
கீழாநெல்லி தைலத்தை பூசி குளிக்கத் தலைச்சுற்றல் குணமாகும்.
கொன்றைப் பூக்களை அரைத்து மோரில் சாப்பிட சர்க்கரை நோய் குணமாகும்.
கோவைக்காய்களைத் தொடர்ந்து பயன்படுத்த சர்க்கரை நோய் கட்டுப்படும்.
சங்கிலை வேர்ப்பட்டை அரைத்து வெந்நீரில் குளிக்க பக்கவாதம் குணமாகும்.
சந்தனக்கட்டையை எலுமிச்சைச் சாறில் உரைத்து முகத்தில் பூசி வர வசீகரம் உண்டாகும்.
காட்டாமணக்கு குச்சியில் பல் துலக்க பல் ஆட்டம் காண்பது நின்றுவிடும்.
தூதுவளையை அடிக்கடி உணவில் சேர்க்க கண் ஒளி பெறும்.
சுரைக்காய் அடிக்கடி சாப்பிட்டு வர தொப்பை குறையும்.
முள்ளங்கிச் சாற்றை சாப்பிட ஜலதோஷம் குணமாகும்.
சப்போட்டா பழங்களைத் தினமும் சாப்பிட்டு வர தூக்கம் நன்றாக வரும்.
உப்புநீர் தொண்டை வரை படும்படி வாய் கொப்பளிக்க வேண்டும்.
பாதாம் பருப்பை வறுத்து சாப்பிட்டு வர கண்பார்வை தெளிவு பெறும்.
ஏ.மூர்த்தி, திருவள்ளூர்.