தக்காளி, காலிஃபிளவர் போன்ற காய்கறிகளில் சிறு பூச்சிகள் இருக்கும். அவைகளை உப்பு கலந்த தண்ணீருக்குள் சிறிது நேரம் போட்டு வைத்துவிட்டு, அதன்பின்னர் சமையலுக்குப் பயன்படுத்த வேண்டும்.
காரட், பீட்ரூட் வாடி போனால், அவற்றை நறுக்குவது கடினம். உப்பு கலந்த நீரில் சிறிது நேரம் போட்டுவைத்தால், புதியது போல் ஆகி
விடும். வெட்டவும் எளிதாகிவிடும்.
மாவடு நீண்ட நாள்கள் கெடாமல் இருக்க, மாவடு ஊறுகாயில் சிறிதளவு விளக்கெண்ணெய் விட்டால் பூச்சிகள் வராமல் இருக்கும். நீண்ட நாள்கள் கெட்டுப் போகாமல் இருக்கும்.
கோதுமையை லேசாக வறுத்து மாவாக அரைத்து, காற்று புகாத ஒரு டப்பாவில் வைத்தால், அதிக நாள்கள் கெட்டுப் போகாது.
பூண்டு கெட்டுப் போகாமல் இருக்க, கொஞ்சம் கேழ்வரகை சேர்த்து வைத்தால் நீண்ட நாள்கள் சுருங்காமலேயே இருக்கும்.
சலித்த சப்பாத்தி மாவுக் கட்டிகளை வீணாக்காமல் அடைமாவில் கலந்து அடை தயாரிக்க, அது சுவையாக இருக்கும்.
கூட்டு, குழம்பு ஆகியவற்றுக்கு அரிசி மாவைக் கரைத்து விடுவதற்குப் பதில், பொட்டுக் கடலை மாவைச்சேர்த்துவிட சீக்கிரம் கெடாது.
உளுந்து வடைக்கு மாவு அரைக்கும்போது, சிறிதளவு துவரம் பருப்பை சேர்த்து அரைக்க வேண்டும். இப்போது வடை தயாரித்தால் மெதுவாக இருக்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இந்திய யு-18 ஹாக்கி அணிகள் ஜப்பான் பயணம்

இந்தோ-பசிபிக்கில் ஸ்திரத்தன்மை, வளமை: பிரதமா் மோடி உறுதி
கரம்பயம் பகுதிகளில் நாளை மறுநாள் மின்தடை

டாஸ்மாக் பணியாளா்கள் பணிக்குத் திரும்ப தமிழக அரசு வேண்டுகோள்: காலி மதுப்புட்டிகளைத் திரும்பப் பெற மாற்று ஏற்பாடு
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



