செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!மாநிலங்களவை துணைத் தலைவராக போட்டியின்றி ஹரிவன்ஷ் நாராயண் தேர்வு! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்
/

சுரைக்காய் கீர்

துருவிய சுரைக்காயை பத்து நிமிடங்கள் அப்படியே வைத்திருந்து, தண்ணீரை வடிக்கவும்.

News image
Updated On :31 ஆகஸ்ட் 2024, 6:30 pm

தேவையான பொருள்கள்

துருவிய சுரைக்காய் ஒரு கிண்ணம்

பால் ஒரு லிட்டர்

சர்க்கரை ஒன்றரை கிண்ணம்

நெய் 2 மேசைக்கரண்டி

முந்திரி, திராட்சை தேவையான அளவு

பாதாம் பவுடர் ஒரு மேசைக்கரண்டி

(விருப்பப்பட்டால்) பாதாம் எசன்ஸ் 2 சொட்டு.

செய்முறை: 

துருவிய சுரைக்காயை பத்து நிமிடங்கள் அப்படியே வைத்திருந்து, தண்ணீரை வடிக்கவும். பாலைக் காய்ச்சி, அதனுடன் சுரைக்காய்த் துருவலைச் சேர்த்து வேகவிடவும். பிறகு சர்க்கரை சேர்க்கவும். பாதாம் பவுடர் சேர்த்துக் கலக்கவும். முந்திரி, திராட்சையை நெய்யில் வறுத்து சேர்க்கவும். விருப்பப்பட்டால், இறக்குவதற்கு முன் பாதாம் எசன்ஸ் சேர்க்கலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.