உலகின் உயரமான சிகரமான எவரெஸ்ட்டின் அடிவார முகாமை அடைந்திருக்கிறார் சிறுமி பிரிஷா. மிக இளம் வயதில் அதாவது 5 அரை வயதில் இந்த சாதனைக்கு சொந்த்காரர் ஆகியிருக்கிறார்.
எவரெஸ்ட்டின் அடிவார முகாம் தானே என்று சாதாரணமாக நினைத்து விட வேண்டாம். இது கடல் மட்டத்தில் இருந்து 17 ஆயிரத்து 598 அடி உயரத்தில் இருக்கிறது. பயிற்சி பெற்ற மலையேற்ற வீரர்களே இதை எட்டுவதற்கு சிரமப்படுகிறார்கள். பிரிஷா இந்த உயரத்தை எட்டி பிரமிப்பூட்டி இருக்கிறார். பிரிஷாவின் பூர்வீகம் மத்திய பிரதேச மாநிலம் பேதுல் மாவட்டம் என்றாலும் மாராட்டிய மாநிலத்தில் தனது பெற்றோருடன் இரண்டு சகோதரிகளுடன் வசிக்கிறார். இவரது தந்தை லோகேஷ் ஒரு மலையேற்ற வீரரும் கூட. அப்பா வழியில் மகள் பிரிஷாவுக்கும் மலையேற்றத்தில் ஆர்வம் பிறந்திருக்கிறது.
பிரிஷாவுக்கு தந்தையும், தாய் சீமாவும் மலையேற்றத்துக்கான முறையான பயிற்சியை வழங்கியிருக்கிறார்கள். எவரெஸ்ட் அடிவார முகாமமை எட்டும் கடிமான முயற்சிக்கான பயிற்சியையும் பெற்றோரின் வழிகாட்டலில் பிரிஷா தொடங்கினார். தினமும் 5,6 மைல் தூரம் தனது அடுக்குமாடி குடியிருப்பு படிகள், பூங்கா சுவரிலி ஏறுவது என்று தயாரானார். கடந்த மே 24ஆம் தேதி நேபாளத்தின் லுக்லாவில் இருந்து தனது தந்தையுடன் மலையேற்றத்தை தொடங்கிய பிரிஷா, ஜூன் மாதம் 1ஆம் தேதி எவரெஸ்ட் அடிவார முகாமை அடைந்தார். அங்கு இந்திய தேசிய கொடியுடன் பெருமிதத்தோடு போஸ் கொடுத்தார் பிரிஷா.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஓடிடியில் வெளியாகும் பிளாக்பஸ்டர் காமெடி, ஹாரர் திரைப்படம்!
பெத்தியில் நடனமாட ஸ்ருதி ஹாசனுக்கு ரூ. 3 கோடி சம்பளம்?

மே 5-ல் இந்தியா வருகிறார் வியத்நாம் அதிபர்!

டேவிட் வார்னர் - ஷிகர் தவான் சாதனையை சமன் செய்த டிராவிஸ் ஹெட் - அபிஷேக் சர்மா இணை!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


