சமையல் குறிப்புகள்

ரவா தோசை செய்யும்போது, ரவையை நன்றாக வறுத்து பிறகு ஊற வைத்து சிறிது மைதா மாவுடன் கலந்து மற்ற பொருள்களையும் சேர்த்து தோசை வார்த்தால் பட்டுப் போல எடுக்க வரும்.
சமையல் குறிப்புகள்


ரவா தோசை செய்யும்போது, ரவையை நன்றாக வறுத்து பிறகு ஊற வைத்து சிறிது மைதா மாவுடன் கலந்து மற்ற பொருள்களையும் சேர்த்து தோசை வார்த்தால் பட்டுப் போல எடுக்க வரும்.

கறிவேப்பிலை துவையலுக்கு உளுத்தம் பருப்புக்குப் பதில் வேர்க்கடலையை வறுத்துப் போட்டால் துவையல் சிறப்பாக இருக்கும்.

 பருப்புப் பொடி அரைக்கும்போது இரண்டு தேக்கரண்டி ஓமம் சேர்த்து அரைத்தால் மணமாக இருக்கும்.

எலுமிச்சை ஊறுகாயுடன் சிறிது வதக்கிய இஞ்சித் துண்டுகள் சேர்த்து கொண்டால், ருசியாக இருக்கும்.

தோசை மெல்லியதாக நன்றாக வர வேண்டும் என்றால் சிறிதளவு ஜவ்வரிசி சேர்த்து அரைத்தால் பளபளவென்று மெல்லிய தோசை வரும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com