீரில்  10 நிமிடம்  போட்டு வடிகட்டி,  மிக்ஸியில் ஒரு  சுற்று சுற்றி  உதிர்த்துக் கொள்ளவும்.  அதனுடன் நறுக்கிய வெங்காயம்,  கொத்துமல்லி,  இஞ்சி  பூண்டு விழுது,  உப்பு,  கோதுமை மாவு,  கரம் மசாலா,   எண்ணெய்  2  தேக்கரண்டி  சேர்த்து  சப்பாத்தி  மாவு  போல பிசைந்து  கொள்ளவும்.  தண்ணீர்  சேர்க்கத் தேவையில்லை.

பிசைந்த  உடனேயே  சப்பாத்தி  போல் திரட்டி  தோசைக்கல்லில் எண்ணெய்விட்டு   சுட்டெடுக்கவும். சுவையான  ஆனியன்   கோபி  பராத்தா தக்காளி சட்னியுடன்  சாப்பிட  மிகவும்  சுவையாக  இருக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com