தாமரை விதை கறி
வாணலியை அடுப்பில் வைத்து, சூடானதும் வெண்ணெய் போட்டு கரைந்தவுடன் அதில் தாமரை விதைகளைச் சேர்த்து லேசாக நிறம் மாறும் வரை வதக்கவும்.


தாமரை விதைகள் 50 கிராம்
வெண்ணெய் தேவையான அளவு
பட்டை 1
கிராம்பு 3
ஏலக்காய் 2
சீரகம் ஒரு தேக்கரண்டி
சோம்பு ஒரு தேக்கரண்டி
இஞ்சி சிறு துண்டு
பூண்டு ஐந்து பற்கள்
பச்சை மிளகாய் 2
முந்திரி பருப்பு 10
தக்காளி 2
மஞ்சள் தூள் கால் தேக்கரண்டி
மிளகாய்த்தூள் 2 தேக்கரண்டி
உப்பு தேவையான அளவு
பெரிய வெங்காயம் 3
பிரஷ் கிரீம் தேவையான அளவு
கரம் மசாலாத்தூள் 1/2 தேக்கரண்டி
நறுக்கிய மல்லி தழை சிறிதளவு
செய்முறை:
வாணலியை அடுப்பில் வைத்து, சூடானதும் வெண்ணெய் போட்டு கரைந்தவுடன் அதில் தாமரை விதைகளைச் சேர்த்து லேசாக நிறம் மாறும் வரை வதக்கவும். வாணலியில் ஒரு தேக்கரண்டி அளவுக்கு மீண்டும் வெண்ணெய் சேர்த்து, அதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய், சீரகம், சோம்பு போட்டு வதக்கவும்.
வறுபட்டதும் இஞ்சி, பூண்டு பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி , முந்திரி பருப்புகளை சேர்த்து வதக்கவும். பொடிப்பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து நன்கு மசித்து , மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு போட்டு பச்சை வாசம் போக வதக்கி, ஆறியபின், மிக்ஸியில் போட்டு நைசாக பேஸ்ட் போல அரைத்து எடுக்கவும்.
வேறொரு வாணலியை அடுப்பில் வைத்து வெண்ணெயை போட்டு, கரம் மசாலா சேர்த்து லேசாக வதக்கி, வெங்காயத்தை சேர்த்து வதக்குங்கள். வெங்காயத்தை வதக்கி, அரைத்து வைத்துள்ள விழுதை சேர்த்து ஒரு கிண்ணம் தண்ணீர் விட்டு நன்கு கொதிக்க விடவும். இவை நன்கு கொதிக்க ஆரம்பிக்கும் பொழுது வறுத்த தாமரை விதைகளை சேர்த்து பிரட்டவும். பின்னர் அடுப்பை அணைத்து பிரஷ் கிரீம் மேலே ஊற்றி, நறுக்கிய கொத்தமல்லி தழை தூவவும். தாமரை விதை கறி ரெடி!
தாமரை விதைகளில் இருக்கக்கூடிய மெக்னீசியம் ரத்த ஓட்டத்தை சீர் செய்து இதய நோய்களிலிருந்து பாதுகாக்கிறது. இதில் பொட்டாசியம் மற்றும் சோடியமும் உள்ளன. இதனால் ரத்த அழுத்தம் சீராகி ஆரோக்கியம் காக்க உதவுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...