ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

ரசித்து வாழ வேண்டும்!

""என்னைப் போன்ற பெண்கள் 35 வயதில் திருமணமாகி குடும்பம், குழந்தைகள் என செட்டிலாவதைப்போல், ""நீ ஏன் உன்னுடைய வாழ்க்கையை அமைத்துக் கொள்ளக் கூடாது''

News image
Updated On :9 மார்ச் 2022, 12:30 am

பூா்ணிமா


""என்னைப் போன்ற பெண்கள் 35 வயதில் திருமணமாகி குடும்பம், குழந்தைகள் என செட்டிலாவதைப்போல், ""நீ ஏன் உன்னுடைய வாழ்க்கையை அமைத்துக் கொள்ளக் கூடாது'' என்று என்னிடம் பலர் கேட்பதுண்டு, மற்றவர்கள் வாழ்வதைப் போலவோ, எதிர்பார்ப்புகளைப் போலவோ வாழ நான் விரும்பிவில்லை என்னைப் பொருத்தவரை வாழ்க்கையை ரசித்து வாழவே விரும்புகிறேன்'' என்று கூறும் ஸ்ருதிஹாசன் தன்னுடைய கருத்துகளை பகிர்ந்து கொள்கிறார்:

""இரண்டாண்டுகள் பொது முடக்கத்திற்கு பிறகு மீண்டும் நான் படப்பிடிப்பில் கலந்து கொண்டபோது, பெரிய வித்தியாசம் ஏதும் தெரியவில்லை. அந்த இரண்டாண்டுகள் வீட்டில் முடங்கி கிடந்தாலும் ஒவ்வொரு நாளும் நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டேன். அதிகமாக ஏதும் எழுத முடியவில்லை என்றாலும், இப்போது மீண்டும் எழுதத் தொடங்கியுள்ளேன். கூடவே இசையமைப்பிலும் கவனம் செலுத்தி வருகிறேன். என்னுடைய ரசிகர்கள் விருப்பத்திற்காக நானே இசையமைத்து பாடிய பாடல்களை விரைவில் வெளியிடுவேன். என்னுடைய எண்ணங்களை வெளிப்படுத்த இசை எனக்கு உதவியாக இருக்கிறது.

பிபாசுடன் நான் நடித்துள்ள "சாலார்' பல மொழிகளில் டப்பிங் செய்து வெளியிடுவது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. ஏற்கெனவே வீட்டில் தமிழ், ஹிந்தி மொழிகளை கற்றுக் கொண்ட நான், தெலுங்கு படங்களில் நடிக்கத் தொடங்கியவுடன் தெலுங்கு மொழியை சரளமாக பேசவும் கற்றுக் கொண்டேன்.

என்னைப் பொருத்தவரை பல மொழிகள் கலந்த குடும்பச் சூழலில் வளர்ந்தது பலவித கலாசாரத்தைக் கற்றுக் கொள்ள உதவியது என்றே சொல்லலாம்.

சிறுவயது முதலே தியேட்டருக்குச் சென்று படம் பார்ப்பது எனக்கு மிகவும் பிடிக்கும். அந்த அனுபவமே தனி. இப்போது ஓடிடியில் படங்கள் வெளிவரத் தொடங்கிவிட்டன.

படங்கள் மட்டுமின்றி தொடர்களும் வருகின்றன. தியேட்டரில் பார்ப்பதற்கென்றே சில படங்கள் எடுக்கப்படுகின்றன. அதுபோன்ற படங்களை வீட்டில் உட்கார்ந்து பார்க்க நான் விரும்புவதில்லை.

பனிரெண்டு ஆண்டுகளுக்கு முன் நடிக்க வந்தபோது, நான் பேசும் ஆங்கிலம் தமிழ் உச்சரிப்பைப் போல் இருக்கிறதே? தென்னிந்திய பெண்களிடமிருந்து உங்கள் நிறம் வித்தியாசமாக இருக்கிறதே என்று ஹிந்தி திரையுலகில் பலர் என்னிடம் கேட்டதுண்டு.

இதனால் அவர்கள் என்னைத் தென்னிந்தியப் பெண் என்று ஒதுக்கியதில்லை. திரையுலகில் எனக்கென்று ஓர் இடம் வேண்டுமென்று நினைத்தேன் அது நிறைவேறிவிட்டது. அதனால் தான் பல மொழி படங்களில் என்னால் தொடர்ந்து நடிக்க முடிகிறது. ஆனால் படங்களில் ஒரே மாதிரியாக காதல் காட்சிகளில் நடிப்பது, அழுவது என்றில்லாமல் வித்தியாசமான பாத்திரங்களில் நடிக்க விரும்புகிறேன். கதாநாயகர்களைப் போல் ஆக்ஷன் காட்சிகளிலும், காமெடி பாத்திரங்களிலும் நடிக்க வேண்டுமென்ற ஆசை இருக்கிறது.

பல நூற்றாண்டுகளாகவே எல்லா நாடுகளிலும் ஒவ்வொரு சமூகத்திலும் பெண்களைப் பற்றி பலவிதமான கருத்துகள் உள்ளன. நான் ஏன்திருமணம் செய்து கொள்ளவில்லை என்பதற்கு பதில் சொல்லவோ, நியாயப்படுத்தவோ விரும்பவில்லை. இதுபற்றி யாரிடமும் ஏன் சொல்ல விரும்பவில்லை என்று எனக்கு தெரியவில்லை. நம்முடைய சமூகம் அப்படி மற்றவர்கள் வாழும் வாழ்க்கையை போலவோ, எதிர்பார்ப்புகளைப் போலவோ வாழ விரும்பியதும் இல்லை. மற்றவர்கள் எண்ணத்தில் நான் பெண்ணாக இல்லையென்றாலும், என்னைப் பொருத்தவரை நான் ஒரு பெண் என்பதில் உறுதியாக இருக்கிறேன்.

என்னுடைய வாழ்க்கை 30 வயதில் தான் தொடங்கியது. அப்போது முதல் எனக்கென்று சில கருத்துகள் மனதில் அடங்கிக்கிடக்கின்றன. என்னை நானே புரிந்து கொண்டு, உண்மையான சந்திப்பின் மூலம் கிடைக்கும் உறவையே விரும்புகிறேன். அதுவரை வாழ்க்கையில் ஒவ்வொரு விநாடியையும் ரசித்து வாழ விரும்புகிறேன்'' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.