சமையல் சமையல்

சமையல் சமையல்

கம்பு உருண்டை
தேவையான பொருள்கள்:
கம்பு- 1 கிண்ணம்
பாகு வெல்லம்- ஒன்றரை கிண்ணம்
தேங்காய்த் துருவல்- 2 மேசைக் கரண்டி
செய்முறை: கம்பை நன்றாக சுத்தம் செய்துகொள்ளவும். வாணலியை அடுப்பில் வைத்து அதில் சுத்தம் செய்த கம்பை கொஞ்சம், கொஞ்சமாகப் போட்டு மணம் வரும்வரை வறுக்கவும். பின்னர் ஆற விடவும். ஆறியதும் மிக்ஸியில் பொடித்து, அதில் தேங்காய், வெல்லம் சேர்த்து மேலும் சிறிது ஓடவிட்டு பின்னர் உருண்டை பிடிக்கவும். இந்த உருண்டைக்கு  பாகு வெல்லத்தைப் பயன்படுத்துவது சிறந்தது.

கம்பு - வெந்தய வடை
தேவையான பொருள்கள்:
கம்பு மாவு- 1 கிண்ணம்
வெந்தயக் கீரை- அரை கிண்ணம்
பச்சை மிளகாய், மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
கரம் மசாலாத் தூள்- கால் தேக்கரண்டி
மஞ்சள் தூள்- அரை தேக்கரண்டி
தயில்- அரை தேக்கரண்டி
உப்பு, எண்ணெய்- தேவையான அளவு
செய்முறை: பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி, தேவையான அளவு எடுத்துகொள்ளவும். வெந்தயக் கீரையை சுத்தம் செய்து அலசி பொடியாக நறுக்கி வைக்கவும். இதனுடன் மேலே கொடுத்துள்ள பொருள்களை (எண்ணெய் தவிர) சேர்த்து, தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் தெளித்து மிருதுவான உருண்டை மாவாகப் பிசைந்து கொள்ளவும். பிசைந்த மாவை சிறிய உருண்டைகளாக உருட்டி வைத்துகொள்ளவும். வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய்விட்டு காய்ந்தவுடன் எண்ணெயில் உருட்டி வைத்த உருண்டைகளை வடைபோல் தட்டிப் போட்டு பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும்.

கம்பு புட்டு
தேவையான பொருள்கள்:
கம்பு மாவு- 1 கிண்ணம்
உப்பு, சர்க்கரை, தேங்காய்த் துருவல்-தேவையான அளவு
செய்முறை: வாணலியை அடுப்பில் வைத்து அதில் கம்பு மாவை போட்டு நன்கு வதக்கவும். அதில், தேவையான அளவு உப்பு, தண்ணீர் சேர்த்து நன்கு கிளறவும். பின்னர், அதை புட்டுக் குழாயில் வைத்து, சுட்டு எடுக்கவும். அதில், தேங்காய்த் துருவல், தேவையான சர்க்கரை சேர்த்து உண்ணலாம்.
 

-ஜி.மஞ்சரி, கிருஷ்ணகிரி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com