கெட்டித் தயிர் அதிகம் புளிக்கிறதா?

கெட்டித் தயிர் அதிகம் புளிக்கிறதா? அதனுடன் இரண்டு கப் தண்ணீர் சேர்க்கவும். கால் மணி நேரம் கழித்து மேலே தேங்கியுள்ள தண்ணீரை நீக்கவும். இப்போது தயிரை குடித்தால் புளிப்பு இன்றி சுவையாக இருக்கும்.
கெட்டித் தயிர் அதிகம் புளிக்கிறதா?

கெட்டித் தயிர் அதிகம் புளிக்கிறதா? அதனுடன் இரண்டு கப் தண்ணீர் சேர்க்கவும். கால் மணி நேரம் கழித்து மேலே தேங்கியுள்ள தண்ணீரை நீக்கவும். இப்போது தயிரை குடித்தால் புளிப்பு இன்றி சுவையாக இருக்கும்.

தேங்காய் இல்லாத சமயத்தில் சர்க்கரை வள்ளிக்கிழங்கை கரகரப்பாக அரைத்து குருமாவில் சேர்த்து சமைத்தால் குருமா புதுமையான  சுவையுடன் இருக்கும்.

இளநீரை ஊற்றி தயிர் சாதம் செய்தால் தயிர் சாதம் கூடுதல் சுவையாக  இருக்கும்.

சமைக்கும் எண்ணெய்யில் இரண்டு மூன்று மிளகாய் வற்றலைப் போட்டு வைத்தால் காறல் வாடை வராது.

வேக வைத்த வெள்ளைக் கடலையை பாகற்காய் பிட்லையில் சேர்த்து கொதிக்க விட்டு இறக்கினால் பிட்லை தனி மணத்துடன் இருக்கும்.

தோசை மாவு  தேவையைவிட குறைவாக இருந்தால் அரிசிமாவு, தேங்காய், சிறிதளவு சர்க்கரை சேர்த்து தண்ணீர் விட்டுக் கரைத்து அப்பம் போல வார்க்கலாம்.

கீரையை மசியல்  செய்யும் போது சாதம் வடித்த கஞ்சியைச் சிறிது விட்டு மசித்தால் நன்கு குழைவாக மசியும். அதன் ருசியும் அருமையாக இருக்கும்.

பச்சை மிளகாய் பழுக்காமலிருக்க அதனுடன் ஒரு சிட்டிகை மஞ்சள் பொடி போட்டு வைக்கலாம்.

தக்காளி சூப் நீர்த்துப் போனால் உருளைக்கிழங்கு ஒன்றை வேகவைத்து மசித்து சூப்பில் சேர்த்தால் சூப் திக்காகவும், டேஸ்டாகவும் இருக்கும்.

பிரெட் மீந்து விட்டதென்றால் அதனை மிக்ஸியில் இட்டுப்பொடியாக்கி உப்பு, காரம், கரம் மசாலா, கொத்துமல்லித் தழை, வெங்காயம் சேர்ந்து பிசைந்து கட்லெட்டாக எண்ணெய்யில் பொரித்தெடுக்கலாம்.

மீதமான  தேங்காய் சட்னியை கெட்டியான  புளிப்பு மோரில் சேர்த்து ஒரு கொதி விட்டால் சுவையான மோர்க்குழம்பு  ரெடி.

நறுக்கிய ஆப்பிள், பேரிக்காயை உப்புத் தண்ணீரில் போட்டு வைத்தால் கருக்காது.

முருங்கைக் கீரையையும், வாழைப்பூவை சம அளவு சேர்த்து பூண்டு, மிளகாய், உப்பு சேர்த்து பொரியல் செய்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.

கொள்ளு, காராமணி,  மூக்கடலை வேக வைத்த நீரைக் கொட்டாதீர்கள். அதை வைத்து அருமையான சூப் செய்யலாம்.

கடலைப் பருப்பை ஊறவைத்து உதிர்த்து அதை. வழக்கமாக செய்யும் பாகற்காய் பொரியலில் சேர்த்துக் கிளறினால் பாகற்காயின் கசப்பு குறைந்து விடும்.

உருளைக்கிழங்கை வேகவைத்து மசித்து சிறிதளவு காரத்தூள் , உப்பு சேர்த்து வடை போல தட்டி இட்லிமாவில் நடுவில் வைத்து வேக வைத்து எடுத்தால் "வடா பாவ் " போல இருக்கும்.

அடைக்கு அரைக்கும்போது பரங்கிப்பிஞ்சு சேர்த்து அரைத்தால் அடை பஞ்சு போல் மெத்தென்று இருக்கும்.

கேரட், பீட்ரூட், சம அளவு எடுத்து விழுதாக அரைத்து நெய் சேர்த்து வெல்லத்துடன் அல்வா கிளற இரும்பு சத்தும், வைட்டமின்களும் நிறைந்த அல்வா தயார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com