வெந்தயக் கீரை சப்பாத்தி

கோதுமை மாவு, கடலை மாவு, சோள மாவு ஆகிய மூன்றையும் ஒன்றாகச் சேர்க்கவும். வெந்தயக் கீரையை நன்கு சுத்தம் செய்து பொடியாக வெட்ட வேண்டும்.
வெந்தயக் கீரை சப்பாத்தி
Updated on
1 min read

தேவையான அளவு

கோதுமை மாவு 100 கிராம்

கடலை மாவு, சோள மாவு தலா 1 மேசைக்கரண்டி

வெந்தயக் கீரை 1 கட்டு

மிளகாய் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா, சீரகம் தலா 1 தேக்கரண்டி

பெரிய வெங்காயம் 1

எண்ணெய், உப்பு தேவையான அளவு

செய்முறை:

கோதுமை மாவு, கடலை மாவு, சோள மாவு ஆகிய மூன்றையும் ஒன்றாகச் சேர்க்கவும். வெந்தயக் கீரையை நன்கு சுத்தம் செய்து பொடியாக வெட்ட வேண்டும். வெங்காயத்தைப் பொடியாக வெட்ட வேண்டும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி, சீரகம் தாளித்து வெங்காயம், வெந்தயக் கீரையை வதக்க வேண்டும். ஒரு அகலமான பாத்திரத்தில் சேர்த்து வைத்த மாவில் வதக்கிய வெங்காயம், கீரை, மிளகாய் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா தூள், உப்பு சேர்த்து பிசைய வேண்டும். பிசைந்த மாவை சப்பாத்தியாக இட்டு தோசைக் கல்லில் எண்ணெய்விட்டு சுட்டு எடுக்கவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com